தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 30, 2015

மாரி! நானும் ரௌடிதான் -5

மாரிக்கு அன்று நல்ல நாள். எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தது.

ரயிலில் பயணம் செய்யும் போது கடைசியாக அடித்த அதிருஷ்டத்தை நினதை்து ஆச்சரியம் அடைந்தான் மாரி. 

சாந்தினி சவுக் விடுவதற்கு, முன், முதலாளியை மறுபடியும் சந்தித்தான். நான் மீண்டும் வரவில்லை என்றால் பரவாயில்லையேஎன்றான்.அங்கேயே இருப்பது உனக்கு நல்லது என்றால் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை யில்லை, என்றார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் என்னிடம் .வேலை பார்த்துள் ளாய். என்னிடம் இன்றுதான் ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறாய் கொஞ்சம் பொறு உன் கணக்கைப் பார்த்து பணம் தருகிறேன்என்றார். ரூபாய் இருபத்தொரு ஆயிரத்தை காசோலையாகக் கொடுத்து பாங்கில் பணம் வாங்கிக் கொள் என்றார். ஐயா நீங்கள் எவ்வளவு உயர்ந்த மனிதர்என்று வாழ்த்தி வங்கியில் ரொக்கத்தை வாங்கிக் கொண்டான்”.

டீக்கடை முதலாளி செய்து கொண்டிருந்த வேலை பயங்கரமானது. பாகிஸ்தானில் இருந்து வரும் கன் பவுடரைடீ தூள் பாக்கெட்டில் பேக் செய்து தீவிரவாதி களுக்கு  சப்ளை செய்யும் அபாயகரமான வேலை அது. மாரி மாட்டிக் கொள்ளாமல் தன் முதலாளி மற்றும் கங்காராம் கூட்டத்திலிருந்து விலகி சொந்த ஊர் செல்கி றான்.

பாவம் அவனுக்கு அவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்று தெரியாது. கங்காராம் குழுவினர்கள் கூட்டுக் கொள்ளையர்கள். வெகு விரைவில் போலிஸில் மாட்டக்கூடும். மாரி தப்பித்தான்.

சென்னையில் சனியன்று காலை இறங்கி பத்திரமாக ஞாயிறன்று திருச்சி அடைந் தான்.

வாழ்க்கையில் முதல் முதலாக தன் சொந்தச் செலவில் ஆடம்பரமில்லாத ஆனால் பத்திரமான லாட்ஜில் அறை எடுத்து தங்கினான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அயர்ந்து தூங்கினான்.

மறுநாள் காலை அவன் பணிபுரிந்த வங்கிக்கு சென்றான். மேலாளரை சந்தித்து அவர் தந்துதவிய ஆயிரம் ரூபாயை கொடுத்து நமஸ்காரம் செய்தான். அவர் அதை அவனுக்கே கொடுத்துவிட்டார். உன் சம்பளப் பணத்தை கூட கொடுக்காமல் துரத்திவிட்டேன்என்று அங்கலாய்த்தார்.

சார், நான் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.நீங்கள் தான் உதவ வேண்டும் என்றான். சேமிப்புப் பிரிவு மேலாளரை கூப்பிட்டு ஆவன செய்யச் சொன்னார். விலாசத்தில் சமயபுரத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டு விலாசத்தை கொடுத்தான். மாரியை அறிந்த பழைய கணக்கர்கள், கணக்கை அறிமுகப்படுத்தினார்கள். கையிலிருந்த 61 ஆயிரம் ரொக்கத்தில், 50 ஆயிரத்தை சேமிப்புக் கணக்கில் வரவு வைத்தான். செக்புக், பாஸ் புக் வாங்கிக் கொண்டான்.

அறைக்குச் சென்று, நன்றாக உடையணிந்து கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போனான். 2 உயர்ந்த இனிப்புப் பாக்கெட்டுகளை போகும் போது வாங்கிக் கொண்டான்.நீதிபதி சற்று இளைத்திருந்தார். ஸ்வெட்டர் அணிந்திருந்தார். 


