தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 23, 2011

யார் புத்திசாலி!


ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு பொருளாதார மேதையா 

யிருந்தார்.பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச்  சீர் படுத்த   

அவர் ஆலோசனையை நாடினர்.


ஒருநாள் ஊர்த்தலைவர்  அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் 

சொன்னார்”ஐயா! அறிஞரே!நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே 

பாராட்டுகிறது.ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக 

இருக்கிறானே!தங்கம்,வெள்ளி இவற்றுள்  அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று 

அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.வெட்கக்கேடு!”


அறிஞர் மிக வருத்தமடைந்தார்.பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், 

வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”


பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார்”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று 

சொன்னாய்?”
 
பையன் சொன்னான்”தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் 

தங்க நாணயமும்,மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டுஎன்னை

அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு 

வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.


”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி 

இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் 

போய் விடுவேன்.இது ஓராண்டாக நடக்கிறது.தினம் எனக்கு ஒரு வெள்ளி 

நாணயம் கிடைக்கிறது.நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் 

அன்றோடு இந்த  விளையாட்டு நின்று விடும்.எனக்கு நாணயம் கிடைப்பதும் 

நின்று போகும்.எனவேதான்…”


அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக  வேடம் அணிகிறோம்,மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு.ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

23 கருத்துகள்:

  1. எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

    முத்தாய்ப்பான புத்திசாலி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம்,
    >>
    ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்தாழமுள்ள பதிவு!


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. மனம் கவர்ந்தது.கடைசியில் சொல்லியிருக்கும் விளக்கம் மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொருந்தும்.நன்று

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... நல்லதொரு கதையின் மூலம் சரியான விஷயத்தைச் சொன்னீர்கள். பல சமயங்களில் முட்டாளாக நடிக்கவும் வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. சூப்பர் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. இரவு வணக்கம்,ஐயா!குட்டி பதினாறடி பாயுமென்று சொல்கிறீர்கள்!பாய்ந்தது!!!!!

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கதை யாருக்காக? யாருக்காக இருந்தால் என்ன, புரிய வேண்டியவருகளுக்குப் புரிந்தால் சரி!

    பதிலளிநீக்கு
  8. அறிஞனின் மகனின் அசத்தல்.அதை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. //வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!//

    சரியாய் சொன்னீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  10. கதையும் அதற்கான விளக்கமும்
    மிக மிக அருமை
    தெளிவூட்டிப் போகும் பதிவு
    த.ம8

    பதிலளிநீக்கு
  11. சிகப்பு எழுத்தில் இருக்கும் வார்த்தைகள் அருமை சார்!!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் தேவையான பதிவு..நன்றி..

    வாக்கு (TM 11-TT 13)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    பதிலளிநீக்கு
  13. நல்ல கதை.... சில நேரங்களில் முட்டாள் வேடம் போடுவது கூட நல்லதுதான்....

    பதிலளிநீக்கு
  14. சிலருக்கு சிலரை முட்டாளாக்குவதில் மகிழ்ச்சி.
    சிலர் தங்களை முட்டாளாக்கிக்கொண்டு மற்றவர்களை மகிழ்விப்பதுமுண்டு.
    எப்படியாயினும், தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழச்செய்யும் வாழ்க்கையே மிகச்சிறந்தது.
    ஆனால் உங்கள் கதையில் வந்தவர், புலிக்கு பிறந்தது பூனை இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமை. ஒரு புத்திசாலி 'தான்தான் புத்திசாலி' என்று நினைக்கும் கணத்தில் முட்டாளாகிறான் என்பார்கள். யார் வல்லவன் என்று கடைசியில் அல்லவா தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  16. பையன் தங்க கம்பி போங்கள் .. வாசு

    பதிலளிநீக்கு