தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 01, 2013

பதிவர் திருவிழா...ஒரு பார்வை!



ஆகஸ்டு மிக முக்கியமான மாதமாகி விட்டது.

தாய்த் திருநாடு அந்நியர் பிடியிலிருந்து விடுதலை பெற்ற மாதம்.

இப்போது பதிவர் திருவிழாவுக்கான மாதம்.

செப்டெம்பரில்தானே திருவிழா எனக் கேட்காதீர்கள்.

ஆகஸ்டில் என்றுதான் ஆசைப்பட்டார்கள்.

ஆனால் முன்பே சொன்னது போல் வலுவான காரணங்களால் செப்டம்பர் முதல் தேதி என்று முடிவானது.

சென்ற ஆண்டு வரலாறு காணாத பதிவர் மாநாடு ஆகஸ்டு 26 இல்.

எனக்குத் தெரிந்து முதல் பதிவர் திருவிழா—பதிவர் பட்டறை என்றழைக்கப்பட்டது- 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி.

சென்ற ஆண்டு பலரின் அவநம்பிக்கைகளை உடைத்து மிக வெற்றிகரமாக நடந்தேறியது விழா.

ஒரு சிறிய விழாவுக்காக என் இல்லத்தில்  புலவர் ஐயா போட்ட விதை எழுச்சி மிக்க இளைஞர் களின் அயராத உழைப்பால்  ஒரு வெற்றிகரமான,பிரம்மாண்டமான விழாவாக ,அனைவரும் பாராட்டும்படி நடந்தேறியது.


இந்த ஆண்டு ஜூன் முதல் நாளன்று புலவர் ஐயாவின் இல்லத்தில் திருவிழாவுக்கான விதை விழுந்தது.இத்துணை விரைவில் அது விழுதுகள் பரப்பி ஆலமரமாக வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குக்காரணம் கைகோத்துக் களத்தில் இறங்கியிருக்கும் இளைஞர் பட்டாளம்தான்.

இதுவரை ஒரு நாள் ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே என்னால் கலந்து கொள்ள முடிந்தது.”ஒரு நாளும் இல்லாமத் திருநாளைக்குப் போனாளாம்,திருநாளும் வெறுநாளாப் போச்சாம்” என்று சொல்வார்கள்.அதுபோலத்தான் அன்று மழைகாரணமாகப் பலர் வர இயலவில்லை!சென்ற ஆண்டும் ஜூலை முதல் நாளன்று ஒரு டாடா சுமோவைக் காலால் தூக்கியெறியப்போய் (சரிதானே சிவா !)காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று .

இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில்,உறுதியாய் வருபவர் எண்ணிக்கை சதத்தைத் தொடப் போகிறது.இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக விழா அமையப் போகிறது என்பதற்கான ஒரு பிள்ளையார் சுழியே இது.

பதிவர் திருவிழா பற்றிய தகவல்கள் அனைத்தும்  “தமிழ் வலைப்பதிவர் குழும”த்தின் இணைய   தளத்தில் அவ்வப்போது வெளியாகும்.

தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் செப்டெம்பர் முதல்நாளன்று சென்னையில் கூடுவதால்,தென் தமிழகத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர ஒரு அகத்தியர் தேவைப்படுவாரோ!


26 கருத்துகள்:


  1. அல்டிமேட் ஸ்டார் அஜித் அழைக்கிறார்...

    சென்னை நோக்கி படையெடுங்கள் பதிவர்களே..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உங்கள் வருகையால் இன்னும் பிரம்மாண்டம்ஆகட்டும்
      நன்றி தனபாலன்

      நீக்கு
  3. கடந்த ஆண்டைவிட பதிவர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
    அனைவரும் வருக!

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் அனைவரையும் கண்டு பேசி மகிழலாம்.

    பதிலளிநீக்கு
  5. இந்த முறை பதிவர் சந்திப்பு கண்டு தலைநகர் சென்னை மிரண்டு திரும்பி பார்க்க வேண்டும், பதிவுலகம் என்று ஒன்று இருக்கிறது என்பதே தெரியாத நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன்...!

    பதிலளிநீக்கு
  6. இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில்,உறுதியாய் வருபவர் எண்ணிக்கை சதத்தைத் தொடப் போகிறது.இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக விழா அமையப் போகிறது என்பதற்கான ஒரு பிள்ளையார் சுழியே இது.


    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  7. நிகழ்ச்சி முடியும் வரை எந்தக் காரையும் காலால் தள்ள முயற்சிக்க வேண்டாம் ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  8. 2007ன்னு நினைக்கிறேன். பாலபாரதி முயற்சியால முதல் பதிவர் கூட்டம் சென்னையில் அப்போது கிழக்கு பதிப்பகம் அலுவலகம் இருந்த கட்டிடத்திற்கு எதிராக இருந்த ஒரு ஹாலில் நடந்தது. இருபது, இருபத்தைந்து பேர் மட்டும் வந்திருந்தார்கள். தமிழ்மணத்திலிருந்து இருவர் வந்திருந்து பதிவர்களின் குறைகளை கேட்டார்கள். அதன் பிறகு சில பல காரணங்களுக்காக அது நடைபெறாமல் இருந்தது. சிறிய அளவில் சென்னை கடற்கரை மணலில் நடந்த கூட்டங்களைத் தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஏதும் நடக்கவில்லை.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய துரதிர்ஷ்டம் அன்று காலை ஒரு திருமணம். பகலுக்கு மேல் வர முடியுமா என்று பார்க்க வேண்டும். விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னது பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பிரம்மாண்டமான பதிவர் பட்டறை பற்றி.நான் போகவில்லை.பிஒன்னர் ஒரு முறை டிரைவ் இன்னில் சந்திப்பு நடந்தது.,பாலபாரதி,மா.சிவகுமார் ஏற்பாட்டில்;போயிருந்தேன்.தமிழ் மணம் டீசர்ட்டும் கிடைத்தது
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
  9. வாழ்த்துக்கள்! விழாவினை சிறப்பிப்போம்!

    பதிலளிநீக்கு
  10. விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்.....

    பதிலளிநீக்கு
  11. விழா சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு