இரண்டு முடிவுகள் யோசித்து வைத்தேன்.
முதலாவது ஒரு காமெடியான முடிவு!
இரண்டாவது ஒரு த்ரில்லான காமெடியான முடிவு
இதோ முதல் முடிவு......................
---------------------------------------------------------------------------
மறுநாள் திடீரென்று வெளியூர் செல்ல நேர்ந்தது.
காலையில் சதாப்தியில்
புறப்பட்டேன்(ரயில்வே நண்பர் உதவி).
மணி பத்து இருக்கும்.
கைபேசி ஒலித்தது
பார்த்தேன்.
தெரியாத எண்.
“ஹலோ”
“ஹலோ,சென்னைபித்தன் சாரா!”
“ஆமாம்”
”நாங்க ..........காபி
ஷாப்பிலிருந்து பேசுகிறோம்.”
“சொல்லுங்கள்”
”உங்கள் விலாசம் வேண்டும்.உங்களுக்கு
எங்கள் நன்றியாக ஒரு காசோலை அனுப்ப வேண்டும்”
எனக்கெதற்குக் காசோலை?
எனக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி ஒலித்தது.
”நான் வெளியூர் சென்று கொண்டிருக்கிறேன்.திரும்பி வந்ததும் இந்த
நம்பர்ரைத் தொடர்பு
கொள்கிறேன்”இணைப்பைத் துண்டித்தேன்.
அன்று முழுவதும் ஒரு சிறு உறுத்தல்;ஏதாவது பிரச்சினை இருக்குமோ?
மைசூரில் ஒரு வார வேலை.
ஒரு வாரத்துக்குப்பின் சென்னை திரும்பினேன்.
அன்று மாலை.அந்த காபி ஷாப் இருக்கிறதா என்று பார்க்கப் புறப்பட்டேன்.
கடற்கரைச்சாலையை நெருங்கிவிட்டேன்.
ஓரிட்த்தில் இளைஞர் கூட்டம் இருந்தது.
அதில் இருந்தவர்கள் என்னைப்[பார்த்த்தும் தமக்குள் ஏதோ பேசிச்
சிரித்துக் கொண்டனர்.
சிறிது தொலைவில் வலது பக்கம் ….காபி ஷாப் என்ற போர்டு தெரிந்தது.
நெருங்கினேன்.
இப்போது காபிஷாப் வாசலில்
வைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய பலகை கண்ணில் பட்டது.
அதில் இருந்த படத்தில் நான்;அருகில் அந்தப்பெண்.இருவர் மட்டுமே.மூன்றாவது நபர்
இல்லை.
இருவரும் உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தோம்.ஆனால் அன்று அப்படி
அல்ல!
கீழே வாசகம்……
“இந்த வயதிலும் என் இளமையான தோற்றத்துக்கும்,இளமை முறுக்குடன்
செயல் படுவதற்கும்… நான் தினந்தோறும் காபி ஷாப்பின் மூலிகை டீ அருந்துவதே காரணம்.”
ஹா ஹா ஹா!
……………………………….
கதையின் முடிவு காமெடியாகத் தோன்றினாலும் அருமையான முடிவு.
பதிலளிநீக்குஆனால் நான் கூற விரும்புவது “இந்த வயதிலும் நீங்கள் இளமையான தோற்றத்துடனும்,இளமை முறுக்குடன் செயல் படுவதன் காரணம் நீங்கள் தினந்தோறும் புதிய புதிய தகவல்களோடு பதிவிடுவதுதான் .”
அடுத்த முடிவை நாளை தருவீர்களா?
அநேகமாக நாளை!
நீக்குநன்றி ஐயா
காமெடியான முடிவு..... ரசித்தேன்...
பதிலளிநீக்குத்ரில்லான முடிவு படிக்க காத்திருப்புடன்.....
வருகிறது
நீக்குநன்றி வெங்கட்
உதட்டோடு முத்தமிட அடிக்கடி ஆசை வருமோ
பதிலளிநீக்குஇல்லை கண்ணதாசன் இப்போதெல்லாம் பாரதி ’கண்ணம்மா என் குழந்தை’யில் பாடியது போல் குழந்தைகளைக்”கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள் வெறி கொள்கிறது”
நீக்குநன்றி
முடிவு எப்போ?
பதிலளிநீக்குஅடுத்த முடிவு விரைவில்.நன்றி கருண்
நீக்குஇந்த வயதிலும் என் இளமையான தோற்றத்துக்கும்,இளமை முறுக்குடன் செயல் படுவதற்கும்… நான் தினந்தோறும் காபி ஷாப்பின் மூலிகை டீ அருந்துவதே காரணம்.//
பதிலளிநீக்குஉங்களுக்கும் இது நல்லாத்தான் பொருந்துது.. நீங்களும் இந்த காப்பியத்தான் குடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன், சரிதானே:)) அடுத்த முடிவுக்கு காத்திருக்கிறேன்..
