தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 19, 2015

கழிப்பறைச் சம்பவம்!


இன்று உலக கழிப்பறைத் தினம்!
அதற்குப் பொருத்தமாக ஒரு பதிவு தேடினேன்.
இதோ இந்த மீள்பதிவு!
.......................
கிளப்பில் இருந்தபோது  கழிப்பறை செல்ல நேர்ந்தது.
அடுத்தடுத்து இரண்டு கழிப்பறைகள்
 ஒன்றினுள் சென்று அமர்ந்தேன்.
அடுத்த கழிப்பறையில் இருந்து ஒரு குரல் கேட்டது”எப்படி இருக்கீங்க?சௌக்கியமா?”
யாரடா இது கக்கூசில் வந்து குசலம் விசாரிப்பது?
இருந்தாலும் பதில் அளித்தேன் ”சௌக்கியம்தான்”
“என்ன பண்ணிட்டிருக்கீங்க?”குரல் தொடர்ந்தது.
இது என்ன மடத்தனமான கேள்வி?கழிப்பறையில் என்ன செய்வார்கள்?என்ன பதில் சொல்வது?
பொதுவாகச் சொன்னேன்”சும்மாதான் இருக்கேன்”
இதென்ன தொந்தரவாகப் போய் விட்ட்து?அடுத்த கேள்வி வருமுன் போய்விட வேண்டும்!
மீண்டும் குரல்”இப்ப நான் வரலாமா?”
ஐயோ!என்ன கஷ்டகாலம் இது?எதையாவது சொல்வோம்”இன்னும் முடிக்கலை”
இப்போது குரல் மீண்டும் கேட்டது”நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்.இங்க எவனோ முட்டாள் அடுத்த கக்கூசில் இருந்து உன்னிடம் நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்!”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நமது ரயில்களில் கழிப்பறை எப்படி வந்தது தெரியும?

இந்திய ரயில்வே ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கடிதத்தைப் படித்தால் தெரியும்!


 

19 கருத்துகள்:

 1. ஹாஹாஹா பக்கத்துல அறையில் உட்கார்ந்து இருந்தனுக்கு பதில் சொன்னீங்களா... ???

  பதிலளிநீக்கு
 2. ரசித்தேன்!

  தம படுத்துவது எனக்கு மட்டும்தானா? ஒவ்வொரு தளத்திலும் வாக்களிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது! (தாவு என்றால் என்ன என்றே தெரியாது என்பது வேறு கதை!)

  பதிலளிநீக்கு
 3. ஹஹ்ஹஹஹ செம முதல்.....இந்த மாதிரி ஒரு கடிதம் நமது அரசிற்கு எழுதினா கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துவிடுவார்களா...(சமீபத்தில் கழிப்பறைகள் கட்டுவதை விளம்பரப்படுத்தி ஆங்காங்கே சுவரில் ஒட்டியிருந்தார்களே...)

  பதிலளிநீக்கு
 4. மீள் பதிவேயானாலும் மீண்டும் சிரிக்க வைத்தது. :)

  இரயில் பயணிகள் எல்லோருக்கும் இன்று ஓரளவாவது நிம்மதியளிக்கும் அந்தக்கடிதம் உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரியது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. ஹலோ … ஹலோ .. சுகமா?
  ஆமா நீங்க நலமா?
  ஆசாமியை ரொம்பவே முக்க வைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.
  கடிதம் எழுதிய கனவானை நினைவு கூர்ந்த உங்களுக்கு நன்றி.
  ஸ்ரீராம் அவர்கள் சொன்னது சரிதான். ஒவ்வொருமுறையும் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதற்குள், தாவு (சக்தி) தீர்ந்து விடுகிறது.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  அற்புதமான விளக்கம் ஐயா படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ரயில் பயணிகளுக்கான கடிதம் வியப்பைத் தந்தது. நன்றி. (லோட்டா பயன்பாடு அருமை)

  பதிலளிநீக்கு
 8. இரண்டு துணுக்குகளையும் இரசித்தேன்! சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப நாளாகவே த.ம. இப்படித்தான் உள்ளது...

  தகவல் அனுப்பியும் பதில் இல்லை...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் அய்யா! கழிவறை சிரிப்பறை!

  பதிலளிநீக்கு
 11. சிரிச்சு மாளல.. வயிற்று வழியே வந்துருச்சு..!

  பதிலளிநீக்கு
 12. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

  முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

  பதிலளிநீக்கு
 13. கழிப்பறையிலும் கமடிதான் தல! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 14. இரண்டுமே முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசித்தேன்.....

  பதிலளிநீக்கு