தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 06, 2015

மாயா!மாயா!தமிழ்மணம் ரேங்க் எனும் மாயா!!வாங்கண்ணே!

ஏண்டா பனை மட்டைத் தலையா!என் வூட்டுக்கு வந்து என்னையே வாங்கன்னு கூப்பிடறே?

அது இருக்கட்டும்ணே! ஒரு சந்தோசமான சமாசாரம்.

என்னடா? ஒன் பொண்டாட்டி ராமசாமியோட ஒடிப்போயிட்டாளா?

அட சும்மா இருங்கண்ணே.நான் ஒரு வலைப்பதிவு ஆரம்பிசிட்டேண்ணே!

கின்னஸ்ல போடப்போறாங்கடா பன்னி வாயா! பதிவு பேருஎன்ன ?

நேர்மை ,கருமை,எருமை

நல்ல பேருதான் ஒன்னையும் பேர்ல சேத்துட்டே!

அண்ணே தமிழ் மணத்தில கூட இணைச்சிட்டேன்!

எப்படிடா இந்த அதிசயம்.?

எல்லாம் வலைச்சித்தர் பதிவு பாத்துத்தாண்ணே.

அவர் பண்ண வேலை ஒன்ன மாதிரி பயலுவ எல்லாம் வலைப்பதிவு ஆரம்பிச்சுடறாங்க .!

அண்ணே ஒரு சந்தேகம்!தமிழ் மணம் ரேங்க் எப்படிண்ணே வாங்குறது?

அடே கூமுட்டை அதுக்குள்ள ஒனக்கு ரேங்க் கேக்குதோ?

சொல்லுங்கண்ணே

சின்னப்பையன் பிரியமா கேக்குற சொல்றேன்.நம்பர் போட்டு யோசனை சொல்றேன் கேட்டுக்கோ!

ஒண்ணு.தெனம் ஒரு பதிவு கண்டிப்பா எழுதணும்

அது எப்படிண்ணே முடியும்?

ஏண்டா நீ என்ன பெரிய தத்துவம்,நீதி.இலக்கியம் எல்லாமா எழுதப்போறே.எதையாவது எழுதுடா,நீ ஊர்ல எருமை மேச்ச கதை.பொண்ணுங்க கிட்ட அடி வாங்கின கதை இப்படி எவ்வளவோ இருக்கே.எதாவது சிரிப்புத் துணுக்கு எழுது.கிராமத்தில இட்லிக்கார ஆயா கிட்ட சாப்பிட்ட இட்லி காரசட்னி பத்தி எழுது!எருமை மேல உட்கார்ந்தே உல்லாசப் பயணம் போன அனுபவத்தை எழுது..ஒன்னோட சேர்ந்து மாடு மேச்ச குப்பனைப் பேட்டிகண்டு அந்தத் தொழிலின் சிரமங்கள் பத்தி எழுது.உனக்குத் தெரிஞ்ச ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்னு எதைப் பத்தியாவது எழுது.உங்க ஆயா கிட்ட கேட்டுகருவாட்டுக் கொழம்பு பக்குவம் எழுது.எதுவும் கிடைக்கலேன்னா,ஏதாவது பத்திரிகைல வந்த செய்திய அப்படியே ,இல்லாட்டிக் கதை மாதிரி எழுதி கிழே நன்றின்னு போட்டுடு.எவ்வளவோ எழுதலாண்டா!

அப்பா! இவ்வளவு விசயம் இருக்கா?ஆனா ஓட்டு விழணுமேண்ணே.?

சொல்றேன்.தமிழ் மணத்தில சூடான இடுகை,.வாசகர் பரிந்துரை இதில இருக்கிற பதிவுகளுக்கு  போய்ப்பார்.சில பேர் அநேகமா எல்லாப்பதிவுகளிலும் கருத்துச் சொல்லி ருப்பாங்க.அவங்க பதிவை குறிச்சுக்கோ அவங்க பதிவுக்கெல்லாம் போய், ஓட்டுப் போட்டு கருத்துச் சொல்லிட்டு தம 3,4ன்னு போட்டுடு.அவங்களும் சரி மொய் வச்சவனுக்குப் பதில் மொய் வைக்கணும்னு உன் பதிவுக்கு ஓட்டுப் போட்டு கருத்தும் சொல்லிட்டுப் போவாங்க. இது போல நிச்சயம் வரக்கூடியவங்களை விட்டுடாதே!

ஆனா எல்லாப்பதிவையும் படிச்சுக் கருத்துச் சொல்ல நேரம் இல்லயேண்ணே.

