தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 28, 2015

அறம் பாடலாமா?!
தொலைபேசி அழைத்தது

எடுத்தேன்

நண்பன்

குரலில் ஒரு கிளர்ச்சி!

“யார் மீதும் நீ தயவு செய்து அறம் பாடி விடாதே!நடந்து தொலைத்து விடும்” என்றான்

”என்னடா பிதற்றுகிறாய்?நேற்று இரவு கொஞ்சம் அதிகமோ? ”

”அதெல்லாம் ஒரு எழவுமில்லை.நடக்காமலே போனது நடக்கும் போல் இருக்கிறது நீ எழுதிய பின்!அதை எண்ணித்தான் சொன்னேன்”

புரியும்படிச் சொல்லித் தொலை!

இம்மாதம் 22 ஆம் தேதி தினத்தந்தி இணைப்பான குடும்ப மலர் பார்;புரியும்

இணைப்பைப் பார் என்று சொன்னவன் இணைப்பைத் துண்டித்தான்!

தினத்தந்திக்கு எங்கே போவது?

ஆம்! அடுத்த வீட்டில் வாங்குகிறார்களே.!

இரவல் வாங்கி வந்தேன்

(அவர்கள் என்னவெல்லாம் இரவல் கேட்கிறார்கள் எங்களிடம்!)

தேடினேன்

எங்கே,எங்கே....

வந்தது

அப்பாடா!இதைத்தான் பெரிய ஆரவாரத்துடன் சொல்லியிருக்கிறான் நண்பன்!

இம்மாதம் ஏழாம் தேதி என் பதிவின் தலைப்பு..” உலகநாயகா!மருதநாயகமாக வா!

அப்பதிவின் கடைசி வரி...” மருதநாயகமாக ஜனனி உலகநாயகனே!

இப்போது செய்தி என்ன எனப் பார்க்கலாம்


என்னவெல்லாம் செய்கிறது இந்த மாயக் கட்டில்!
21 கருத்துகள்:

 1. ஐயா! தங்களுக்கு மாற்றார் உளம் அறியும் சிறப்பாற்றல் (Telepathy) உண்டு போலும். இல்லாவிடில் உலக நாயகனின் மனதில் உள்ளதை அறிந்து சொல்லமுடியுமா? வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவேக் (ஒருபடத்தில்) மாதிரி ஆகி விடப் போகிறது!
   நன்றி சார்

   நீக்கு
 2. சரிதான் உங்களுக்குள் ஏதோ ஒரு மாய சக்தி இருக்கிறது.

  பதிலளிநீக்கு

 3. நாடி ஜோதிடர் அல்ல!
  ஆனால்?
  நம்பிக்கையோடு நாங்கள் நாட வேண்டியவர்.
  வாக்கு சித்தரே!
  2016 தமிழ் நாடு யார் கையில்?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கெதுக்கு அரசியல்!
   நடப்பது நடக்கட்டும்!
   நன்றி வேலு அவர்களே

   நீக்கு
 4. மாயக்கட்டில் சொல்லப் போவதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அந்த மாயகட்டில் விலைக்கு கிடைக்குமா :)

  பதிலளிநீக்கு
 6. ஆச்சரியமான மாயக் கட்டில்தான்..!?
  த ம 7

  பதிலளிநீக்கு
 7. ஆஹா.... தங்கள் வாக்குப் பலித்து விட்டதே...
  எனக்கும் மாயக்கட்டிலில் இருந்து நல்லது சொல்லுங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2016 உங்களுக்கு எண்ணியநெல்லாம் நடக்கும்!
   நன்றி குமார்

   நீக்கு
 8. மழையை தற்போது நிறுத்த அறம் பாடுங்கள்

  பதிலளிநீக்கு
 9. சார் மாயக்கட்டில் என்னவெல்லாமோ செய்யுது...இப்படித்தான் உங்கள் கிஃப்ட் மாயக்கட்டில் என்னவெல்லாமோ செய்தது....ஆச்சரியம்தான்...சார் ,

  கீதா: அப்படியே இந்தத் தமிழ்நாட்டு மக்களையும் , அரசியல்வாதிகளையும் திருத்துமானு பாருங்க சார். மக்கள் திருந்தியே ஆகணும். ஒருவேளை உங்கள் மாயக்கட்டில் ஊடகங்களில் பேசப்பட்டாலும் படலாம். தயாராக இருக்கவும்!! அட்வான்ஸ் வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு
 10. கீதா: பக்தவத்சலம் தெரு 1 ஆ ஆஹா நான் அடிக்கடி 2 ஆம் தெருவுக்கு வருவதுண்டு.

  பதிலளிநீக்கு