தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 15, 2015

விடுமுறை,சிரிமுறை!

நேற்று என் வீட்டு அழைப்பு மணி வேலை செய்யவில்லை.நண்பர் ஒருவர் மணி அடித்துப் பயனின்றிக் கதவை உடைப்பது போலத் தட்டியவுடன்தான் கதவைத் திறந்தேன்.அவர் சென்றவுடன் ,மின்வினைஞருக்குத் தொலைபேசியில் ,அழைப்பு மணி வேலை செய்ய வில்லை எனச் சொன்னேன்.10 நிமிடத்தில் வருவதாகக் கூறினார்.ஒரு மணி நேரம் சென்றும் வரவில்லை.மீண்டும் தொலை பேசியில், ஏன் வரவில்லை எனக் கேட்டேன்.அவர் சொன்னார்---

வந்து ரொம்ப நேரம் அழைப்பு மணியை அடித்தேன் .கதவே திறக்கவில்லை.திரும்பி வந்து விட்டேன்!


என்ன செய்வது இவரை!


....................................................              
காதலன்:உனக்கு என்ன புத்தகம் மிகவும் பிடிக்கும்?

காதலி:உங்கள் செக்புத்தகம்!

22 கருத்துகள்:

 1. இரசிதேன்! சிரித்தேன்! இரண்டாவது நகைச்சுவைக்கு யாராவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துவிடப் போகிறார்கள். ஜாக்கிரதை

  பதிலளிநீக்கு
 2. அந்த electrician னுக்கு இல்லாத தெளிவு அந்த காதலிக்கு அபரிமிதமா இருக்கு:))))

  பதிலளிநீக்கு
 3. ஹஹஹஹஹ்ஹ்...ரசித்துச் சிரித்தோம்

  அந்த அழைப்புமணியைச் சரியாக்க வந்தவர் அதற்குத்தானே வந்தார் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கலாம்..இல்லைக் கதவைத் தட்டு தட்டு என்று இடித்திருக்கலாம்..!!! ஹும் காமென் சென்ஸ் இல்லாதவர்களா க இருக்கின்றார்கள், அதைவிட வேலையில் ஈடுபாடு இல்லாதவர்களாக என்றும் சொல்லலாம்...

  பதிலளிநீக்கு
 4. இரண்டுமே ஸூப்பர் ஐயா செக்புக் யாருக்குத்தான் பிடிக்காது ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
 5. மின்வினைஞரை இங்கே அனுப்புங்கள் மின்சார நாற்காலியில் உட்கார வைக்கிறேன் :)
  நீ இப்படி சொல்வாய் என்று தெரிந்துதான் வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ள வில்லை என்று காதலன் சொன்னதை ஏன் மறைத்து விட்டீர்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செக்புக்கைப் பார்த்தபின்தான் சொல்லியிருந்தால்?!
   நன்றி பகவான் ஜி

   நீக்கு
 6. ஆகா
  ரசித்தேன் சிரித்தேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 7. ஹாஹா.... நல்ல எலெக்ட்ரீசியன்! :)

  செக் புத்தகம் - அதானே முக்கியம்!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா

  நல்ல நகைச்சுவை... இரசித்தேன் த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. இனிமேல் ஜோக்குகள் மட்டும் தான் வருமா? - இராய செல்லப்பா (இன்று போலச் சுவையான ஜோக்குகள் வந்தால் கைதட்டி வரவேற்போம்!)

  பதிலளிநீக்கு
 10. கோபத்தைக் கூட நகைச்சுவையாக்க... உங்களால் மட்டுமே முடியும் ‘தல‘

  பதிலளிநீக்கு