தொடரும் தோழர்கள்

நகைச் சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச் சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 08, 2015

விடுமுறை,சிரி(சிந்தி)முறை!



ஒரு மனிதனைச் சுமந்தவாறு ஒரு குதிரை வெகு வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

 அந்த மனிதன் ஏதோ அவசர  வேலையாகச் செல்வது போல் தோன்றியது.

அதைப் பார்த்த ஒருவன் கத்திக் கேட்டான் ”இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்?”

குதிரை மீதமர்ந்திருந்தவன் சொன்னான்”என்னைக் கேட்காதே! குதிரையைக் கேள்!”

.சிரிப்பு வருகிறதா:அவன் முட்டாள் எனத் தோன்றுகிறதா?

என்ன சொல்கிறது இந்தக்கதை?

அந்தக் குதிரைதான் நமது பழக்கங்கள்.

நமக்குள் ஊறிப்போன சிந்தனைகள்

அவை நம்மை இழுத்துச் செல்கின்றன;நாம் அவற்றை செலுத்துவதில்லை!

ஏன் செய்கிறோம் என்று யோசிக்காமலே ல செயல்களைச் செய்கிறோம்.

கொஞ்சம் நின்று யோசித்தால் புரியும் எப்படி நாம் பொருளற்ற செயல்களை எந்திரத் தனமாக செய்து கொண்டிருக்கிறோம் என்று!

சவாரி செய்பவனுக்குக் குதிரை எசமான் அல்ல;அவன்தான் குதிரைக்கு எசமான்!

பழக்கங்கள் நமக்கு எசமானர்கள் அல்ல்;நாம்தான் பழக்கங்களுக்கு எசமானர்கள்!

இது ஒரு ஃஜென் கதை!

பி.கு. ஆங்கிலத்தில் habit  என்பது பற்றி இவ்வாறு சொல்வார்கள்...

//cut off h, a bit  remains
cut off a,  bit remains
cut off  b, it remains //