தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 30, 2015

மாரி!



 நானும் ரௌடிதான் -5

மாரிக்கு அன்று நல்ல நாள். எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தது.

ரயிலில் பயணம் செய்யும் போது கடைசியாக அடித்த அதிருஷ்டத்தை நினதை்து ஆச்சரியம் அடைந்தான் மாரி. 

சாந்தினி சவுக் விடுவதற்கு, முன், முதலாளியை மறுபடியும் சந்தித்தான். நான் மீண்டும் வரவில்லை என்றால் பரவாயில்லையேஎன்றான்.அங்கேயே இருப்பது உனக்கு நல்லது என்றால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை, என்றார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் என்னிடம் .வேலை பார்த்துள் ளாய். என்னிடம் இன்றுதான் ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறாய் கொஞ்சம் பொறு உன் கணக்கைப் பார்த்து பணம் தருகிறேன்என்றார். ரூபாய் இருபத்தொரு ஆயிரத்தை காசோலையாகக் கொடுத்து பாங்கில் பணம் வாங்கிக் கொள் என்றார். ஐயா நீங்கள் எவ்வளவு உயர்ந்த மனிதர்என்று வாழ்த்தி வங்கியில் ரொக்கத்தை வாங்கிக் கொண்டான்”.

டீக்கடை முதலாளி செய்து கொண்டிருந்த வேலை பயங்கரமானது. பாகிஸ்தானில் இருந்து வரும் கன் பவுடரைடீ தூள் பாக்கெட்டில் பேக் செய்து தீவிரவாதி களுக்கு  சப்ளை செய்யும் அபாயகரமான வேலை அது. மாரி மாட்டிக் கொள்ளாமல் தன் முதலாளி மற்றும் கங்காராம் கூட்டத்திலிருந்து விலகி சொந்த ஊர் செல்கி றான்.

பாவம் அவனுக்கு அவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்று தெரியாது. கங்காராம் குழுவினர்கள் கூட்டுக் கொள்ளையர்கள். வெகு விரைவில் போலிஸில் மாட்டக்கூடும். மாரி தப்பித்தான்.

சென்னையில் சனியன்று காலை இறங்கி பத்திரமாக ஞாயிறன்று திருச்சி அடைந் தான்.

வாழ்க்கையில் முதல் முதலாக தன் சொந்தச் செலவில் ஆடம்பரமில்லாத ஆனால் பத்திரமான லாட்ஜில் அறை எடுத்து தங்கினான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அயர்ந்து தூங்கினான்.

மறுநாள் காலை அவன் பணிபுரிந்த வங்கிக்கு சென்றான். மேலாளரை சந்தித்து அவர் தந்துதவிய ஆயிரம் ரூபாயை கொடுத்து நமஸ்காரம் செய்தான். அவர் அதை அவனுக்கே கொடுத்துவிட்டார். உன் சம்பளப் பணத்தை கூட கொடுக்காமல் துரத்திவிட்டேன்என்று அங்கலாய்த்தார்.

சார், நான் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.நீங்கள் தான் உதவ வேண்டும் என்றான். சேமிப்புப் பிரிவு மேலாளரை கூப்பிட்டு ஆவன செய்யச் சொன்னார். விலாசத்தில் சமயபுரத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டு விலாசத்தை கொடுத்தான். மாரியை அறிந்த பழைய கணக்கர்கள், கணக்கை அறிமுகப்படுத்தினார்கள். கையிலிருந்த 61 ஆயிரம் ரொக்கத்தில், 50 ஆயிரத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்தான். செக்புக், பாஸ் புக் வாங்கிக் கொண்டான்.

அறைக்குச் சென்று, நன்றாக உடையணிந்து கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போனான். 2 உயர்ந்த இனிப்புப் பாக்கெட்டுகளை போகும் போது வாங்கிக் கொண்டான்.நீதிபதி சற்று இளைத்திருந்தார். ஸ்வெட்டர் அணிந்திருந்தார். 


முன்னிரவு பெய்த மழை அவரை வாட்டியது போல. மனைவி பொலிவுற்றிருந்தாள். சமையல் காரியை காபி கொண்டு வரச் சொன்னார்கள். சமையல் செய்ய தனியாக அவர்கள் வீட்டில் ஆள் உண்டு. நீதிபதியின் மகள் மாரியை பார்க்க வந்தாள். அவளைப் பார்த்தவுடன் மாரி ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளானான்.

தொடரும்

டிஸ்கி:மாரி,ரயிலில் தில்லி செல்லும்போதும்,திரும்பி வரும்போதும் பயணத்தில் சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கக் கூடும்; வித்தியாசமான மனிதர்களைச்  சந்தித் திருக்கக்கூடும்;ஏனெனில் பயணங்கள் எப்போதுமே அப்படிப்பட்டவைதாம்,அது போன்ற இரு பயண அனுபவங்கள் இதோ......

ஞாயிறு, நவம்பர் 29, 2015

விடுமுறை,சிரிமுறை!



ஓர் ஓட்டல்.

