தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 25, 2013

கணினியுடனான கைகுலுக்கல்!(தொடர்பதிவு)அழைத்து விட்டார் அன்புடன் தமிழ் இளங்கோ
அனுபவப் பதிவொன்று எழுதச் சொல்லி
ஆம்!கணினியுடனான கைகுலுக்கல்
எப்படி நேர்ந்ததென்று எழுத வேண்டும்!உடன் பிறப்பே!
நீ அறிந்திடுவாயா,இந்தச் சாமானியன்
கணினி படித்த கதை!

வங்கிப் பணியில் குப்பை கொட்டிய காலமது.
எண்பத்தெட்டென எண்ணிடுகிறேன் ஆண்டு.
கணினி படித்திட்டால் கட்டிய பணம்
கட்டாயம் திருப்பித்தரும் வங்கி என்றார்.
ஓசியில் கிடைத்தால் உதவாப் பொருளென்றாலும்
ஒன்பது கொடு எனக் கேட்பவர்தாமே நாம்!

சேர்ந்தேன் அலுவலக நண்பர் சிலருடன்
என்.ஐ.ஐ.டி யில் கணினி கற்றுக் கொள்ள
அலுவலகம் மயிலையில்,பயிற்சி நுங்கம்பாக்கம்
மாலை வேளை வகுப்புகள் என்று அறிந்தோம்!

முதல்நாள்!கணினி முன் அமர்ந்து
கலக்கும் கனவுகள் கலர் கலராய்
வகுப்பறைக்குள் நுழைந்தோம்
என்ன ஏமாற்றம் ஒரு கணினி கூட இல்லை அங்கு!
கையில் அட்டை வைத்த நாற்காலிகள்.
வந்தார் ஆசிரியர்,அறிமுகப்படலம் ஆரம்பம்
அடிப்படை பற்றிச் சொன்னார்
டாஸ் என்றார்,ஆபரேடிங் சிஸ்டம் என்றார்
முதலில் ஃப்லோசார்ட் என்றார்
ஒரு கட்டம் அதிலிருந்து ஒரு அம்புக்குறி
கட்டங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு பலவாகி
எங்கோ முடியும்;  விடை பிறக்கும்!

இப்படியே கழிந்தன நாட்கள்!
கணினியைக் கண்ணிலேயே காணோமே!
நான் கற்றுக் கொண்ட்து டிபேஸ் 3
ஞாபகம் கொஞ்சமும் இல்லை இன்று.

ஒரு கணினியில் இருவராய்ப் பயிற்சி தொடங்கியது
பிறகு வந்தது தேர்வென்ற ஒன்று!
வேறென்ன,எல்லாரும் பாஸ்தான்!
எங்களுக்கு லாபம் ஒன்றுமில்லை
வங்கிக்குத்தான் நஷ்டம்!

பின்னாளில் வந்தது கணினி வங்கியிலும்
என் அறை மேசையில் ஒரு கணினி
என்ன செய்தேன் அதைக் கொண்டு.
கணக்கு வைத்த சிலர் இருப்புக் கேட்டால்
கரெக்டாகச் சொல்லிடுவேன்,அவ்வளவே!

இன்றும் என்ன? வலைப்பதிவில் எழுதும்போதும்
இளங்கோ போல் நானும் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்தான்
இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!
28 கருத்துகள்:

 1. சரியாய் சொன்னீர்கள்!
  ‘ஓசியில் கிடைத்தால் உதவாப் பொருளென்றாலும்
  ஒன்பது கொடு எனக் கேட்பவர்தாமே நாம்!’என்று

  உடன் பிறப்பிற்கு கடிதம் எழுதியதை படித்திருக்கிறேன். ஆனால் உடன்பிறப்புக்கான கவிதையை இப்போதுதான் காண்கிறேன். அனுபவத்தை கவிதையில் அழகாய் வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஒத்தை விரலை வைத்தே வித்தைக் காட்டும் நீங்கள் பத்துவிரலிலும் தட்டச்சு செய்தால் மற்றப் பதிவர்களின் நிலையை (என்னையும் சேர்த்துதான் )பற்றி சிந்தித்தால் மயக்கமே வருகிறது.உங்களுக்குப் போட்டிபோட யாருமே இருக்கமாட்டார்கள்.நீங்கள்தான் முதல் இடத்தில வருவீர்கள்

  பதிலளிநீக்கு
 3. ரசித்தேன்...

  கணினி நுட்பங்கள் ஓய்வதில்லை...