முன்னிரவு பெய்த மழை அவரை வாட்டியது போல. மனைவி பொலிவுற்றிருந்தாள். சமையல் காரியை காபி கொண்டு வரச் சொன்னார்கள். சமையல் செய்ய தனியாக அவர்கள் வீட்டில் ஆள் உண்டு. நீதிபதியின் மகள் மாரியை பார்க்க வந்தாள். அவளைப் பார்த்தவுடன் மாரி ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளானான்.

தொடரும்

டிஸ்கி:மாரி,ரயிலில் தில்லி செல்லும்போதும்,திரும்பி வரும்போதும் பயணத்தில் சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கக் கூடும்; வித்தியாசமான மனிதர்களைச்  சந்தித் திருக்கக்கூடும்;ஏனெனில் பயணங்கள் எப்போதுமே அப்படிப்பட்டவைதாம்,அது போன்ற இரு பயண அனுபவங்கள் இதோ......

18 கருத்துகள்:

 1. "அதிர்ச்சிக்கு மேல் என்ன அதிர்ச்சி...?" என்று ஆவலுடன் உள்ளேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. // அவளைப் பார்த்தவுடன் மாரி ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளானான்.//

  அவளுக்கு திருமணமாகிவிட்டதோ?
  இல்லை அவள் விதவைக்கோலத்தில் இருந்தாளோ?

  பதிலளிநீக்கு
 3. என்ன அதிர்ச்சியோ தொடர்கிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 4. அதிர்ச்சி மாரிக்கு மட்டுமல்ல.... எங்களுக்கும்...

  பதிலளிநீக்கு
 5. அதே வங்கியில் டெபாசிட் செய்தால் 'ஏது அவ்வளவு பணம்?' என்று கேள்வி வந்து என்று மாட்டிக் கொள்ள மாட்டானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியில் நிகழ்ந்தது அந்த கிளையிலேயே அமுக்கி விட்டார்கள்;.திருச்சியில் என்ன தெரியும்?
   நன்றி ஸ்ரீராம்!

   நீக்கு
 6. மாரி பெய்யும் இக்காலத்தில் இந்த மாரி கதை கேட்க நல்லா இருக்கு. இதுவரை அவனுக்கு எல்லாமே சாதகமாகவே .... சரியாகத்தான் போய்க்கிட்டுருக்கு. அவனிடமும் சில நல்ல குணங்கள் தெரிகிறது.

  பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் .... கூட்டாளிகளால் அவன் அடையாளம் காட்டப்படுவான். அதுவும் அவன் செய்யாததோர் தப்புக்கு மாட்டுவான் என நினைக்கிறேன். போகப்போகப் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 7. விடுபட்ட இரண்டு பகுதிகளையும் சேர்த்து இப்போது தான் படிக்க முடிந்தது.....

  ஏன் அதிர்ச்சியானான் என்பதைத் தெரிந்து கொள்ள மேலும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. ஒருவேளை அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதோ....இல்லை வேறு ஏதேனும்..ம்ம்ம் தொடர்கின்றோம் அறிய...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா சென்னைப் பித்தன் அவர்களே !

  மாரியின் பயணங்கள் விறுவிறுப்பாகவே செல்கிறது தொடருங்கள் ஆவலுடன் நாங்களும் தொடர்கிறோம் மிக்க நன்றி !
  தமிழ்மணம் +1

  பதிலளிநீக்கு
 10. மாரி பற்றி எழுதிய நீங்களும் மாரியின் கோரத் தாண்டவத்தில் பதிவு போட இயலாத அளவுக்கு மாட்டிக் கொண்டு விட்டீர்கள் போலிருக்கே ?சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க ,அப்போதான் எனக்கு நிம்மதி !

  பதிலளிநீக்கு