தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 09, 2015

காவல் துறையின் நகைச்சுவை உணர்வு!மடிக் கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த ‘சொறி’முத்து திடீரென்று சிரிக்கத் தொடங் கினான்.வெடிச் சிரிப்பு;அடக்க முடியாத சிரிப்பு.

அதைப் பார்த்த பிச்சுவா பாபு கேட்டான்”ஏண்டா இப்படிச் சிரிக்கிறே”

முத்து சிரிப்பை அடக்காமலே சொன்னான்”அண்ணே .காவல் துறையின் முகநூல் பக்கத்தில் உங்களைப் பத்திப் போட்டிருக்காங்க.உங்க புகைப்படம் வேறு வெளியிட்டிருக்காங்க”.மேலே பேச இயலாமல் சிரிக்கத் தொடங்கினான்.

பாபு சினந்து சொன்னான்”டேய்.என்னன்னு சொல்லு.பிறகு சிரி.”

முத்து சொன்னான்”உங்க புகைப்படத்தைப் பார்த்துதான் சிரித்தேன்.எங்கிருந்து கிடைத்ததோ அவர்களுக்கு இந்தப் படம்.பார்த்தா சிரிப்பை அடக்க முடியலே அண்ணே.நீங்களே பாருங்க” என்று கணினியை பாபுவிடம் கொடுத்தான்.

பாபு அதை வாங்கிப் பார்த்தான்.முதலில் அவனுக்கும் சிரிப்பே வந்தது.பின் எரிச்சல் ஏற்பட்டது.  தன்னைக் கேவலப்படுத்தவே இப்படி ஒரு படத்தைப் போட்டிருக்கிறார்களோ என நினைத்தான் ”பிணையத்தில் விடுவிக்கப் பட்ட இந்த பாபு தலை மறைவாகி விட்டான்.யாராவது பார்த்தால் காவல் துறைக்குத் தகவல் தரவும்”இதுதான் அப்படத்துடன் இருந்த செய்தி

ஒரு முடிவுக்கு வந்தான்.அத்தகவலின் கீழ் கருத்துப் பெட்டியில் எழுதினான்”உங்களுக்கு ஒரு நல்ல படம் கிடைக்கவில்லையா. வேண்டும் என்றால் நான் ஒரு நல்ல அழகான படம் எடுத்து அனுப்புகிறேன்!”

சில நொடிகளில் அந்தக் கருத்துக்கு மறு மொழி வந்தது.”நீ காவல் நிலையத்துக்கு வந்தால் நாங்களே நல்ல படம் எடுப்போம்?எப்போது வருகிறாய்?”

பாபு சிரித்தான்,காவல் துறைக்கும் நகைச்சுவை உணர்வு உள்ளது என நினைத்தான்

மீண்டும் தட்டினான்”விரைவில் வருவேன் சரியான வழக்கறிஞர் ஒருவரோடு!”

எப்படி இந்த பூனை எலி விளையாட்டு?

(கதையல்ல உண்மை நிகழ்வு)

தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒரு விளம்பரம் என்னைக் கவர்ந்தது.

ஓர் ஆணும் பெண்ணும் நன்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.அப்போது ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை ,கதை சொல்லும்.பின்புலத்தில் கேள்வி”இது நட்பா காதலா”
பின் அவர்கள் சேர்ந்து செல்கையில் கைகள் உரசிக்கொள்ளும்.அவன் வருந்துகிறேன் என்று சொன்னதும்,அவள் அவன் பக்கம்  ஒரு துள்ளலுடன் திரும்பி தன் கையை அவன் பற்றத் தருவாள்

அந்தத் துள்ளல் அவள் உள்ளத்தை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.

இது எனக்குப் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள்

”இது நட்பா காதலா”என்பது என் பழைய பதிவொன்றின் தலைப்பு!

விளம்பரம் இயல்பாகவும் இளமைத் துள்ளலுடனும் உள்ளது

இளைஞர்களுக்குப் பிடிக்காமல் இருக்குமா?

14 கருத்துகள்:

 1. எலி பூனை விளையாட்டு நகைச்சுவையாக இருக்கிறது.

  தொலைகாட்சி பார்க்க இயலாது ஆகையால் விளம்பரம் பார்க்கவில்லை....

  தம 2

  பதிலளிநீக்கு
 2. ஹா... ஹா... நல்ல விளையாட்டு... மாட்டுவது...?

  விளம்பரம் பார்த்ததில்லை ஐயா...!

  பதிலளிநீக்கு
 3. இந்த விளம்பரம் நான் பார்க்கவில்லையே...

  தமிழ் மணம் ரேங்க்குக்கு போட்டி போல..

  வாழ்த்துக்கள்.

  God Bless You

  பதிலளிநீக்கு
 4. கள்வன் - காவலர் விளையாட்டை கண்ணுற்று மகிழ்ச்சியில் திளைத்தேன்!
  மறுமொழியினை புகழ் மலராய் பின்னூட்டதில் தொடுத்தேன்!
  நன்றி அய்யா!
  த ம 4
  ( தனித் தமிழ் மறுமொழி)
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. நானும் இந்த விளம்பரம் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 6. நல்ல நகைச்சுவை
  எந்த விளம்பரம் என்று சொல்லவில்லையே

  பதிலளிநீக்கு
 7. காவல் துறையின் நகைச்சுவை உணர்வு பற்றிய நிகழ்வை பகிர்ந்து எங்களையும் சிரிக்க வைத்தமைக்கு நன்றி!
  காவலர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையென்று யார் சொன்னது. நாளிதைழைப் பார்த்தால் இன்னும் அநேக நகைச்சுவை தகவல்கள் வெளிப்படும்.

  நீங்கள் குறிப்பிடும் விளம்பரத்தை இன்னும் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 8. நல்ல நகைச்சவை கலந்த பதிவு. எனது தளத்திற்கு வந்து கேரட் ஜூஸ் ருசிக்க வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. போலிஸிடமே விளையாடும் கைதியின் நகைச்சுவை சிந்திக்க வைக்கிறது! விளம்பரம் பார்க்கவில்லை! உங்கள் விவரிப்பு நன்றாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 10. திருடன் - போலீஸ் விளையாட்டு - ஹா..ஹா....

  விளம்பரம் எதற்கு என்று சொன்னால் பார்க்கிறேன்! இது வரை பார்த்ததா தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. கள்ளன் போலீஸ் - கள்ளாட்டம்?

  அந்த விளம்பரம் பார்த்ததே இல்லையே ஐயா! எதற்கு வருகிறது என்று சொல்லுங்களேன்...பார்க்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 12. கள்ளன் போலீஸ் - கள்ளாட்டம்?

  அந்த விளம்பரம் பார்த்ததே இல்லையே ஐயா! எதற்கு வருகிறது என்று சொல்லுங்களேன்...பார்க்கின்றோம்...

  பதிலளிநீக்கு