மனத்தை இளமையாக வைத்துக் கொள்கிறேன்!
நீக்குநன்றி ஜோசப் சார்
hi..hi.. haha!
பதிலளிநீக்கு:-D
நீக்குநன்றி அப்பாதுரை
//இருவரும் உரசிக்கொண்டு நின்று கொண்டிருந்தோம்// ... ஹா ஹா ஹா ...
பதிலளிநீக்குஃபோட்டோ ஷாப்!
நீக்குநன்றி ரூபக்
அருமையான முடிவு! சூப்பர்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குவீடு திரும்பிய பின் வெகு நேரம் மவீடு திரும்பிய பின் வெகு நேரம் மனம் மாலை நடந்தவற்றை அசை போட்டு கொண்டே இருந்தது. மனம் ஒரு குரங்கு அல்லவா ! வயது ஆனாலும் ( உடலுக்கு) மனம் அந்த பெண்ணின் அழகை பேசி சிரித்த பாங்கினை எண்ணி எண்ணி அசை போட்டு கொண்டே இருந்தது .அடுத்த நாள் நிச்சயமாக கடற்கரை சென்று மூலிகை டீ சுவைத்து விட வேண்டும் ( இலவசமாக இல்லா விட்டாலும் !) என்று முடிவு செய்து கொண்டேன் . அந்த எண்ணமே சுவையாக இருந்தது !
பதிலளிநீக்குஅந்த நேரம் கைபேசி மணி ஒலித்தது ..அந்த பெண் தான் ... " இது நினைவூட்டு தொடர்பு .. நாளை நிச்சயமாக வருவீர்கள் அல்லவா,.."என மயக்கும் குரலில் கேட்க மது உண்ட மந்தி போல் மயங்கி : உறுதியாக என்று ஆங்கிலத்தில் மந்தகசமாக கூறினேன் , அவளே மீண்டும் எவ்வளவு அதிகமாக மக்கள் வருகிறார்களோ அவ்வளவு எனக்கு ஊக்க தொகை கிடைக்கும் என்று கூறினால் . கவலை வேண்டாம் உறுதியாக வருகிறேன் என்று மீண்டும் கூறினேன் . அடுத்த நாளுக்காக காத்திருந்தேன் .. இரவும் வந்தது ..இரக்கமில்லா இரவு இருதயத்தை இறுக்கியது ...இரவு சுருங்காதா ...
மீண்டும் ஒரு மணியோசை ..இம்முறை ஒரு பத்திரிகை நண்பனிடம் இருந்து ...ஒரு செய்தி ... ஒரு பெண்ணும் ஆணும் போலீசிடம் சிக்கிய தகவல் ..அவர்கள் கையில் மூலிகை தேனீர் குறித்து விளம்பர ஏடுகள் முதலியவை பறிமுதல் செய்ய பட்டனவாம் திடுக்கிட்டு மேற்கொண்டு தகவல் கேட்டேன்
தகாத தொழில் செய்யும் கும்பலாம் ..அவர்கள் கையில் ஒரு புகை பட கருவியும் இருந்ததாம் . மீதி தகவலை காலை கூறுவதாக கூறி தொடர்பினை துண்டித்தான் .கேட்டவுடன் மனதை கிலி பற்றியது ..என்னையும் அல்லவா படம் எடுத்தார்கள் ..ஐயோ படம் பிடி பட்டால் ....எண்ணவே மனம் பதறியது ..மயக்கம் கலைந்தது . வாசலுக்கு ஓடினேன் வினை தீர்க்கும் என் அப்பன் முன் நின்று கண நேர சபலத்திற்கு மனம் அடிமை ஆனதை நினைத்து
வருந்தி நின்றேன் ...வரும் பிரச்சினை எண்ணி உள்ளம் அழுதது ..இம்முறை என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடப்பா என்று உள்ளம் உருகி வேண்டிக்கொண்டேன் ..
மறு நாள் விடிய கூடாது என்று இம்முறை மனம் எண்ணியது ..யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே உதய சூரியன்.
கனத்த உள்ளதுடன் வேண்ட வெறுப்புடன் எழுந்து தொலை பேசி ஒலிக்காக காத்திருந்தேன் ..ஒவ்வொரு கணமும் சித்திரவதை தான் . தொலை பேசி சரியாக உள்ளதா என்று மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டே இருந்தேன்
இப்போது மூலிகை தேநீர் மறந்து விட்டது எப்பிடி இவ்வாறு நடந்து கொண்டோம் என்று எண்ணி நாணினேன் ..ஐயோ நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்று நினைக்க துவங்கினேன் ....ஒரு ஓரத்தில் மனம் ஒலிக்காத தொலை பேசியை எண்ணி எண்ணி பயந்தேன் ....நானே கூட நண்பனை அழைக்கலாமா என்று ஒரு கணம் எண்ணினேன் ,,துணிவு வர வில்லை ....