  பதிலளிநீக்கு
 4. // இன்றும் என்ன? வலைப்பதிவில் எழுதும்போதும்
  இளங்கோ போல் நானும் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்தான்
  இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
  கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?! //

  எனது அன்பு வேண்டுகோளை ஏற்று அனுபவப் பதிவு ஒன்று தந்த தங்களுக்கு நன்றி! போகிற போக்கைப் பார்த்தால் ” ஒரு விரல் கிருஷ்ணா ராவ் பதிவர்கள் கழகம் “ தொடங்கி விடலாம் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா !
  எப்படி உள்ளீர்கள் ?...கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க இன்று
  என் மனம் இன்பம் துன்பம் இரண்டுங் கலந்து துடிக்கிறது .காரணம்
  இதுவரைத் தங்களின் தளம் பேயாட்டம் ஆடியது .ஓரு மூத்த பதிவர்
  எம் மனதில் நிறைந்த சொந்தம் தங்களுடன் பேச முடியாமல் போனதே
  என்று பலமுறை கவலையடைந்தேன் .இன்று ஓர் ஆக்கம் அதுவும்
  இந்தப் பேயாட்டம் ஆடும் தளங்களைக் கவனத்திற்குக் கொண்டு வர
  வேண்டும் என்றெண்ணி .மீண்டும் அத் தளங்களைப் பரிசீலிக்கும்
  முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே உங்கள் தளம் என்னையும் வரவேற்றது .
  நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் .மீண்டும் எமது நட்புத்
  தொடர கிடைத்த வாய்ப்பை இட்டு .என்னோடு பேசுங்கள் உங்கள்
  எழுத்துக்களைக் கண்டு என் மனம் மேலும் மகிழ்ச்சியடையும் ஐயா ....!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்!இத்தகைய பாசமிகு உறவுகளைப் பெற்றுத் தந்த பதிவுலகுக்கு நன்றி!உங்கள் வழிகாட்டுதலின்படியே தளத்தைச் சரி செய்தேன்.ஆட்டம் நின்றது அறிந்து நான் ஆடிக்கொண்டிருக்கிறேன் ஆனந்தமாய்!
   நன்றி அம்பாளடியாள்

   நீக்கு
 6. கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!
  >>
  கஷ்டம்தான்

  பதிலளிநீக்கு
 7. அருமையாச் சொன்னீங்க...
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஐயா.

  உங்களின் பதிவுகளைக் கண்டு களிக்கும் இன்பம்
  இப்பொழுது கிடைத்து விட்டது. சரிசெய்தமைக்கு
  மிக்க நன்றி.

  (இந்த வயதில் என்னமா துள்ளினீர்கள்!!! எனக்கு
  உங்களின் வலையைத் திறக்கும் பொழுதெல்லாம்
  கோபமாக வரும்)

  கணினியுடன் கைகுலுக்கல் அருமைங்க ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துள்ளாமல் இருக்க வைகோ மூலம் அம்பாளடியாள் வழிகாட்டினார்கள்!
   துள்ளல் நின்றது.இனி நான் துள்ளினாலும் பதிவு துள்ளாது என நம்புகிறேன்!
   பிளாக்கர் நண்பனுக்கும் நன்றி
   நன்றி அருணா செல்வம்

   நீக்கு
 9. ஒரு விரல் கிருஷ்ணா ராவா ? இது எப்படி சாத்துயம் தல, ஆச்சர்யமா இருக்கே...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கை ஒரு விரல்!இரண்டு கை,இரண்டு ஆள் காட்டி விரல்கள்.!அவ்வளவே!

   நன்றி மனோ

   நீக்கு
 10. சுருக்கமான கவிதையா சொல்லிட்டீங்க.... நன்றி..

  பதிலளிநீக்கு
 11. பத்து விரலில் பழகுவது மிக எளிமையே..! நீங்கள் ஒரு முயற்சி எடுங்கள்...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேல் “என்னத்தப் பழகி என்னத்த அடிச்சு”!
   நன்றி சுப்புடு

   நீக்கு
 12. இன்று வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்!
  கணினிஎன்னும் கடலின் கரை காண்பது என்று?!

  கற்றது கைம்மண்ணளவு .. கல்லாதது உலகளவு ..!

  பதிலளிநீக்கு
 13. Today every desk is having a computer in Banks with net connectivity. Then what else, we are busy in using the computer to the fullest extent which is evident from typing this comment which I am doing in my office. Trust you got the point now.

  பதிலளிநீக்கு
 14. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்!

  பதிலளிநீக்கு
 15. உங்கள் கணினி அனுபவங்களைக் கவிதையாகவே எழுதியது நன்று!

  பதிலளிநீக்கு