அங்கு தோசைக்குத் தொட்டுக் கொள்ள சர்க்கரை கொடுப்பார்கள்.சர்க்கரை விலை ஏறியதால், இனி கொடுக்க முடியாது  எனத் தீர்மானித்து அறிவிப்பு எழுதி வைத்தனர் ”இன்று முதல் தோசைக்குச் சர்க்கரை கிடையாது”

ராமு சாப்பிட வந்தான்

தோசை ஆர்டர் செய்தான்.

சர்க்கரை கேட்டான்

பலகையைப் பாருங்கள் என்றான் பணியாள்

ஒரு தோசையைச் சாப்பிட்டுவிட்டு ராமு இன்னொரு தோசை கொண்டு வரச் சொன்னான்.

தோசை வந்தது

சர்க்கரை கேட்டான் ராமு.

கோபம் கொண்ட பணியாள் போர்டில்  இருப்பதைப் படித்தாயல்லவா என்றான்

ராமு பொறுமையாகச் சொன்னான்”இன்று முதல்தோசைக்குச் சர்க்கரை கிடையாது என்று எழுதியிருக்கிறீர்கள்.நான்  முதல் தோசைக்குக் கேட்கவில்லையே,இரண்டாவது தோசைக்குத் தானே கேட்கிறேன்!”

இது எப்படி இருக்கு?!

(அந்த நாள் ஞாபகம்:
மதுரை மகால் எதிரே இருந்த ஒரு சிறிய ஓட்டலில் பொங்கல்,தோசை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள நாட்டுச் சர்க்கரை கொடுப்பார்கள்.படித்துப் பாருங்கள் )

விடுமுறை சிரிமுறை கிடக்கட்டும்;இன்று என் அடுமுறை!!(நிச்சயமாகச்  சாப்பிடுப வர்களுக்கு அழுமுறை அல்ல!

சனி, நவம்பர் 28, 2015

அறம் பாடலாமா?!




தொலைபேசி அழைத்தது

எடுத்தேன்

நண்பன்

குரலில் ஒரு கிளர்ச்சி!

“யார் மீதும் நீ தயவு செய்து அறம் பாடி விடாதே!நடந்து தொலைத்து விடும்” என்றான்

”என்னடா பிதற்றுகிறாய்?நேற்று இரவு கொஞ்சம் அதிகமோ? ”

”அதெல்லாம் ஒரு எழவுமில்லை.நடக்காமலே போனது நடக்கும் போல் இருக்கிறது நீ எழுதிய பின்!அதை எண்ணித்தான் சொன்னேன்”

புரியும்படிச் சொல்லித் தொலை!

இம்மாதம் 22 ஆம் தேதி தினத்தந்தி இணைப்பான குடும்ப மலர் பார்;புரியும்

இணைப்பைப் பார் என்று சொன்னவன் இணைப்பைத் துண்டித்தான்!

தினத்தந்திக்கு எங்கே போவது?

ஆம்! அடுத்த வீட்டில் வாங்குகிறார்களே.!

இரவல் வாங்கி வந்தேன்

(அவர்கள் என்னவெல்லாம் இரவல் கேட்கிறார்கள் எங்களிடம்!)

தேடினேன்

எங்கே,எங்கே....

வந்தது

அப்பாடா!இதைத்தான் பெரிய ஆரவாரத்துடன் சொல்லியிருக்கிறான் நண்பன்!

இம்மாதம் ஏழாம் தேதி என் பதிவின் தலைப்பு..” உலகநாயகா!மருதநாயகமாக வா!

அப்பதிவின் கடைசி வரி...” மருதநாயகமாக ஜனனி உலகநாயகனே!

இப்போது செய்தி என்ன எனப் பார்க்கலாம்






என்னவெல்லாம் செய்கிறது இந்த மாயக் கட்டில்!




வெள்ளி, நவம்பர் 27, 2015

கொலுசு ,கொலுசு!




கவலையென்னும் மேகங்கள் மனத்தில் சூழ்ந்து
கரையானாய் அரிக்கும் நிலையொன்று நேரில்
கரும்பாய் இனிக்கின்ற கற்பனைகள் வந்தால்
கருமேகக் கூட்டங்கள் கலைந்து போகும்!
   …….கவிஞர் பித்துக்குளி சிவதாஸ்





பஞ்சால் துடைத்தாலும் நோகுமே
உன் பாதம்!

துவண்டு போகாதோ வெள்ளிக் கொலுசின்
பாரத்தால்!

பதிந்த இடமெல்லாம் கன்றிச் சிவக்காதோ

கொலுசே உன்னை நான் வெறுக்கிறேன்1

அவளுக்கு துன்பம் தந்ததற்கு மட்டுமல்ல!

அவள் காலோடு ஒட்டி உறவாடியதற்கும்!
…………
அவளுடல் தழுவிக் கிடப்பாய்

அவள் வருவதைச் சொல்வாய்

கால் கொலுசு!
(ஹைக்கூ)
…………..

மனைவியிடம் சொன்னேன்,அவிழ்த்து விட்டு வா!

முகம் சுளித்தாள்”என்ன இது”

கண்ணே! நான் உன் கால் கொலுசைச் சொன்னேன்

அதன் சத்தம் இரவெல்லாம் என் உறக்கத்தைக் கெடுக்கிறது!!

……….

ஆதரவாளர்: