தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 19, 2015

தாய்மையைப் போற்றுவோம்!

 நான் பிறந்தவுடன் என்னை அன்புடன் அணைத்த கைகள்
நான் நடக்க முதல் அடி எடுக்கையில் வழி நடத்திய கைகள்
நான் கீழே விழுந்து அழுகையில் கண்ணீர் துடைத்த கைகள்
நான் இருக்கிறேன் உனக்கு என்ற உறுதி தந்த கைகள்

அகப்படாமல் ஓடிய என்னைப் பிடித்திழுத்து குளிப்பாட்டிய கைகள்
அடங்காத என் தலை முடியை எண்ணையிட்டுப் படிய வாரிய கைகள்
அடுத்தவர் கண் பட்டதோ என அடிக்கடி திருட்டி கழித்த கைகள்
அடிக்க நேர்ந்தாலும்  நோகாமல் அடித்துப் பின் கண்ணீரை மறைத்த கைகள்

தனக்குப் பிடிக்காதெனினும் எனக்குப் பிடித்த உணவைச் சமைத்த கைகள்
கண் விழித்துப் படிப்பதற்கு சூடான தேநீர்  தயாரித்து அளித்த கைகள்.
படிப்பில் சிறக்கும்போது  மகிழ்ந்து பாராட்டித் தட்டிய கைகள்
எந்த வேலையும் நான் செய்ய விடாமல் தானே உழைத்த கைகள்

எத்தனையோ சொல்லலாம் இன்னும்,எண்ணிலடங்காதவை

இன்று

காலத்தின் விளையாட்டில்  வலிவற்று நடுங்கும் கைகள்
அவை வேண்டுவதோ ஒரு ஆறுதலான தொடுகை
வலிக்கும் போது வலி நீக்கும்  ஒரு மருந்தான வருடுதல்
என்னை உருவாக்கிய கைகளுக்கு  வேறென்ன செய்யப்போகிறேன்?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.
உனக்கு முழுமையான உடல் நலத்தை நல்க அவனை வேண்டுகிறேன்.18 கருத்துகள்:

 1. தாய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்...

  பதிலளிநீக்கு
 2. வயதானாலும் என்னை திட்டுவதை மறக்காத இனிய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 3. உம்மை சுமந்த உமது தாயின் மடியில்
  வாழ்த்து பூக்கள் ஆராதித்து அன்பினை பொழியட்டும் அய்யா!
  தாய்மையைப் போற்றுவோம்!
  தாய்மையை போற்றி தொழுத
  கைகளையும் போற்றித் தொழுவோம்!
  த ம 4
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. அம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

  பதிலளிநீக்கு

 5. தங்கள் அன்னைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஆயுட்காலம் முழுதும் நோயற்ற வாழ்வு தர வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் அம்மாவிற்கு எங்களின் நமஸ்காரம்.....

  வாழ்த்துகளும்.....

  பதிலளிநீக்கு
 7. அன்னையின் பிறந்தநாளில் தாங்கள் வடித்த கவிதை உருக்கமாக இருக்கிறது. இன்று காலை புலவர் ராமானுஜம் அவர்கள் வீட்டில் தங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டோம். (கில்லர்ஜி வந்திருந்தார்).

  பதிலளிநீக்கு
 8. அம்மாவிற்கு என் நமஸ்காரமும் பிறந்த நாள் வாழ்த்துக்களும்...!

  பதிலளிநீக்கு
 9. எதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்பார்களே அது இதுதான்.

  பதிலளிநீக்கு
 10. தங்கள் அம்மாவிற்கு பாதம் தொட்டு வணங்கும் எங்கள் வணக்கங்கள்!

  மனதை நெகிழ்த்திவிட்டது சார் வரிகள்! கண்ணில் நீர் துளிர்த்தது!

  (கீதா : நேற்று நீங்கள் அழைத்துப் பேசிய போது நானும் புலவர் ஐயா வீட்டில்தான் இருந்தேன். தங்கள் அம்மாவின் பிறந்தநாள் என்று அறிந்தோம். )

  பதிலளிநீக்கு
 11. தங்கள் தாயாருக்கு எனது வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா.

  பதிலளிநீக்கு
 12. அம்மாவிற்கு எந்தன் நமஸ்காரங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 13. உங்களின் ஆறுதலான தொடுகை என்னையும் மகிழ்ச்சி தந்தது :)

  பதிலளிநீக்கு
 14. அம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா.
  தம 10

  பதிலளிநீக்கு