நாஞ்சில் மனோ அவர்களின் அன்புக்
கட்டளையை நிறைவேற்றும் முயற்சி இது
எதற்காகப் பதிவு எழுதுகிறோம்?
நமது எண்ணங்களுக்கு
ஒருவடிகால் வேண்டுமென்பதற்காக.
தொடக்கத்தில் நாம் எழுதுவதில் நமக்கு நிச்சயம்
ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.
ஆனால் போகப்போக,நமது நோக்கம் ஆத்ம திருப்தியிலிருந்து விலகி,பேருக்கும்
புகழுக்கும் மாறி விடுகிறது.
எதையாவது எழுதி தமிழ் மணம் ரேங்க்கில்
முன்னேற வேண்டும் என எண்ணம் பிறக்கிறது.
அதிக பின்னூட்டங்களும்,அதிக ஓட்டுக்களும் மகிழ்ச்சி தர எழுதுவதன்
மகிழ்ச்சி காணாமல் போகிறது
விளைவு... ஆத்ம திருப்தி என்பது போய் ஒரு
அல்ப சந்தோசமே மிஞ்சுகிறது.
இப்போது எழுதும் பதிவுகள் எனக்கு ஒரு சந்தோசத்தைத்
தரலாம்.
ஆனால் தொடக்ககாலப் பதிவுக்ளே ஒரு ஆத்ம திருப்தியைத்
தந்தன.
ஆனால் அன்றும்
,இன்றும் இனி என்றுமே எனக்கு ஆத்ம திருப்தி தரக்கூடிய என் வலைப்பூ ”நமக்குத்
தொழில் பேச்சு”
சென்னைப் பித்தனாக அல்ல;மதுரை சொக்கனாக!
அதிக அளவில் எழுதுவதில்லை.
இப்போது பல மாதங்களாக எழுதுவதே இல்லை.
ஆனால் இன்றும் பழைய பதிவுகளைப் படிக்கும்போது,பயனுள்ள பதிவு எழுதியுள்ளோம் என்று
எனக்குள்ளே ஒரு திருப்தி ஏற்படுகிறது.
மனோவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு,மதுரை சொக்கனாகத் தொடர்கிறேன்
அந்த வலைப்பூவின் முதல் பதிவுதான்…..
“இரண்டல்ல(அத்வைதம்)”
திருமந்திரத்தின் ஒரு பாடலை எடுத்துக் கொண்டு ஒரு குட்டிக்கதை
மூலம் விளக்கியிருந்தேன்.
மன நிறைவுடன்.
அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் அளித்தவர்கள்…
திருவாளர்கள் ஜீவி,மாசிலா,உண்மைத்தமிழன்,சீனா ஆகியோர்.
பிரபல பதிவர் உ.த.அண்ணாச்சி அவர்கள்
எழுதினார்கள்” ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுகளில் நிறைய
பதிவுகள் வலம்
வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளின்
வருகை எங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பலமாக
இருக்கக்கூடும். வருக.. வருக..
வரவேற்கிறேன்..”
இந்தப்பின்னூட்டம் எனக்கு மிகுந்த
ஊக்கத்தை அளித்தது.
இது தவிர பொதுவாக என் திருமந்திரப்
பதிவுகளைக் குறித்து, திரு.மா.சிவகுமார்,நாமக்கல் சிபி,சீனா அய்யா ஆகியோர்
பின்னூட்டம் அளித்திருந்தனர், அதற்கு
முந்தைய அறிமுகப் பதிவில்.
இந்தப் பதிவைத் தொடராமல் நிறுத்தியதில்
எனக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கிறது.
தொடர ஆசை இருக்கிறது.
அவன் அருள் இருந்தால் நடக்கும்.
(நாஞ்சிலார் கேட்டுக் கொண்டபடி சென்னை
பித்தனாக எழுதாத காரணம்,நான் பேச நினைப்பதெல்லாம் பதிவு முதலில்’ பித்தன்’ என்ற
பெயரில் ,2007 இல்முகுந்தின் tamilblogs.com இல் எழுதி வந்தேன். பின் blogspot க்கு மாறினேன் சென்னை பித்தனாக.. அந்த
வலைப்பூ காணாமல் போய்விட்டது.எனவே முதல் பதிவு எது?!)
நான் யாரையும் அழைக்கவில்லை.
விருப்பமுள்ள எவரும் தொடரலாம் .
நான் யாரையும் அழைக்கவில்லை.
விருப்பமுள்ள எவரும் தொடரலாம் .
//ஆனால் போகப்போக,நமது நோக்கம் ஆத்ம திருப்தியிலிருந்து விலகி,பேருக்கும் புகழுக்கும் மாறி விடுகிறது.//
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரியே.
// தொடர ஆசை இருக்கிறது.//
என சொல்லியிருக்கிறீர்கள். இனி வருங்காலத்தில் ‘நமக்குத் தொழில் பேச்சு’ வலைப்பதிவில் ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும் எதிர்பார்க்கலாமா?
முயற்சி செய்கிறேன்!
நீக்குநன்றி சார்
இரண்டு அவதாரம் எடுத்தவர் என்று சொல்லுங்கள்
பதிலளிநீக்குஇரண்டு?
நீக்குநன்றி ரூபக்
தொடர ஆசை இருக்கிறது.
பதிலளிநீக்குஅவன் அருள் இருந்தால் நடக்கும்.
தொடர இனிய வாழ்த்துகள்..!
நன்றி இராஜராஜெஸ்வரி
நீக்கு1990ல் நீங்கள் சொல்லியவாறு நானும் ஒரு ஆத்ம திருப்திக்காகத்தான் துவங்கினேன் .
பதிலளிநீக்குமுதன் முதலில் கூகிள் நிறுவனம் ப்ளாக் அறிமுகமான போது நான் துவங்கியது முதல்
இன்று வரை ஒரு 15 வலைகளில் எனக்குத் தோன்றிவற்றை எல்லாம் எழுதும் சுதந்திரம்
இருக்கிறது.
இரண்டாவது எனது ஆடியன்ஸு முகம் நான் முகம் அறியா விருந்தினர்கள். அவர்கள் அவரவர் துறைகளிலே
ஜாம்பவான்கள். இதுகாறும் நமது துறையைச் சார்ந்த நபர்களிடமே கருத்துப் பரிமாற்றம் செய்து
கொண்டிருப்பதை விட, பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் ஒரு ரிலாக்ஸ்ட் அட்மாஸ்பியரில்
எழுத்துக்கள் மூலம் தமது கருத்துக்களை சொல்வதில் அவர்களது பதில்களை எதிர்பார்ப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பில் யாருக்கும் லாபமோ நட்டமோ இல்லை என்பதால், உள்ளதை உள்ளபடி
உரைப்பதிலோ அல்லது மற்றவர்களை உணர்வதிலோ தயக்கமோ சுணக்கமோ இல்லை.
எல்லாவற்றையும் மேலாக, புதிய நண்பர்கள்.
சாதனையாளர்கள். அவரவர் துறைகளில் வித்தகர்கள்.
புதிய வானம் , புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது. தினம் தினம் இப்பதிவு உலகிலே.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
நீங்களே ஒரு சாதனையாளர்தானே!
நீக்குநன்றி
/// இந்தப்பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது... ///
பதிலளிநீக்குஇதை இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்.... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
நன்றி தனா
நீக்குரைட்டு.. அடுத்த தொடர்பதிவா.. முடியல...
பதிலளிநீக்குதொடரும் தொடர் பதிவுகள்
நீக்குநன்றி சௌந்தர்
//பிரபல பதிவர் உ.த.அண்ணாச்சி அவர்கள் எழுதினார்கள்” ஐயா ஆன்மிகம் என்பதை கிண்டல் செய்துதான் வலைப்பதிவுகளில் நிறைய பதிவுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளின் வருகை எங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு பலமாக இருக்கக்கூடும். வருக.. வருக..
பதிலளிநீக்குவரவேற்கிறேன்..”//
இம்மாதிரியான கருத்துக்கள் புதிதாய் எழுத வருபவர்களுக்கு ஒரு ஊக்க மருந்து.... பகிர்வுக்கு நன்றி...
நிச்சயமாக!
நீக்குநன்றி ஸ்கூல்பையன்
வாழ்த்துக்கள் தல..
பதிலளிநீக்குநன்றி கருண்
நீக்குமிக்க நன்றி தல.....!
பதிலளிநீக்குஅப்போ இனி "சென்னை தல"ன்னு கூப்பிடலாம் ஹா ஹா ஹா....
அடையார் அஜித் னு ஏற்கனவே கூப்பிட்டாச்சு.
நீக்குஇப்ப சென்னை தல....சரிதான்!
பதிலளிநீக்குநமது எண்ணங்களுக்கு ஒருவடிகால் வேண்டுமென்பதற்காக.
தொடக்கத்தில் நாம் எழுதுவதில் நமக்கு நிச்சயம் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.//
ஆச்சர்யமான உண்மை...!
ஆம் மனோ! அந்த திருப்தி இப்போது இல்லை
நீக்குவிளைவு... ஆத்ம திருப்தி என்பது போய் ஒரு அல்ப சந்தோசமே மிஞ்சுகிறது.//
பதிலளிநீக்குமொக்கைக்கு மொக்கையே கமேண்ட்சாக வருகிறது ஹா ஹா ஹா...
சரிதான் தல...!
ஹா ஹா
நீக்குஆனால் இன்றும் பழைய பதிவுகளைப் படிக்கும்போது,பயனுள்ள பதிவு எழுதியுள்ளோம் என்று எனக்குள்ளே ஒரு திருப்தி ஏற்படுகிறது.//
பதிலளிநீக்குஇது ஒன்றே போதுமே தல....!
கரெக்ட் மனோ
நீக்குஎனது அழைப்பை ஏற்று பதில் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி தலை.....வாழ்க வளமுடன் சுகமுடன்....
பதிலளிநீக்குநன்றி,நன்றி,நன்றி மனோ
நீக்குஉண்மைதாங்க. ஆரம்பத்துல எழுதறப்போ இருந்து ஒருவித மனநிறைவு காலப்போக்கில் குறைந்து மறைந்தே போகத்தான் செய்தது. அதனால்தானோ என்னவோ நானும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பதிவுலகை விலகியே இருந்தேன். ஆனால் எழுதுவது, நம் எழுத்தை பலரும் படிக்கிறார்களே என்கிற ஒருவித போதை என்னை மீண்டும் மீண்டும் இங்கு இழுத்து வந்துள்ளதையும் மறக்க முடியாது.
பதிலளிநீக்குஆன்மீக பதிவுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லையென்பதும் நிஜமே. நானும் என் உள்ளத்திலிருந்து என்ற வலைப்பூவில் பல ஆன்மீக பதிவுகளை எழுதியுள்ளேன். அதிகபட்சம் இருபது பேர், அவர்களுள் பெரும்பாலும் என்னுடைய நெருங்கிய அலுவலக நண்பர்கள் என்பது வேறு விஷயம், படித்தால் அதிகம். ஆகவே நாளடைவில் அதில் எழுதுவதும் குறைந்துபோனது.
உங்களுடைய பதிவுகள் பலவும் சுருக்கமாக, to the point, என்பார்களே அதுபோல் இருப்பது மிகவும் பிடித்திருக்கிறது. சில நொடிகளில் படித்துவிடக் கூடிய சிறிய ஆனால் அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள்.
இது போதைதான்!
நீக்குநன்றி சார்
பதிவுகள் எழுதுவதைப் பற்றிய உங்கள் எண்ணம் தான் இப்போது அனைவர் உள்ளத்திலும்......
பதிலளிநீக்குஆத்ம திருப்திக்காக எழுதுவது குறைந்து அல்ப சந்தோஷத்திற்காக எழுதுகிறோம்.....
என்னையும் எழுத அழைத்திருக்கிறார் ராஜி.... எழுதணும்.....
எழுதுங்கள்
நீக்குநன்றி வெங்கட்
ஆனால் இன்றும் பழைய பதிவுகளைப் படிக்கும்போது,பயனுள்ள பதிவு எழுதியுள்ளோம் என்று எனக்குள்ளே ஒரு திருப்தி ஏற்படுகிறது.//
பதிலளிநீக்குஅதுதான் சந்தோஸம் ஐயா அது போதும்!
ஆம் தனிமரம்
நீக்குநன்றி