தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

உணவகம்,சாப்பாட்டுக்கடை,மெஸ்.....ஏதோ ஒன்று!



இப்போதெல்லாம் பல பதிவர்கள்,பல  உணவகங்களில்,சாப்பாட்டுக் கடைகளில், மெஸ்களில்,வித விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு விட்டு அது பற்றி எழுதி வருகிறார்கள்.

நான் வீட்டைத் தவிர வெளியே எங்கும் சாப்பிடுவதில்லை.அது எனது வயிற்றுக்கு ,பர்ஸுக் கும்தான், ஒத்துக் கொள்வதில்லை(ஓய்வூதியத்தில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது ஐயா!)

ஆனால் முன்னோரு காலம் இருந்தது.வீட்டில் இருந்தாலும் பகல் உணவு,,சில நாட்களில் ஒரு மாறுதலுக்காக வெளியில் சாப்பிட்ட உணவு,தனித்திருந்த போது ஓட்டல்களில்  மூன்று வேளை உணவு,என்று பல ஊரில் பல உணவகங்களில் சாப்பிட்ட காலம்!

அப்படிப்பட்ட சில அனுபவங்களின் தொகுப்பே இந்தப் பதிவு!இங்கு உணவு பற்றி மட்டுமின்றி, தொடர்புடைய வேறு வடிவான, செய்திகளும் கதைக்கப்படும்..(டி.வி.யில் தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தன் அல்லவா!)

மறக்க முடியாத மதுரை கணேஷ் மெஸ்..வங்கி ஊழியர்கள் பலர் காலை 8.30 க்கெல்லாம் சாப்பாடு சாப்பிடும் இடம்.வயிற்றைக் கெடுக்காத 3 கோர்ஸ் சாப்பாடு;கூடவே வத்தக் குழம்பு,மிளகு குழம்பு,வெந்தயக் குழம்பு என்று ஏதாவது ஒன்று.காசு கொடுத்தால் ஸ்பெசல் ஐட்டம் காலிப்பூ,,பட்டர் பீன்ஸ்  என்று சில. விரும்பிக் கேட்பவர்களுக்கு மதிய உணவுக்கு பொட்டலம் தயிர்சாதம்.எப்போதுமே அனைவருக்கும் தனிக் கவனிப்பு(ஒரு முறை என் அன்னையை அழைத்துச் சென்றபோது,”மாமி  ரசம்;உங்களுக்கு வேண்டாம்,பூண்டு ரசம்என்று தவிர்த்தார்கள்.)

அதெல்லாம் அந்தக்காலம்!ஆனால் என் நம்பிக்கை,மதுரை என்றும் மாறாதுபிரகாஷ்தான் சொல்ல வேண்டும்!


சரி காலை சாப்பாடு முடிந்தது.மதியம் 2 மணிக்கு உணவு நேரம்.வேலையை முடித்து நாலு பேர் ஒரு குழுவாகப் புறப்படும்போது மணி 2.30 ஆகி விடும்.திருமலை நாயக்கர் மகாலின் எதிரே ஒரு சிறிய ஓட்டல்….”பெஸ்ட் கிருஷ்ண பவன்”.அந்த நேரத்தில் டிஃப்ன் கிடைக்கும். இட்லி,பொங்கல் ,தோசை இவ்வளவுதான்.உட்கார குட்டையான பெஞ்சுகள்.உணவை வைக்க உயரமான பெஞ்சுகள்.மொத்தம் 20  பேர் சாப்பிடலாம்.பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள சட்னி, சாம்பார், கேட்டால் நாட்டுச் சர்க்கரையும் கொடுப்பா ர்கள்..தோசைக்கும்!


எங்கள் குரல் கேட்டதும் மாஸ்டர், கிச்சனிலிருந்து வெளியே வந்து வாயெல்லாம் பல்லாகவாங்கோஎன்பார்.இடையில் ஒரு துண்டு அணிந்திருப்பார்.கருப்பாக இருக்கும்.அது கருப்பு இல்லை.பல நாட்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட அழுக்கு! உடலில் வேர்வை ஓடிக் கொண்டி ருக்கும்!சுவரில் சாய்ந்து முதுகைத் தேய்த்துக் கொண்டிருப்பார்.


எங்கள் குழுவில் குறும்பன் ஒருவன் அவரைப் பார்த்துமாஸ்டர் !நாலு ஸ்பெசல்என்று சொல்லி உடல் வேர்வையை வழித்துக் கல்லில் தெளிப்பது போல் சைகை செய்து காட்டுவான், அவர் சிரித்துக் கொண்டே உள்ளே போவார்.வந்து சேரும் தோசைகள் பிரமாதமாக இருக்கும்!ஸ்பெசல் ஆச்சே!இட்லி,பொங்கல் எல்லாம் சுவையாக இருக்கும்!


அதெல்லாம் அந்தக்காலம்.ஆனால் மதுரையில் இன்னும் மல்லிகைப்பூ இட்லி கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்.நான் அங்கு இருக்கும்போது ஒரு உணவகத்தின் பெயர்என்னப்பா இருக்கு?இட்லிங்க”!!


எங்கள் வங்கியின் அருகே இருந்த ஓட்டல்பேலஸ் கபே”.தோசை கொஞ்சம் தடியாக  மெத்தென்று இருக்கும்..வெள்ளையப்பம் என்றால் அங்குதான் சாப்பிட வேண்டும். இப்பொதெல்லாம்  ஓட்டலில் வெள்ளையப்பம் எங்கு கிடைக்கிறது?


எனக்குப் பயன்படாத சில உணவகங்கள் மதுரையில் இரவு திறந்து விடும்.போர்டில் எழுதும் பேரே கவித்துவமாக இருக்கும்….”அந்திப் பொழுது ஆனால் அசைவ அங்காடி!”உணவின் ருசி பற்றி எனக்குத் தெரியாது


கோரிப்பாளையத்தில் இருந்த ஒரு காபி பாரில் காபி அருந்த மாலை கூட்டமோ கூட்டம்!பல கடைகளில் எழுதி வைத்திருப்பது போல்நினைவில் நிற்கும் காபி


இன்னும் சில மறக்க முடியாத உணவு அனுபவங்கள்…….திருச்சியில் இரவு நேரத்தில் நானும் புலவர் கீரனும் சேர்ந்து  ரோட்டோரத்தில் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட்ட  இட்லி ,தோசை, ஸ்ரீரங்கத்திலிருந்து ஜட்கா வண்டியில் வந்து கடிகாரக் கடை வாசலில் கடை விரிக்கும் ஐயங்காரின் சர்க்கரைப் பொங்கல் புளியோதரை வகையறாக்கள், மாயவரம் லாட்ஜில் செவ்வாய் இரவு கிடைக்கும் பொரித்தகுழம்பு,அம்பி ஐயர் ஒட்டலில் மதியம் கிடைக்கும் ஸ்பெசல் இனிப்பு,காரம்……எப்படி மறக்கும்!

பின்னொரு பதிவில் வட இந்திய உணவு அனுபவங்கள்!காத்திருங்கள்!


36 கருத்துகள்:

  1. மதுரையின் பல ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறீர்கள்.... நினைவலைகள் என்றும் இனிமை ஐயா....

    பதிலளிநீக்கு
  2. சில மறக்க முடியாத உணவு அனுபவங்கள்
    வடிவாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  3. பதிவைப் படித்ததும் வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமேல் உணவகத்தில் சாப்பிட்ட எனக்கும், பழைய அனுபவங்கள் நினைவில் அலை மோதுகின்றன!
    //”என்னப்பா இருக்கு?இட்லிங்க”!// இது போன்ற தலைப்பில் ‘வடை, தோசை, பொங்கல், பூரியும் இருக்கு’என்ற குறிப்போடு ஒரு பதிவை 2007 முதல் 2007 வரை பார்த்ததாய் நினைவு! இந்த பின்னூட்டம் மூலம் அந்த பதிவரை(மதுரை அன்பரை) திரும்பவும் பதிவிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைக்காரர் மீண்டும் வருவார்!
      நன்றி சபாபதி சார்

      நீக்கு
  4. இனிமையான நினைவலைகள்.....

    வட இந்திய உணவு பற்றிய நினைவுகளைப் படிக்க ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அண்ணே...ஓட்டல் சாப்பாடு ஓஹோ

    பதிலளிநீக்கு
  6. சுவரில் சாய்ந்து முதுகைத் தேய்த்துக் கொண்டிருப்பார்.//பாவம் அவருக்கு தெரிந்தால் வருத்தபடுவார்

    பதிலளிநீக்கு
  7. // மதுரை கணேஷ் மெஸ்..// என்ன வாத்தியார் மதுரையில மெஸ் வச்சிருந்தாரா

    பதிலளிநீக்கு
  8. ரஸித்தேன், ஐயா. நல்லா இருக்கு.

    //மாயவரம் லாட்ஜில் செவ்வாய் இரவு கிடைக்கும் //

    திருச்சியில், இன்று வரை, அதே பிராச்சீன சம்ப்ரதாயங்களுடன் நடைபெறும் ஒரே ஹோட்டல் இது மட்டுமே. ;)

    பதிலளிநீக்கு
  9. ஐயாவும் ஹோட்டல் பத்தி பதிவு போட்டாச்சா?!

    பதிலளிநீக்கு
  10. ஹோட்டல் அனுபவங்கள் அருமை. வட இந்திய உணவு அனுபவங்களையும் படிக்க ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் மதுரையில் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆனால் மனைவியும் கூடவே இருந்ததால் ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எங்கள் வங்கி மேல மாசி வீதியில் இருந்தது. அங்கிருந்து பொடி நடையாக நடந்தால் முக்கில் ஒரு ஹோட்டல். கீதா பவன் என்று நினைவு. எப்போதாவது இரவு வெகு நேரம் வரை கிளையில் வேலை இருந்தால் ஆறு மணிபோல் அங்கு சென்று டிபன் பண்ணுவது வழக்கம். அங்கு காப்பிதான் பிரசித்தம். இன்றைய சரவண பவன் காப்பிபோல. . மதுரையில் இருக்கும்போது ருசித்துப் பார்க்காத மதுரை முனியாண்டியில் சென்னைக்கு மீண்டும் மாற்றலாகி வந்தபோது (தங்கசாலை தெரு) பகலில் சாப்பிட்ட அனுபவமும் உண்டு. உங்கள் பதிவு அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வந்தது. ஒவ்வொரு மூன்றாம் வருடமும் ஊர் மாறி செல்வது ஒரு பெரிய தொல்லைதான் என்றாலும் அதில் கிடைத்த அனுபவங்கள் பல மறக்க முடியாதவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேலஸ் ரோட்டில் கூட உங்கள் வங்கிக் கிளை இருந்ததே!
      எத்தனை முறை பேக்கிங்&அன்பேக்கிங்?அதுவும் சுவாரஸ்யம்தான்
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
  12. ஓட்டல் அனுபவங்களின் சுவை மிக சிறப்பு! அருமையான நினைவலைகளின் தொகுப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. கல்யாண சமையல் சாதம் போல உங்கள் பதிவு ரொம்பவும் ருசி. திருச்சியில் நீங்கள் சொல்லும் கடைகள் இருந்த ஞாபகம் வருகின்றன. மாயவரம் லாட்ஜில் இப்போது டிபன் மட்டும்தான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து வந்த திருச்சி மதுரா லாட்ஜ் சாப்பாடு இன்றும் உண்டு. நமது VGK சார் இருக்கும் அபார்ட்மெண்ட்டிற்கு அடுத்த கட்டிடம் இதுதான்.

    பதிலளிநீக்கு
  14. ருசிக்கச் சொல்லும் நினைவலைகள்.... அருமை....

    பதிலளிநீக்கு
  15. .//நான் அங்கு இருக்கும்போது ஒரு உணவகத்தின் பெயர்”என்னப்பா இருக்கு?இட்லிங்க”!!// ஹா ஹா ஹா...

    பழைய நினைவுகளை சுவாரசியமாக எழுதியுள்ளீர் ..

    பதிலளிநீக்கு
  16. .வேற ஊருக்கு போனா வழியில்லாம ஹோட்டலில் சாப்பிடுவாங்க. போற போக்க பாத்தா இனிமே வீட்டிலேயே யாரும் சமைக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒரு சேஞ்சுக்காக ஹோட்டலில் சாப்பிட்டது போக சேஞ்சுக்காக எப்பவாவது வீட்டில சமைக்கிற காலம் வெகு தூரத்தில இல்லை

    பதிலளிநீக்கு