நான்
நடக்க முதல் அடி எடுக்கையில் வழி நடத்திய கைகள்
நான்
கீழே விழுந்து அழுகையில் கண்ணீர் துடைத்த கைகள்
நான்
இருக்கிறேன் உனக்கு என்ற உறுதி தந்த கைகள்
அகப்படாமல்
ஓடிய என்னைப் பிடித்திழுத்து குளிப்பாட்டிய கைகள்
அடங்காத
என் தலை முடியை எண்ணையிட்டுப் படிய வாரிய கைகள்
அடுத்தவர்
கண் பட்டதோ என அடிக்கடி திருட்டி கழித்த கைகள்
அடிக்க
நேர்ந்தாலும் நோகாமல் அடித்துப் பின்
கண்ணீரை மறைத்த கைகள்
தனக்குப்
பிடிக்காதெனினும் எனக்குப் பிடித்த உணவைச் சமைத்த கைகள்
கண்
விழித்துப் படிப்பதற்கு சூடான தேநீர் தயாரித்து
அளித்த கைகள்.
படிப்பில்
சிறக்கும்போது மகிழ்ந்து பாராட்டித் தட்டிய
கைகள்
எந்த
வேலையும் நான் செய்ய விடாமல் தானே உழைத்த கைகள்
எத்தனையோ
சொல்லலாம் இன்னும்,எண்ணிலடங்காதவை
இன்று
காலத்தின்
விளையாட்டில் வலிவற்று நடுங்கும் கைகள்
அவை
வேண்டுவதோ ஒரு ஆறுதலான தொடுகை
வலிக்கும்
போது வலி நீக்கும் ஒரு மருந்தான வருடுதல்
என்னை
உருவாக்கிய கைகளுக்கு வேறென்ன
செய்யப்போகிறேன்?
இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.
உனக்கு முழுமையான
உடல் நலத்தை நல்க அவனை வேண்டுகிறேன்.