தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 17, 2015

நானும் ரௌடிதான்.!ஜனனம் மரணம் வாழ்க்கையின் வட்டங்கள். சமயபுரத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் ஆசிரியரின் மகனாக மாரி பிறந்தான். 8 வருடம் தந்தை தாயிடம் வளர்ந்தான். ஒரு விபத்தில் அவர்களை பறி கொடுத்து அநாதை ஆனான். மாரியின் உடமைகள் முழுவதுமாக கபளீகரிக்கப்பட்டன. தந்தை கற்றுத் தந்த நல்லவைகள் மனதில் நின்றன. அவைகளில் முக்கியமானவை ஒழுக்கம் தவறாமை, சுகாதாரம். திருச்சியில் மிகவும் அல்லாடினான். அனாதை சிறுவர்கள் செய்யும் எல்லா வேலை களையும் ருசி பார்த்திருக்கிறான்.

காசு, பணம், துட்டு, Money தான் உலகம்என்ற வேதாந்தம் மனதில் குடியேறியது. சிறிய திருட்டுக்களை செய்யும் பழக்கம் அவனுள் வளர்ந்தது. மாட்டிக்கொள்ள சந்தர்ப்பம் இல்லாத சமயங்களில் காரியத்தை முடித்தான். காலம் நகர்ந்தது 20 வயதை அடைந்தான்.

ஒரு அழகிய பெண்ணின் கைப்பையை ஒருவன் திருடிக்கொண்டு ஒட மாரி அவனை கீழே தள்ளி கைப்பையை மீட்டுத் தந்தான். பெண்ணின் அம்மாவும் கூட இருந்தாள். அவள் ஒய்வு பெற்ற நீதிபதியின் மனைவி. அவர்களின்   நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்கள் வீட்டில் எடுபிடி வேலை கிடைத்தது. உண்ண உணவு, இருக்க இடம். தோட்டக்காரனும் அவனே. காவலாளியும் அவனே. கொஞ்சம் நாகரீகத்தை கற்றுக் கொண்டான்.ரஜினி படத்தில் வருவது போல் தனக்கு ஒரு பணக்கார வளர்ப்புத் தந்தையும் அழகான சிவப்பான காதலியும் கிடைப்பாள் என்று கனவு கண்டான்.

அங்கு, இங்கு, எங்கும் சுற்றிக் கொண்டிருந்த போது இந்தி, ஆங்கிலம் சிறிது அதிகமாகவே பேசக் கற்றுக் கொண்டான். கார், பைக் ஓட்டத் தெரியும். செய்யும் வேலைகளுக்கேற்ப உடை அணிந்தான். உடமைகள் எதுவுமில்லை.

நீதிபதியின் நெருங்கிய நண்பர் ஒரு வங்கி மேலாளர். 1980-ல் 22 வயது முடித்த மாரியை தற்காலிக துப்புரவுப் பணி, மற்றும் பணியாள் பணிகளுக்கு நியமித்தார். மாரி எல்லோரிடமும் மரியாதையாக பழகினான். மேலாளர் மணி அடித்தால் அவர் அறையில் அடுத்த வினாடி நிறபான். நீதிபதி வீட்டிற்கு வேலையில் சேர்ந்தவுடன் மாரியின் திருட்டுகள் குறைந்தன. உடலும் நன்றாக வளர்ந்தது. பகலில் வங்கிப் பணி, இரவில் காவல் பணி, வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் நன்றாகத் தூங்குவான். வாரம் ஒருமுறை சினிமா. ரஜினி தமிழில் என்றால் இந்தியில் அமிதாப்தானே. ரிஷி டிம்பிள் ஜோடியை மாரி நேசித்தான். அமர், அக்பர், ஆண்டனியில் பர்தாவோ பருதாபாட்டு கொள்ளை இஷ்டம் ரிஷி ரோஜாவை வீசி எரிய, அது நீது கிங் கூந்தலில் போய் மாட்டுவதைப் கண்டு ரசிக்க பலமுறை அப்படத்தை பார்த்தான்.

விதி யாரை விட்டது. மறுபடியும் மாரிக்கு கை அரிக்க ஆரம்பித்து விட்டது-ஒரு நாள், மேலாளர் மணி அடிக்க மாரி ஆஜர். அவர் கொடுத்த காசோலையை ரொக்கமாக மாற்றி, 5000 ரூபாயை அவரிடம் கொடுத்தான். முகம், அலம்ப டாய்லெட்டில் மேலாளர் நுழைந்த போது, டிராயருள் இருந்த பணத்தை நொடிப்பொழுதில் அபேஸ் செய்து வெளியேறினான்.மீண்டும் மேலாளரின் அழைப்பு மணி ஒலிக்க, மகுடி கேட்ட நாகம் போல் உள்ளே ஒடினான். கையும் களவுமாக பிடிபட்டான். மேலாளரின் பல அந்தரங்க விஷயங்கள் மாரி மட்டும் அறிந்தவை, அரியவை. அதனால் ஒரு ஆயிரம் ரூபாயை மாரியிடம் நீட்டி என் முகத்தில் முழிக்காதே. எங்காவது போய்த் தொலைஎன்று மாரியை விரட்டி அடித்தார்.

இத்தோடு விட்டது மாரிக்கு மிக்க மகிழ்ச்சியே. நீதிபதி வீட்டிற்கு போக துணிவில்லை. 

