இன்று உலக கழிப்பறைத் தினம்!
அதற்குப் பொருத்தமாக ஒரு பதிவு தேடினேன்.
.......................
கிளப்பில் இருந்தபோது கழிப்பறை செல்ல நேர்ந்தது.
அடுத்தடுத்து இரண்டு கழிப்பறைகள்
ஒன்றினுள் சென்று அமர்ந்தேன்.
அடுத்த கழிப்பறையில் இருந்து ஒரு குரல்
கேட்டது”எப்படி இருக்கீங்க?சௌக்கியமா?”
யாரடா இது கக்கூசில் வந்து குசலம்
விசாரிப்பது?
இருந்தாலும் பதில் அளித்தேன் ”சௌக்கியம்தான்”
“என்ன பண்ணிட்டிருக்கீங்க?”குரல்
தொடர்ந்தது.
இது என்ன மடத்தனமான கேள்வி?கழிப்பறையில்
என்ன செய்வார்கள்?என்ன பதில் சொல்வது?
பொதுவாகச் சொன்னேன்”சும்மாதான்
இருக்கேன்”
இதென்ன தொந்தரவாகப் போய் விட்ட்து?அடுத்த
கேள்வி வருமுன் போய்விட வேண்டும்!
மீண்டும் குரல்”இப்ப நான் வரலாமா?”
ஐயோ!என்ன கஷ்டகாலம் இது?எதையாவது
சொல்வோம்”இன்னும் முடிக்கலை”
இப்போது குரல் மீண்டும் கேட்டது”நான்
உங்கிட்ட அப்புறம் பேசறேன்.இங்க எவனோ முட்டாள் அடுத்த கக்கூசில் இருந்து உன்னிடம்
நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்!”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நமது ரயில்களில் கழிப்பறை எப்படி வந்தது தெரியும?
இந்திய ரயில்வே ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கடிதத்தைப் படித்தால் தெரியும்!
நமது ரயில்களில் கழிப்பறை எப்படி வந்தது தெரியும?
இந்திய ரயில்வே ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கடிதத்தைப் படித்தால் தெரியும்!