தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 15, 2013

ஓர் இரவு அனுபவம்!அழைப்புமணியின் ஒலி இழுத்து மூடியிருந்த ரஜாயைத் தாண்டிக் காதுகளில் பலகீனமக ஒலித்தது.மெல்ல முகத்தை மட்டும் ரஜாயிலிருந்து வெளிப்படுத்தி இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தைப் பார்த்தேன்.

மணி 12.30.

மீண்டும் அழைப்பு மணி அவசரமாகப் பொறுமையற்று ஒலித்தது  .

ரஜாயிலிருந்து வெளியே வந்தேன்.ஸ்வெட்டர் அணிந்திருந்தாலும் குளிரத்தான் செய்தது.

இந்தக் குளிரில் ,நள்ளிரவில் யார்?

கதவைத் திறந்தால் குளிர் வேறு தாக்குமே?

கதவருகில் சென்றேன்.

கோன்?”(யார்)

(இனி நடந்த இந்தி உரையாடல்கள் தமிழாக்கத்தில்!)

கதவைத்திற”…குரல் அதிகாரமாக ஒலித்தது.

திறந்தேன்.

ஒரு காவல்துறை அதிகாரியும் நான்கு காவலர்களும்.

சிறப்புப் பிரிவு லக்னோ.நீங்கள்தான் கேஷவ் ஸ்ரீவாஸ்தவா?”

”இல்லை.அவர் வீட்டுச் சொந்தக்காரர்.நான் குடியிருப்பவன்.அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதன்மை மேலாளர்”

”ஸ்ரீவாஸ்தவ் எங்கே?”

”அவர் மாடியில் இருக்கிறார்.வழி வலப்பக்கம்”

“நீங்களும் வாருங்கள்”

சென்றேன்.

அங்கு சென்று அழைப்பு மனியை அழுத்தினார்.தொடர்ந்த அழுத்தலுக்குப் பின்.மாடி வராண்டா விலிருந்து யாரோ எட்டிப்பார்த்துக் கேட்டார்கள்”யார்?”

“காவல் துறை.உடன் வந்து கதவைத் திற.இல்லையெனில் உடைத்துக் கொண்டு உள்ளே வருவோம்”

சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

அனைவரும் உள்ளே சென்றனர்.

நான் என் வீட்டுக்குத் திரும்பினேன்.

தூக்கம் எப்படி வரும்?என்ன நடக்கிறது? சோபாவில் அமர்ந்தேன்.

கதவு திறந்தே இருந்தது.

சிறிது நேரத்தில் வீட்டுச் சொந்தக்காரரின் அண்ணா அவசரமாக உள்ளே வந்து,கதவை மூடி விட்டு, சோபாவில் அமர்ந்து கொண்டார்;எதுவும் பேசவில்லை.ஆனால் பயந்திருப்பது தெரிந்தது.

நேரம் நகர்ந்தது.

”மேலாளர் சார்!தூங்கி விட்டீர்களா”

காவல்துறை அதிகாரியின் குரல் வெளியிலிருந்து…

வெளியே வந்தேன்.

காவலர்களின் நடுவே கையில் விலங்குடன் ஸ்ரீவாஸ்தவ்!

“மேலாளர் ஐயா!இந்த மனிதன்தான் 50 பேரிடம் மொத்தம் 25 இலட்சம் மோசடி செய்தவன். பார்த்துக்கொள்ளுங்கள்”
 
ஸ்ரீவாஸ்தவ் தலை குனிந்தே இருந்தார்.

“சார்.இந்த வீட்டில் இருக்காதீர்கள்,காலி செய்து விடுங்கள்” என்று சொல்லி விட்டு அதிகாரி மற்றவர்களுடன் சென்று விட்டார்.

உள்ளே வந்தேன்.

விட்டுக்காரரின் அண்ணா கேட்டார்”போய்விட்டார்களா?குட்டுவையும் கொண்டு போய் விட்டார்களா?”

குட்டு என்பது அவர் தம்பியின் மூத்த மகன்(குட்டு என்பதற்குப் பதில் குண்டு என்று வைத்திருக்கலாம்!)

“இல்லை.உங்கள் தம்பியை மட்டும்தான்”

அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

எனக்கு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை.

பல சிந்தனைகள்.

வந்தவர்கள் நான் கதவைத் திறந்தவுடன் எதுவும் கேட்காமல் நாலு அறை விட்டு என்னை இழுத்துச் சென்றிருந்தால் என்ன செய்திருப்பேன்?!

நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

உறங்கிய பின்னும் பல  பயங்கரக் கனவுகளுடன் கழிந்தது அந்த இரவு!23 கருத்துகள்:

 1. நிஜம்தான். பல சமயங்களில் இளையவர், முதியவர் பாராமல், ஆராயாமல் காவல்துறை அவசரப்பட்டு விடுகிறது நிஜம்தான். உங்களி்ன் பயம் அர்த்தமுள்ளது. படிகக சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தாலும் அன்றைய இரவு திகில் இரவாகத்தான் கழிந்திருக்கும் உங்களுக்கு. இல்லையா?

  பதிலளிநீக்கு
 2. வந்தவர்கள் நான் கதவைத் திறந்தவுடன் எதுவும் கேட்காமல் நாலு அறை விட்டு என்னை இழுத்துச் சென்றிருந்தால் என்ன செய்திருப்பேன்?!//

  ஹா ஹா ஹா ஹா உங்களைப் பார்த்ததும் தென்னிந்திய ஆளுன்னு தெரிஞ்சிருக்கும் தல....

  இருந்தாலும் அடி வாங்காமல் தப்பினது புண்ணியம்தான் இல்லையா...?

  பதிலளிநீக்கு
 3. கதவுக்குப் பின்னிருந்து நான் கேட்ட”கோன்” லியே தெரிந்திருக்கும்!
  நன்றி மனோ

  பதிலளிநீக்கு
 4. இரவுநேரத்தில் இப்படி நடந்தால் அது ,பயங்கரம் தான்!

  பதிலளிநீக்கு
 5. //வந்தவர்கள் நான் கதவைத் திறந்தவுடன் எதுவும் கேட்காமல் நாலு அறை விட்டு என்னை இழுத்துச் சென்றிருந்தால் என்ன செய்திருப்பேன்?!//

  சென்னையாய் இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும்.IB ஆபிசர் ஒருவரையே அடித்து இழுத்து சென்றவர்களாயிற்றே நம்மவர்கள்.

  பதிலளிநீக்கு
 6. உண்மை அனுபவமா? நிச்சயம் பயங்கரமான ஒரு அனுபவம்தான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. படிக்கும்போதே டெரர்ரா இருக்கே ஐயா.....

  பயங்கரமான அனுபவம் தான்!

  பதிலளிநீக்கு