அப்போது திடீரென்று ஒழி எழும்பியது ....ஓடினேன் தொலைபேசி அருகே ..நடுக்கத்துடன் " எஸ் " என்றேன் ..." இது .... வங்கி உங்களுக்கு கடன் அட்டை வேண்டுமா " என்று மீண்டும் ஒரு இனிய குரல் ..சீசீ என்ன சபலம் மீண்டும் ..
தேவை இல்லை என்று துண்டித்து விட்டேன் ///
சிறுது நேரம் சென்று மீண்டும் ஒலி.. மீண்டும் துடுப்புடன் எடுத்தேன் .. இது அடையார் ஆனந்த பவனா என்று மறு புறம் குரல் . எரிச்சலுடன் பதில் கூறாமல் தொடர்பை துண்டித்தேன் .. contd
என்ன சோதனை இது ..கண நேர சபலத்திற்கு இப்படி ஒரு தண்டனையா .....
பதிலளிநீக்குகடைசியில் எதிர்பார்த்த நண்பன் .. அவனுக்கு காவல் துறையில் சிறுது செல்வாக்கு உண்டு . என்னை அழைத்தான் காவல் நிலையத்திற்கு ..கதி கலங்கி போனேன் ..என் புகை படமும் அங்கு இருக்குமோ ல் தயங்கி தயங்கிg சென்றேன் ..காவல் அதிகாரியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான் ..வங்கியில் உயர்ந்த பதவி வகித்த காரணத்தினால் நல்ல உபசாரம் ..புயலுக்கு முன்பு அமைதியா .. மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது .. பிறகு மெதுவாக என் நண்பன் பேச துடங்கினான் . அது சரியான ஏமாற்று கும்பல் ..படம் எடுப்பது போல் நடித்து ஒரு குழப்பத்தை உண்டாக்கி மறு நாள் கடற்கரை ஓரம் வரவழைத்து தங்கள் சாகசத்தை காட்டி ஏமாற்றி பணம் பறிப்பதே தொழிலாக கொண்டவர்கள் ...என்ன என்னை என்னால் நம்ப முடியவில்ல .." அiப்போது அக்கருவியில் ஒரு படமும் இல்லையா என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டேன் ..இல்லவே இல்லை என்று நண்பன் கூறியதும் " மலை போல் வரும் சோதனை எல்லாம் பனி போல் நீங்கி விடும் " என்ற பாட்டு நினைவிற்கு வந்தது .. வினை தீர்க்கும் விநாயகன் முகம் என் கண் முன் வந்தது .den .. கன்னத்தில் போட்டு கொண்டேன் அங்கேயே . வியப்புடன் என்னை பார்த்தார்கள் நண்பனும் காவல் அதிகாரியும் ..ஓடினேன் வீட்டிற்கு ..மீண்டும் விநாயகன் முன் நின்று நன்றி செலுத்தினேன் ..வீட்டிற்குள் நுழைந்தேன் ..திடீரென்று அப்பெண் அன்பளிப்பாக தந்த அப்பெட்டிth நினைவிற்கு வந்தது ..திறந்து பார்த்த நான் திகைத்தேன் .......( என்ன இருந்தது என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள் ) vasu
சுவாரஸ்யமான முடிவு! ரசித்தேன். உங்கள் கற்பனைப்படி பெட்டியில் என்னை இருந்தது என்பதைத் தெரிந்து ‘கொண்டோம்” நன்றி
நீக்குDue to constraints in publishing long comments, my comments are appearing in 3 parts. Another ending visualised by me...a little naughty ...guess the contents of the box supposed to contain gift.
பதிலளிநீக்குஅருமையான கற்பனை திரு வாசு அவர்களே! நீங்கள் இதை மின்னஞ்சலில் திரு சென்னை பித்தன் அவர்களுக்கு அனுப்பியிருந்தால் அவர் இதை பதிவாகவே போட்டிருப்பார். திரு சென்னை பித்தன் இந்த பதிவின் மூலம் நிறைய Crime கதைகள் எழுதும் எழுத்தாளரை உருவாக்கிவிட்டார் என நினைக்கிறேன்.
நீக்குகாமெடியாக இருந்தாலும் அழகாக முடித்திருக்கிறீர்கள்....
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்குஹா.....ஹா....
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்குஇளமை முறுக்குடன் செயல் படுவதற்கும்… நான் தினந்தோறும் காபி ஷாப்பின் மூலிகை டீ அருந்துவதே காரணம்.”//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா இதிலென்ன சந்தேகம் தல ? அந்த விளம்பரத்தை எழுதுனவரின் கணிப்பு சரிதானே ? என்ன...... நீங்க அங்கே போயி முறுக்கவில்லை ச்சே ச்சீ மூலிகை டீ குடிக்கவில்லை அம்புட்டுதான் ஹா ஹா ஹா ஹா...!
:))
நீக்குநன்றி மனோ