திருச்சி சந்திப்புச் சென்று சென்னை ரயில் ஏறினான்.சென்னை அடைந்தவுடன் அடுத்த பிளாட்பாரத்தில் டெல்லி செல்லும் ஜி.டி. அரை மணி நேரத்தில் புறப்படக் காத்திருந்தது. டெல்லிக்கு டிக்கெட் வாங்கினான். நல்ல வேளையாக உட்கார இடம் கிடைத்தது. அவன் ஏன் டெல்லி போகிறான் அவனுக்கே தெரியாது. 

--தொடரும்.

31 கருத்துகள்:

 1. அட! சினிமாவுக்கு ஏற்ற கதை போல இருக்கின்றதே! தமிழ்சினிமாக்காரர்கள் இதைப் பார்த்தால் ...நிச்சயமாக உங்கள் வீட்டுக் கதவு தட்டப்படும்....(ஆனால் இது பல தமிழ் சினிமாக்கள் போல உள்ளதால் ..ம்ம் அதனால் என்ன அவர்களுக்குக் கதாநாயகனுக்குச் சிறிய மச்சம் ஒன்றை வைகத்துப் பல கதைகளை மிக்சியில் போட்டு ஒரு குலுக்கு குலுக்கவா தெரியாது!!!)

  தலைப்பு ஏதோ சொல்லுகின்றது. இருந்தாலும் ஒர்வேளை பார்த்தசாரதியும் வந்து, பித்தானந்தாவும் இடையில் வருவார்களோ...

  அதானே எதுக்குப் போறான் டெல்லிக்கு? தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஒர்வேளை பார்த்தசாரதியும் வந்து, பித்தானந்தாவும் இடையில் வருவார்களோ...//

   பார்த்தசாரதி நிச்சயம் வருவார்!
   நன்றி

   நீக்கு
 2. மாரியைத் தங்கள் மூலம் டெல்லியில் சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் நானும் ...... தொடரட்டும் தங்கள் பாணி தங்கமான எழுத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சினிமா விமர்சனம் என்று எண்ணி நழுவப் பார்த்தேன். படித்ததும் ஒரு சினிமா கதைக்குரிய அம்சம் இருப்பதாகவே பட்டது. தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சினிமா பார்த்தால்தானே விமரிசனம் எழுத!
   நன்றி தமிழ் இளங்கோ சார்

   நீக்கு
 4. மறுபடியும் நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படம் பார்ப்பதுபோலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. மாரி திருந்தினா மாறி இல்லையே! சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. ஏன் சார், ஒங்களுக்கு வேறே ஊர் கிடைக்கலையா? மாரியை டில்லிக்கு அனுப்பரீங்களே? டில்லியில் நமக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் இவன் ஏதாவது மோசடி செய்துவிடப்போகிறான்... - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 7. ம்ம்... இப்பத்தான் உங்களை நெனச்சி (நனைச்சி அல்ல) சந்தோஷப்பட்டேன்..
  அந்த சந்தோஷத்துக்கும் செவப்பு கொடி காட்டிட்டீங்களே அய்யா..!

  நேத்துதான் என் தொடர் (தொடரா? தொந்தரவா? அப்டீன்னு உங்க உள்மனசு சொல்லுறதையும் கேட்டுட்டேன்) பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருந்தீக. இப்ப எனக்கு போட்டியா நீங்களும் ஒரு தொடர்? அதுவும் ரொம்ப சுவாரசியமாய் பதிவு போட்டால்..., என்ன மாதிரி கத்துகுட்டிகளெல்லாம் எப்படித்தான் பதிவு போட்டு பொழைக்கிறதோ?

  சொக்கா இவரோட போட்டி போடற அளவுக்கெல்லாம் எனக்கு அறிவில்லை.. இருந்தாலும் அடிபடாம ஓட மட்டும் வழிகாட்டைய்யா...!

  பதிலளிநீக்கு

 8. புது தில்லி செல்லும் G.T விரைவு இரயிலில் ஏறிய மாரி தில்லியில் ஏதோ செய்யப் போகிறார் எனத் தோன்றுகிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ஒரு வேளை மாரி நாளைய பிரதமர் ஆகலாம் ஐயா...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா

  நீங்கள் ஏதாவது படத்துக்கு கதை எழுதி இயக்கலாம் ஐயா.. அப்படி அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஐயா !

  நாங்களும் ரௌடிதான் ஹா ஹா ஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே
  போகப்போகத் தெரியும் இல்லையா ????? ம்ம் தொடரட்டும் கதை வண்டி நாங்களும் ஏறிக் கொள்கிறோம் நன்றி
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
  தம +1

  பதிலளிநீக்கு
 12. மாரிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க நானும் டெல்லிக்கு வந்தாக வேண்டும்!

  பதிலளிநீக்கு
 13. சினிமாவின் வேகத்தில்
  அருமை
  தொடர்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 14. மாரி.... சின்னச் சின்னத் திருட்டையெல்லாம் தமிழ்நாட்டில் கற்றுக்கொண்டான். இப்போது பெரிதாகக் கற்றுக்கொள்ள டில்லி போகிறானோ....
  நானும் தொடருகிறேன் ‘தல‘

  பதிலளிநீக்கு
 15. என்னால் டெல்லிக்கு வரமுடியாது

  பதிலளிநீக்கு
 16. மாரி டெல்லிக்கு சென்று சோமாறி ஆகப் போகிறானோ :)

  பதிலளிநீக்கு
 17. ஆஹா.... மாரி அடுத்து பயணிக்கப் போவது தலைநகருக்கு!.....

  என்ன ஆகப் போகிறது? தெரிந்து கொள்ள, தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு