மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை.
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்.
உணவு சார்ந்த இடம் எது?
முதல் இடம் நம் வீட்டுச் சமையலறைதான்!
பின்னர் உணவோடு தொடர்புடைய உணவகம்,சாப்பாட்டுக் கடை,மெஸ் …….
உணவு என்பது ஐம்பூதங்களையும் அடக்கியது!
நிலம்….தானியங்கள்,காய்கறிகள் எல்லாம் விளையுமிடம் ;உணவுடன் நிச்சயம் தொடர்புடைய இடம்!
நீர்….உணவாக்க நீர் வேண்டும்.உணவாக்க உதவும் நீர்,தானே உணவாகவும் ஆகி விடுகிறது.
வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்….
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை”
தைத்திரீய உபநிடதம் சொல்கிறது “ஆபோ வா அன்னம்”.ஆப: என்றால் வடமொழியில் நீர்.
நீரே உணவாகிறது என்பதே பொருள்.
நெருப்பு—உணவாக்க நெருப்பு அவசியம்.நெருப்பில்லாத சமையல் செய்கிறோம் இப்போது என்று சொன்னாலும் அடிப்படையான சூடு இன்றி அடுதல் ஆகுமோ!
காற்று—இது எவ்வாறு உணவொடு தொடர்பு படுகிறது?ஒரு முறை ஒரு பெரிய சமையற்கலை வல்லுனர் சொன்னார்
ஏன் மிக்ஸியில் அரைத்து இட்லி வடை செய்தால் அது கிரைண்டரில் அரைப்பது போல் இல்லையென்ற காரணத்தை.மிக்ஸியை மூடி அரைக்கிறோம்,காற்றே போவதில்லை.ஆனால்
ஆட்டும்போது காற்று உட்செல்கிறது;இட்லி வடைக்குச் சுவையும் மென்மையும்
கூட்டுகிறது,
ஆகாயம்—ஆகாயம் என்றால் மனத்தில தோன்றுவது சூரியன்,மேகம்.மழை பெய்ய
மேகம் வேண்டும்; சூரியன் ஆதார சக்தி;அதன் ஒளி இன்றி எதுவும் நடக்குமோ;பயிர்
விளையுமோ? எனவேதான் பொங்கலன்று பானையை வெளியில் வைத்துப் பொங்கல் ஆக்கி சூரியனை
வழி படுகிறோம்.
உணவின் பெருமையைத் தைத்திரீய உபநிடதம்
சொல்கிறது
ஆகாசாத் வாயு:
வாயோரக்னி:
அக்னே-ராப:
அத்ப்ய:பிருதிவி
பிருதிவ்யா ஓஷதய:
ஓஷதீப்யோன்னம்
அன்னாத் புருஷ:
அதாவது ஆகாயத்திலிருந்து
வாயுவும்,வாயுவிலிருந்துஅக்னியும்,அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்துநிலமும்,நிலத்திலிருந்து
தாவரங்களும்,தாவரங்களிலிருந்து உணவும், உணவி லிருந்து மனிதனும் உண்டாகின்றன!
இது தவிர,உணவை நிந்திக்கக் கூடாது,உணவை வீணாக்கக்
கூடாது,உணவைப் பகிர்ந்துண்ணவேண்டும் என்ற பல செய்திகளைத் தைத்திரீய உபநிடதம்
சொல்கிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த உணவைப் பற்றி,என்
உணவு அனுபவங்கள் பற்றி,சில நேரங்களில் உணவின் செய்முறை பற்றியும்(சுட்டதுதான்!)
அவ்வப்போது பகிர உத்தேசம்!
அதற்கான தலைப்பு.......”உணவும் உணவு
சார்ந்த இடமும்”
தொடர்வேன் இத்தலைப்பில் இயன்ற
போதெல்லாம்!
இனி ”உணவும் உணவு சார்ந்த இடமும்” என்றால் தங்களின் வலைப்பதிவு என சொல்லலாம் போல! தொடருங்கள். காத்திருக்கிறேன் (பதிவை) சுவைக்க!
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஇப்போது உனவும் உணவு சார்ந்த இடத்தையும் காலிபண்ண ஒரு கூட்டம் நச்சுக்கருத்தை பரப்புகிறது நம்மிடம்/நம் வீட்டு சமயலைறைகள் கழிவறையை விட அசுத்தமாய் இருக்கிறது என்கிறது.இதே போல் சிறிது காலம் முன்பு இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்றார்கள் .இப்போது இப்படி,இனி என்ன சொல்ல காத்திருக்கிறார்கள் எனத்தெரியவில்லை.சொல்வார்கள்,,,,,சொல்லிவிட்டுப்போகட்டும்.நாம் அதர்கு இசைவு படாமல் இருந்தால் சரி.
பதிலளிநீக்குநன்றி விமலன்
நீக்குஉணவும் உணவு சார்ந்த இடமும் கலக்குங்க தல...
பதிலளிநீக்குநன்றி கருண்
நீக்குஅதாவது ஆகாயத்திலிருந்து வாயுவும்,வாயுவிலிருந்துஅக்னியும்,அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்துநிலமும்,நிலத்திலிருந்து தாவரங்களும்,தாவரங்களிலிருந்து உணவும், உணவி லிருந்து மனிதனும் உண்டாகின்றன!
பதிலளிநீக்குஅருமையான உபநிஷத் வாக்கியம் ..பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குஒரு இட்லி வடை செய்யுரதுல இம்புட்டு விஷயம் இருக்கா
பதிலளிநீக்குபின்ன!
நீக்குநன்றி சீனு
சமையலறையில இம்புட்டு விசயம் இருக்கா?! தொடருங்கள் ஐயா!!
பதிலளிநீக்குஆமாங்க!
நீக்குநன்றி
பஞ்சபூதங்கள் வாசம் செய்யும் இடம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். காற்றுக்கு அந்த காலத்தில் ஊதுகுழல் வைத்து தானே ஊதி அடுப்பை எரியவிடுவார்கள். அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குநீங்களும் தொடருங்கள். நானும் தொடர்கிறேன்....:)
நன்றி ஆதி வெங்கட்
நீக்குதைத்திரிய உபநிசத்தை உணவு சார்பான பதிவுக்கு அறிமுகத்தில் சுவையாக புகுத்தியமை சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குதங்கள் சமையல் அனுபவத்தில் இருந்து நாங்கள் கற்று கொள்ள காத்து கொண்டு இருக்கிறோம். நன்றி ஐயா
பதிலளிநீக்குஆரம்பிங்க ஆரம்பிங்க சிறப்பாக அமையும்
பதிலளிநீக்குதைத்ரீய உபநிஷத்....
பதிலளிநீக்குஅதிலிருந்து எடுத்துச் சொல்லிய விஷயங்கள் நன்று.....
உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து நாங்களும்....
விளக்கத்துடன் கூடிய தொடக்கம் அருமை.... தொடருங்கள்
பதிலளிநீக்குதொடருங்கள்!
பதிலளிநீக்கு