தொடரும் தோழர்கள்
செவ்வாய், ஜூலை 07, 2015
மாயா,மாயா! பாகம் இரண்டு!
வியாழன், பிப்ரவரி 28, 2013
மீண்டும் பதிவு எழுதலாமா?!
நாளை முதல், மீள்பதிவு!
நாளை,முதல் மீள் பதிவு!
வெள்ளி, செப்டம்பர் 09, 2011
ஒரு பதிவர் மனம் திறக்கிறார்!
எப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் எழுந்ததோ அப்போதெல்லாம் எழுதினேன்.எதையாவது எழுதித் தீர வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை.வாசகர் வருகை பற்றிக் கவலை அடைந்ததில்லை.2008 இல் 26 பதிவுகள்,2009 இல் 22 பதிவுகள், 2010 செப்டெம்பர் வரை 6 பதிவுகள்-அவ்வளவே.
2010 நவம்பரில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.வருகைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.பின்னூட்டங்களை எதிர் நோக்கத் தொடங்கினேன்.அதிக அளவு பின்னூட்டங்கள்- வராத போது,நவம்பர் 18 இல்" உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும் "என்ற நகைச்சுவைப் பதிவு எழுதினேன் .சில பதிவர்கள் விளக்கம் அளித்தார்கள்.அதில் முதல் பின்னூட்டம் அளித்தவர் LK அவர்கள்.அதன் பின் பல பதிவுகளுக்கும் சென்று படித்து என்ன நடக்கிறது எனக் கவனித்தேன். அதன் விளைவே நவ.21 தேதியிட்ட என் பதிவு " உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2).
அப்போது முடிவு செய்தேன்,சில இலக்குகளை எட்ட வேண்டும் என.அன்றைய நிலையில் வருகை எண்ணிக்கை சுமார் 4500 ஆக இருந்தது.தமிழ் மணம் ரேங்க் தெரியாது-எங்கோ தொலை தூரத்தில் இருந்திருக்கும்.
பதிவை இண்ட்லி,தமிழ் 10,உலவு,திரட்டி,தமிழ்வெளி ஆகியவற்றில் இணத்தேன். ஓட்டுப் பட்டைகள் சேர்த்தேன். எழுதத் தொடங்கினேன். உண்மையாகச் சொல்வ தென்றால் பந்தயத்தில் ஓடத் துவங்கினேன்!
இன்று வருகை எண்ணிக்கை 41400 த்தைத் தாண்டி விட்டது.தமிழ் மணம் டிராஃபிக் ரேங்க் 50.(அதுதான் என் லிமிட் போலிருக்கிறது!).இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20 யில் நான்காம் இடத்தில் இருக்கிறேன்.இந்த ஆண்டு இது வரை 125 இடுகைகள்!
I have proved a point to myself.
இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம்.
இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!
எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன்.
உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.
எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.
ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.
எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.
ஆனால் ஹிட்டுக்காக எழுத மாட்டேன்.
ஓட்டுக்காக எழுத மாட்டேன்.
இந்த ஓட்டத்தில் என் மற்றப் பதிவை அலட்சியம் செய்து விட்டேன்.இனி அங்கும் எழுத வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுதான்!ஆயினும் அதிலும் கொஞ்சம் அதிகப் பிரியம் ஒருவரிடம் இருக்கும்.
எனக்கு என் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும்.(எனக்கே பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?!)
இது வரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த சில பழைய பதிவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை மீள் பதிவாக அளிக்கப் போகிறேன்.
படித்துப்பாருங்கள் நேரம் இருந்தால்!
செவ்வாய், செப்டம்பர் 06, 2011
இரு பதிவர்கள் சந்திக்கிறார்கள்!
பதிவர் மதுரை சொக்கன் நேற்று மாலை பதிவர் சென்னை பித்தனைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசிக்கொண்டவை……….
செ.பி-வாங்க சொக்கன்.நல்லாருக்கீங்களா?
சொக்கன் -திருச்சிற்றம்பலம்.நலமே.நட்சத்திர வாரத்தைச் சிறப்பாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.
செ.பி-எல்லாம் உங்கள் வாழ்த்துகளின் பலம்தான்.
சொக்கன் – நான் ஏழு நாட்களின் பதிவுகளையும் படித்தேன்.ஆறு நாட்கள் சிறப்பாக இருந்தன. கடைசி நாள் அப்படி ஒரு பதிவு தேவையா?சர்தார்ஜி ஜோக்கைச் சொல்கிறேன்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்!
செ.பி.-இதெல்லாம் சும்ம ஜாலிதான் சொக்கன்.
சொக்கன் – என்ன ஜாலி?எதை வேண்டுமானாலும் எழுதுவதா?படிப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா?
செ.பி-.சொக்கன்!நான் ஒரு போதகன் அல்ல.ஒரு பல்சுவைப் பதிவன்.நீங்கள் சொல்கிறீர்கள் நல்ல கருத்துகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று.பாருங்கள்-அன்பே சிவம் என்ற பதிவுக்குக் கிடைத்த தமிழ்மண வாக்குகள்-14;அன்னையைப் போலொரு பதிவுக்கு 15 ;ஆனால் இந்த புரியாத புதிர் என்ற சர்தார்ஜி ஜோக் பதிவுக்கு 17 வாக்குகள்.வாசகர்களின் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?அவர்கள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்கிறேன். அவ்வளவுதான்!
சொக்கன் –சினிமாக்காரர்கள் மாதிரிப் பேசுகிறீர்கள் பித்தன்.ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்வார்கள்.இப்படிச் சொல்கிறீர்களே,இந்த வாரத்திலேயே வந்த “எழுத்தறிவித்தவன் -சிறுகதை”க்கு 22 வாக்குகள் கிடைத்தனவே.அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.நான் சொல்வது இதுதான் .இந்த மாதிரிப் பதிவெல்லாம்,பிரபா,சிவகுமார்,கோகுல் போன்ற இளைஞர்கள் எழுதலாம்.நீங்கள் எழுதலாமா?
செ.பி-ஐயா,நீங்கள் சொல்வது போல் நான் எழுத ஆரம்பித்தால் உங்களை மாதிரி ஈ ஓட்ட வேண்டியதுதான்.
சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.
செ.பி- இதெல்லாம் ஒரு போதை மாதிரி சொக்கன்!பழக்கமாயிட்டா விட முடியாது.நீங்க ஏதோ திருமூலர்,ஆன்மீகம் என்று காலத்தை ஓட்டறீங்க. எல்லோராலும் அது முடியுமா?உங்க பாணியில் நீங்க போங்க;என் பாணியில் நான் போகிறேன்.நீங்க கிழக்கு;நான் மேற்கு.
“East is east and west is west and never the twain shall meet” .இதை இத்தோடு நிறுத்தி விட்டுக் காஃபி சாப்பிடுவோம் வாங்க!”
இருவரும் காஃபி சாப்பிட ஆரம்பித்தனர்.