தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 08, 2015

விடுமுறை,சிரி(சிந்தி)முறை!ஒரு மனிதனைச் சுமந்தவாறு ஒரு குதிரை வெகு வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

 அந்த மனிதன் ஏதோ அவசர  வேலையாகச் செல்வது போல் தோன்றியது.

அதைப் பார்த்த ஒருவன் கத்திக் கேட்டான் ”இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்?”

குதிரை மீதமர்ந்திருந்தவன் சொன்னான்”என்னைக் கேட்காதே! குதிரையைக் கேள்!”

.சிரிப்பு வருகிறதா:அவன் முட்டாள் எனத் தோன்றுகிறதா?

என்ன சொல்கிறது இந்தக்கதை?

அந்தக் குதிரைதான் நமது பழக்கங்கள்.

நமக்குள் ஊறிப்போன சிந்தனைகள்

அவை நம்மை இழுத்துச் செல்கின்றன;நாம் அவற்றை செலுத்துவதில்லை!

ஏன் செய்கிறோம் என்று யோசிக்காமலே ல செயல்களைச் செய்கிறோம்.

கொஞ்சம் நின்று யோசித்தால் புரியும் எப்படி நாம் பொருளற்ற செயல்களை எந்திரத் தனமாக செய்து கொண்டிருக்கிறோம் என்று!

சவாரி செய்பவனுக்குக் குதிரை எசமான் அல்ல;அவன்தான் குதிரைக்கு எசமான்!

பழக்கங்கள் நமக்கு எசமானர்கள் அல்ல்;நாம்தான் பழக்கங்களுக்கு எசமானர்கள்!

இது ஒரு ஃஜென் கதை!

பி.கு. ஆங்கிலத்தில் habit  என்பது பற்றி இவ்வாறு சொல்வார்கள்...

//cut off h, a bit  remains
cut off a,  bit remains
cut off  b, it remains //

28 கருத்துகள்:

 1. கட்டுக்கடங்காத ’தீபாவளி’ என்ற குதிரையில் ஏறிக்கொண்டு, மக்கள் பலரும் (ஏழை .... பணக்காரர் என்ற வித்யாசமில்லாமல்) கூட்டம் கூட்டமாக ஜவுளிக்கடைகளிலும், பட்டாசுக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், பஜாரிலும் குவிந்திருப்பது ஏனோ என் நினைவில் சுழன்றது ..... இதனைப்படித்ததும். :)

  தங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், சார்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்து ஐயா வலைப்பூ எழுதுவதுகூட தானாகவே கடமை என்பது போல்தான் எழுதிக்கொண்டு இருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது குதிரை அல்ல!நாயர் பிடிச்ச புலிவால்;விடமுடியாது!
   நன்றி கில்லர்ஜி

   நீக்கு
 3. காரணங்களை விட்டு காரியங்களை மட்டும் பிடித்துத் தொங்குகிறோம்!
  :)))

  பதிலளிநீக்கு
 4. பழக்கங்கள் நமக்கு எசமானர்கள் அல்ல்;நாம்தான் பழக்கங்களுக்கு எசமானர்கள்!
  உண்மை ஐயா உண்மை
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. அதனால் தான் 'கண் மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போக.' என்றாரோ வள்ளலார்.

  பதிலளிநீக்கு
 6. அருமை அய்யா! ஏன் எதற்கு என்று சிந்திக்க கூட நேரமில்லாமல் திருவதன் காரணம்தான் அய்யா!

  பதிலளிநீக்கு
 7. பதிவு அருமை சார். தங்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சாரதாம்மா.வாழ்த்துகள் உங்களுக்கும்.என்ன பலகாரம் செய்தீர்கள்?!

   நீக்கு
  2. இன்று தேன்குழல் முறுக்கு, தட்டை, அதிரசம் செய்தேன் சார். இன்றைய பதிவாகிய தீபாவளி பண்டிகையை காண எனது வலைப்பூவுக்கு வாருங்கள்.

   நீக்கு
 8. நல்லதொரு கதை . பகிர்ந்ததற்கு நன்றி அய்யா .

  பதிலளிநீக்கு
 9. அவ்வளவு உயர்ந்த தத்துவத்தை மிக எளிய வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள் ஐயா! நீங்கள் சென்னை 'பித்தன்' அல்ல, 'புத்தன்'! - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா
  நல்ல சிந்தனையுள்ள கதை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏக்கம் கலந்த தீபாவளி.:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. சிந்திக்க வைத்த சிரிப்பு! அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. இந்த குதிரை கீழே தள்ளி ,குழியையும் பறிக்கும் என்பதால், நாம் கவனமாய் இருக்கணும்:)

  பதிலளிநீக்கு
 13. சிந்திக்க வேண்டிய பதிவு ஐயா அருமை !
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
 14. ஜென் கதைகள் எல்லாமெ தத்துவம் மிக்க கதைகள்

  பதிலளிநீக்கு
 15. சிந்திக்க வைத்த சிரிப்பு.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு