தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 20, 2013

என்ன கொல வெறி?!ஒரு இளம் தம்பதி பயணம் செய்த கார்  கோர விபத்துக்குள்ளானது .

விபத்தில் கணவனின் முகம் தீக்காயத்தினால் மிகவும் பாதிக்கப் பட்ட.து

காயம் குணமான பின் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆணிடம் அவன் மிகவும் 
ஒல்லியாக சதைப் பற்றற்று இருப்பதால் சிகிச்சைக்கு அவன் உடலில் இருந்து தோல் எடுக்க முடியாது என்றார்.

அவன் மனைவி உதவ முன் வந்தாள்.

அவள் உடல் பகுதிகளின் சோதனைக்குப்பின் அவள் பின்புறத் தோல் தான்(இடக்கரடக்கல்!) (கிரேசி மோகன் சொன்னால் உட்காரும் இடம்!) அறுவைச் சிகிச்சைக்கு ஏற்றது என 
மருத்துவர் முடிவு செய்தார்.

அவரும் மனைவியும் கணவனிடம்  இதைச் சொன்னபின் வேறு யாரிடமும் சொல்ல மாட்டோம் என அவனுக்கு  உறுதியளித்தனர்.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அதன் பின்  அவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் வியந்தனர்.

அவன் முன்னை விட இளமையாகவும் முகப்பொலிவுடன் தோற்றமளித்தான்.

ஒரு நாள் தனிமையில் அவன் மனைவியிடம் சொன்னான்”அன்பே!நான் உனக்கு  நன்றிக்
கடன்பட்டிருக்கிறேன்;இதற்கு ஈடாக நான் என்ன கொடுப்பது?”

அவள் சொன்னாள் “ஒன்றும் வேண்டாம் ;உன் தாய் உன் கன்னத்தில் முத்தமிடும்போது நான் அடையும் மகிழ்ச்சியே போதும்!”

என்ன கொலவெறி!!

14 கருத்துகள்:

 1. // உன் தாய் உன் கன்னத்தில் முத்தமிடும்போது //
  நல்லவேளை இது மேனாட்டு தம்பதியர் கதை.

  பதிலளிநீக்கு
 2. அம்மணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதோ

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா ஹா ஹா இது எங்கேயோ படித்த நியாபகம், சுஜாதா கைவண்ணம்ன்னு நினைக்கிறேன் ஆனாலும் எப்போ வாசித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை அம்புட்டு கொலைவெறி.

  பதிலளிநீக்கு
 4. அது நடக்காது என்று தெரிந்தே அதை சொன்னாரா?

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்களுக்கு,

  வணக்கம் ஐயா,

  இந்த வார வலைச்சர ஆசிரியரான அம்பாளடியாள் அவர்கள் தங்களுக்குக் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவிக்கச்சொல்லியுள்ளார்கள்.

  இணைப்புகள்:

  1] http://gopu1949.blogspot.in/2013/07/29.html

  2] http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html
  -=-=-=-=-=-=-=-=-

  Ambal adiyal has left a new comment on the post "29] நிலையான சொத்து தருபவர் குரு !":

  மிக்க நன்றி ஐயா தகவலுக்கு .நான் மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன் .COM என்று இருப்பது எமக்கு CH என்றே காட்டுகின்றது .இடையில் GOOGLE ஏற்படுத்திய மாற்றத்தின் பின்னர் இவ்வாறு தளங்கள் ஆடும் ஆடி முடித்தபின் சேவை துண்டிக்கப் பட்டு விடும் .இதற்குத் தீர்வு சொல்கின்றார் எங்கள் ப்ளாக்கர் நண்பன் .துள்ளித் திரியும் ப்ளாக் -தீர்வு என்ன ? என்ற தலைப்பில் .

  இதை எங்கள் சென்னைப் பித்தன் ஐயாவுக்கும் தெரிவிக்க முடிந்தால் மகிழ்ச்சியே

  http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

  -=-=-=-=-=-=-=-=-=-

  அன்புடன்
  வை. கோபாலகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு