தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 18, 2013

நீ ஒரு வாத்து!நான் என்ன செய்ய வேண்டும்

என நீ எதிர்பார்க்கிறாய்.

என் கையசைவில்.

என் கால் கோலத்தில்

என் பார்வையில்

என் முகபாவத்தில்

என் புன்னகையில்

என் இதழ்ச் சுழிப்பில்

என் கண்ணிமை மூடலில்

எல்லாம் சொல்லி விட்டேன்,

என் மௌனத்தைப்

புரிந்து கொள்ளாத நீ

என் வார்த்தையை எப்படிப் 

புரிந்து கொள்ளப் போகிறாய்?!
                               
                                             - (காதலிக்கும் பெண்)

**********************************************************


10 கருத்துகள்:

 1. தான் காதலிப்பவன், தன்னை அவன் காதலிக்கிறானா எனத் தெரியாமல் அவனை வாத்து மடையன் என விளிப்பதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன்! கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலிப்பதாக ஒரு சிறு குறிப்பு கூட காட்டாத அவனை வாத்து என்று அழைப்பதில் தவறு இல்லை.
   நன்றி

   நீக்கு
 2. மௌனத்தைப் புரிந்து கொள்ளாத நீ

  என் வார்த்தையை எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறாய்?!

  சரியான வார்த்தை... நிராகரிப்பு சரியே..!

  பதிலளிநீக்கு
 3. இந்த சைகைகள் எல்லாம் செஞ்சு பக்கத்துல வந்ததும் சப்புன்னு அறைஞ்சிட்டா என்னப் பண்ணுறது என்ற பயம்தான் ஹி ஹி.

  கவிதை அருமை தல, வித்தியாசமா இருக்கு...!

  பதிலளிநீக்கு
 4. அழகான, ரசிக்க ‌வைத்த கவி‌தை!

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன்..... பல ஆண்கள் வாத்து தான் பெண்களைப் பொறுத்தவரை... :))))

  பதிலளிநீக்கு