படிச்சா மட்டும் உனக்குப் புரியப்போகுதாக்கும்,!சும்மா ஆகா,அருமை,அட்டகாசம் ,கலக்கல் இப்படி ஏதாவது சொல்லு.சிலபேர் ‘ம்’ னு முக்கிட்டு கூடப் போவாங்க.!,இல்லையா தம+1 ன்னு போட்டுட்டுப் போயிட்டே இரு.

அப்புறம்?

இன்னும் நெறய இருக்குடா.ஒரே நாள்ள முடியற விசயமா இது.வா வந்து பிரியாணி வாங்கிக் குடு.மீதிய நாளைக்குச் சொல்றேன்!


41 கருத்துகள்:

 1. ஹா... ஹா... உண்மையை புட்டு புட்டு வைச்சிட்டீங்க... இன்னும் இருக்கா...?

  பதிலளிநீக்கு
 2. நானும் "ஐயாவோட தளத்திலே மறுபடியும் காணப் போச்சி போல" என்று நினைத்து தான் வந்தேன்... நல்லவேளை இருக்கிறது... அது எப்படி தீடீரென்று மாயமாகிறது என்று இன்று வரை பிடிபடவும் இல்லை... பார்ப்போம்... ஒரு தொகுப்பாக தொழிற்நுட்ப பதிவு ஒன்றையும் எழுதலாம் என்றும் உள்ளேன்...

  பதிலளிநீக்கு
 3. சிலபேர் ‘ம்’ னு முக்கிட்டு கூடப் போவாங்க.!
  உண்மை உண்மை ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 4. ஹாஹா.... செம!

  இதுக்கு தமிழ் மணம் ஓட்டு போடணுமா கூடாதா? தெரியலையே...

  எதுக்கு வம்புன்னு ஓட்டும் போட்டுட்டேன்! :)

  பதிலளிநீக்கு
 5. ஐயா! இரகசியத்தை வெளியிட்டுவிட்டீர்களே! இனி என்ன நடக்குமோ?

  பதிலளிநீக்கு
 6. நல்ல அலசல். சிறப்பான பதிவு. மற்றவர்கள் எனக்கு தமிழ்மணத்தில் வாக்களித்தாலும் அளிக்காவிட்டாலும் பதிவைப் படித்தவுடன் நான் வாக்களித்து விடுவேன். உங்கள் பதிவைப் படித்ததும், பின்னூட்டங்களில் த.ம.1,2,3 என்று குறிப்பதா வேண்டாமா என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. ஏனெனில் நான் த.ம என்று குறிப்பது, மற்றவர்களுடைய வாக்களிப்பை எதிர்பார்த்து அல்ல; மறறவர்களும் தமிழ்மணத்தில் இணைய வேண்டும், அவர்களுக்கும் வாக்களிக்கும் எண்ணத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே.

  த.ம.6 (வழக்கம் போல)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா!இதுமுழுக்க முழுக்க நகைச்சுவைப் பதிவே!
   நன்றி

   நீக்கு
 7. தமிழ்மணம் ரேங்க் எனும் மாயா!!
  நன்றே விளக்கி நிற்பது
  இன்றே பலர் அறிந்தால்
  தமிழ்மணம் ரேங்க் ஒன்றிற்குப் போக
  கில்லர்ஜீயா பகவான்ஜீயா
  என்பதை விடை - அவர்கள்
  வாசகர் உள்ளங்களை கொள்ளையடிக்கும்
  எழுத்து வண்ணம் இருக்கே - அதையும்
  கொஞ்சம் கற்றுத் தேறலாம்...

  பதிலளிநீக்கு
 8. சும்மா ஆகா,அருமை,அட்டகாசம் ,கலக்கல் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்லவந்ததைப் புலவர் சொல்லிவிட்டார்.

   த ம + 1

   உஷ்...அப்பாடா.. மொய் வெச்சாச்சு.

   ஹ ஹ ஹா!

   நீக்கு
 9. உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள்.

  திரு தமிழ் இளங்கோ சொல்லி இருப்பது போல நான் படிக்கும் பதிவுகள் அனைத்துக்கும் த.ம வாக்கு அளித்து வழக்கம், 'எங்களி'டம் வாக்குப்பட்டை இல்லாத காலத்திலிருந்தே உண்டு. நானும் சொல்லிக் கொள்வதில்லை. இந்தத் தகவலை மட்டும் ஓரிரு இடங்களில் பகிர்ந்து கொண்டதுண்டு!

  அதே போல, பதிவைப் படித்து விட்டால் நான் பின்னூட்டம் இடாமல் போன பதிவுகள் ஒன்றிரண்டு கூடத் தேறாது! ஏதோ, நம்மால் ஆனது!

  பதிலளிநீக்கு
 10. எங்க ஊரு நகரமாயிட்டுது அய்யா..அதனால..எருமை மேய்க்க வழியில்ல.. அதனாலதான் அய்யா இங்க வந்து மேய்க்கலாமுனு வந்தா... ஒரே கலக்கலா..இருக்கு...ஆகா கலக்கு கலக்குன்னு கலக்கி புட்டிங்களே அய்யா... தெளியவே தெளியாது...

  பதிலளிநீக்கு
 11. தமிழ் மண ரேங்க் பற்றி புகுந்து விளையாடிவிட்டீர்கள்! அருமை ஐயா!

  பதிலளிநீக்கு
 12. "படிச்சா மட்டும் உனக்குப் புரியப்போகுதாக்கும்,!சும்மா ஆகா,அருமை,அட்டகாசம் ,கலக்கல் இப்படி ஏதாவது சொல்லு.சிலபேர் ‘ம்’ னு முக்கிட்டு கூடப் போவாங்க.!,"

  ம்ம்ம்.. கவுத்துட்டீங்களே சாமி..

  சிரித்தேன். இந்த ஓட்டு போடற சமாச்சாரம்தான் எனக்குப் புரியலை.

  God Bless You

  பதிலளிநீக்கு
 13. #நீ ஊர்ல எருமை மேச்ச கதை.பொண்ணுங்க கிட்ட அடி வாங்கின கதை இப்படி எவ்வளவோ இருக்கே.எதாவது சிரிப்புத் துணுக்கு எழுது.கிராமத்தில இட்லிக்கார ஆயா கிட்ட சாப்பிட்ட இட்லி காரசட்னி பத்தி எழுது!எருமை மேல உட்கார்ந்தே உல்லாசப் பயணம் போன அனுபவத்தை எழுது..ஒன்னோட சேர்ந்து மாடு மேச்ச குப்பனைப் பேட்டிகண்டு அந்தத் தொழிலின் சிரமங்கள் பத்தி எழுது.உனக்குத் தெரிஞ்ச ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்னு எதைப் பத்தியாவது எழுது.உங்க ஆயா கிட்ட கேட்டுகருவாட்டுக் கொழம்பு பக்குவம் எழுது.எதுவும் கிடைக்கலேன்னா,ஏதாவது பத்திரிகைல வந்த செய்திய அப்படியே ,இல்லாட்டிக் கதை மாதிரி எழுதி கிழே நன்றின்னு எழுது #
  இதில் ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது ,நீங்க யாரைத் தாக்குறீங்க புரியுது :)
  நானும் மொய் வச்சுப் பார்க்கிறேன் ,விட்ட இடத்தைப் பிடிக்க முடியலே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரையும் தாக்கலே.ண்டப்பு பற்ரி எழுதினேன்.//ஏதாவது பத்திரிகைல வந்த செய்திய அப்படியே ,இல்லாட்டிக் கதை மாதிரி எழுதி // இதைச் செய்வது யார்?நானேதான்!
   நன்றி பகவன்ஜி

   நீக்கு
 14. ஹா.... ஹா... ஹா... கலக்கிட்டீங்க ஐயா...

  பதிலளிநீக்கு
 15. நன்னா சொனீங்க .. இதுவரை எவ்வளவோ பதிவு எழுதிட்டேன், ஆனா இதுவரைக்கும் 3 ஓட்டுக்கு மேல் வந்தது இல்ல. சரி நம்ம எழுத்துக்கு இவ்வளவு தான் மரியாதை என்பதை அறிந்து கொண்டு எனக்கே நான் போடும் ஓட்டை கூட நிறுத்திட்டேன். அது போட்டும் உடுங்க... உங்களுக்காக என்னால் முடிந்த..
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் தரத்துக்கு ஓட்டு ஒரு அளவு கோலல்ல!
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. நல்ல பதிவு உண்மையான பதிவு...

  நாங்களும் த ம போடுவோம்...ஜி+ செய்வதும் உண்டு. ஆனால் அதைப் பற்றிக் குட்றிப்பிடுவதில்லை. பின்னூட்டம் பெரும்பாலும் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்....அதை இப்போது, பலரும் சொல்லுவதால் சுருக்கிக் கொண்டுள்ளோம்....ஆனா ரேங்கிற்கு ரேசில் எல்லாம் நாட்டம் இல்லை...வலைத்தளம் ஆக்டிவாக இருக்க வேண்டும் நல்ல நட்பு கிடைத்துள்ளது,,,,மட்டுமல்ல பல நல்ல பதிவுகள், நகைச்சுவைப் பதிவுகள் (தங்களது போன்று) வாசிக்கும் அனுபவம் நல்ல அனுபவம்...இப்படித்தான் எங்கள் வலைப்பக்கம் மேய்தல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவுதான்.அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை! நன்றி

   நீக்கு