தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 04, 2015

காதலா,காதலா!அவனும் அவளும் சந்தித்த உடன் முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டனர்

முதலில் கண்களால் பேசினர்

பின் வாய் மொழி

ஒரே வாரத்தில் அவன் அவளை வெளியே அழைத்துச் சென்றான்

ஒரு ஆடம்பர ஒட்டலுக்குச் சென்றனர்

விலை உயர்ந்த உணவு வகைகள்

சாப்பிட்டனர்

பில் வந்ததும் ,பணம் எடுக்கப் பாக்கெட்டில் கையை விட்டான்

பர்ஸ் இல்லை!

எங்கே போயிற்று?

அவன் விழிப்பதைப் பார்த்த அவள் கேட்டாள்

“என்ன ஆயிற்று?”

”பர்ஸைக் காணோம்”

அவள் முகத்தில் வெறுப்பு,அலட்சியம்

தன் கைப்பையைத் திறந்து  பணம் எடுத்தாள்

மேசை மீது போட்டு விட்டு வெளியேறினாள்’ குட் பை”

வெளியே சென்று ஆட்டோவில் ஏறினாள்

கைப்பையைத் திறந்து,உள்ளிருந்து ஒரு பர்ஸை எடுத்து அதன் உள்ளிருந்த பணத்தை எடுத்துக் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.

பர்ஸைத் தூக்கி எறிந்தாள்!

(ஆங்கிலக் கதை)

9 கருத்துகள்:

 1. அவள்தான் அவனது பணத்தை ‘சுட்டு’ விட்டாளோ? அதனாதான் இப்போது எல்லோரும் தொகுப்பி (Simcard) வைத்துள்ள கடன் அட்டையை எடுத்து செல்கிறார்கள் போலும். அதை யார் திருடினாலும் கமுக்க குறியீடு இல்லாமல், உபயோகப்படுத்த முடியாதே!

  பதிலளிநீக்கு
 2. அது ஆங்கில காதல் ,நம்ம ஊர்லே எல்லாமே தெய்வீக காதல் :)

  பதிலளிநீக்கு
 3. கூட இருந்தே குழி பறிப்பது போல! அருமை அய்யா!

  பதிலளிநீக்கு
 4. பர்சைக் காணவில்லை என்று சொன்னதுமே அந்தப் பெண்தான் எடுத்திருப்பாள் ஏமாற்றுகின்றாள் என்று தோன்றியது...(எல்லாம் அப்பப்போ இந்த ந்யூஸ் வருது இல்லையா அதான்...)

  பதிலளிநீக்கு