தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 02, 2015

யார் காவல்?காப்பதுன் கடமை;கண்மூடிக் காத்து நில்

இப்படிச் சொன்னது கண், இமையைப் பார்த்து

சிரித்தது இமை இச்சொல்லைக் கேட்டு

கண்மூடாமல் காக்க வேண்டும் என்று சொல்வர்

என்னவோ நீ கண்மூடிக் காக்கச் சொல்கிறாய்

சினத்தால் சிவந்த கண்ணில் எரிச்சல்

சிரித்து நின்ற இமை மூடியது கண்ணை

சொல்லிச் செய்வதல்ல கடமை

சொல்லாமல் செய்வதன்றோ அறிவுடைமை!

மூடுவதும் காவல்தான்,சிலநேரம்

திறப்பதும் காவல்தான்

இமை மூடினால்தான் கண்ணுக்குக் காவல்

மூடாமல் திறந்தால்தான் பொருளுக்குக் காவல்

எல்லாமே காவல்தான்!

உடலுக்கு உயிர் காவல்

கவியரசு சொன்னார்

உண்மை!

உயிர் இருக்கும் வரை 

உடல் நிற்கும்

உயிர் எனும் காவல் நீங்கின்

உடல் வீழும்!

கள்வர்கள் எப்போதும்

காக்கப்படும் பொருளையே 

கவர்வர்!

காவல் காக்கும் கவலாளியை அல்ல!

ஆனால் 

காக்கப் படும் உடலை விட்டுக் 

காக்கும் உயிரைக் கவர்கிறான் எமராஜன்!

உயிரென்னும் காவலன்  போனபின் 

உடலுக்கு ஏது காவல் 

இறந்து விட்டால்  பின்  யார் காவல்?

பெண்ணின் கற்புக்கு எது காவல்

ஐயன் சொல்வான்

நிறை காக்கும் காப்பே தலை.

பாலுக்கும் காவல்

பூனைக்கும் தோழன் 

இதுவே சிலர் நிலை!

கள்ளனை மடியில் அமர்த்திக் 

காவல் காத்த கதைதான்!

காவல் வலுத்த தோட்டத்தில்

மாங்காய் திருடும் சுகம்

வீட்டுத்தோட்ட மாமரத்தில் 

பறிப்பதில் கிடைப்பதில்லை!

குரங்காய்த் தாவும் மனத்துக்கு எது காவல்?

அறிவு ஒன்றே காவல் 

அறிவென்னும் அங்குசத்தால் 

அடக்கவில்லையெனில்

மனமென்னும் மதயானை 

பாகனையே கொல்லும்!


டிஸ்கி:இரண்டு நாட்களாக உடல் நிலை சிறிது சரியில்லை.முன்பே தயாராகயிருந்த பதிவுகளைப் போட்டு விட்டு எஸ்கேப்!கருத்துக்குப் பதில் சொல்லவோ, பிற பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொல்லவோ இயலவில்லை!
மன்னிக்கவும்!


31 கருத்துகள்:

 1. வணக்கம் அய்யா! அருமை! அய்யா!


  இரு நாட்களாக எனக்கும் உடல்நிலை சரியில்லை!
  தங்கள் உடல் நலத்தையும் பார்த்துக்குங்க அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல் நலம் அனைவருக்குமே முக்கியம்தான் பூபகீதன்..நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள்
   நன்றி

   நீக்கு
 2. வணக்கம் ஐயா அருமையான தொகுப்பு
  உடல் நலத்தை கவனியுங்கள் ஐயா வலைப்பூ எங்கும் போய்விடாது நன்றி

  பதிலளிநீக்கு
 3. என்ன திடீர் என்று கவிதையில் இறங்கி விட்டீர்கள் என்று பார்த்தேன்!

  உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடுவி நடுவில் மூடைப் பொறுத்துக் கவிதையும் வரும்!
   அன்புக்கு நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
 4. மனத்தை கவ்வும் கள்வன் அடியேன் தான்...!

  உடல்நலம் முக்கியம்... மற்றவை அப்புறம்...!

  பதிலளிநீக்கு
 5. காவல் கவிதை அருமை .உடல் நலமே முக்கியம் , விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 6. நலம் பெற வேண்டும் நீங்கள் என்று
  நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு:)

  பதிலளிநீக்கு
 7. உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள் ஐயா.

  தங்களின் க(வி)தைப் பணிகள் தொடரட்டும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 8. //அடக்கவில்லையெனில்
  மனமென்னும் மதயானை
  பாகனையே கொல்லும்!//
  உண்மை உண்மை.

  பதிலளிநீக்கு
 9. கவிதை மிக அருமை சார். இப்போது நீங்கள் நலமா ?

  பதிலளிநீக்கு
 10. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சார். கெட் வெல் சூன்.

  குரங்காய் தாவும் மனதிற்கு எது காவல்?!! அதானே!!...அதெல்லாம் மூளையின் ரசாயனப் பரிமாற்றங்களால் விளைவதுதானே...காவல்??! கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 11. உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
  உடல் நலமே முக்கியம்...

  கவிதை அருமை...

  பதிலளிநீக்கு
 12. உடல் நலமே உண்மையான சொத்து. உடல் நலம் பேணுங்கள். தத்தித் தாவும் மனதிற்கு அறிவே காவல் என சரியாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா அருமை உடல் நிலை குணமடைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு