தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 16, 2013

ஒரு மாலை நேர அனுபவம்!சில நாட்களுக்கு முன்….

மாலை மணி 5.00.

வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடக்க இருந்த ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும்.

சென்று திரும்புவதற்கு வாடகை மகிழ்வுந்து என்றால் செலவு அதிகமாகி விடும் (இப்போதெல்லாம் தானியில் செல்வதை விட வாடகை மகிழ்வுந்தில் செல்வது செலவு குறைவு; வசதி அதிகம்)

எனவே போகும்போது பேருந்தில் சென்று விட்டு திரும்புகையில் அழைப்பு வாடகை மகிழ்வுந்தில் திரும்பலாம் எனத் தீர்மானித்து, 5E  பிடிக்கப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்து கொண்டி ருந்தேன்.

நிறுத்தத்துக்குச் சிறிது தொலைவே இருக்கும்போது அந்த மனிதர் எதிரே வந்தார்.வேட்டி, பழுப்படைந்த வெள்ளைச் சட்டை,கையில் ஒரு துணிப்பை.

என்னைப் பார்த்து கை அசைத்தார். 

எனக்கு யாரென்று தெரியவில்லை;யாரிவர் என்று யோசித்தேன்.

அவரே பேசத் தொடங்கினார்”சர்க்கரை,ரத்த அழுத்தம் எல்லாம் அதிகமாகி விட்டது.அதனால் மலரில் சோதனை செய்து கொண்டு வருகிறேன்.மாத்திரை வாங்கப் பணம் குறைகிறது. நல்ல வேளை உன்னைப் பார்த்தேன்;கொஞ்சம் மாத்திரை வாங்கிக் கொடேன்”அருகில் ஒரு மருந்துக்கடையும் இருந்தது

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதெ பேருந்து வருவதைக் கவனித்து,அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல் நிறுத்தத்தை நோக்கி விரைந்தேன்

பின்னிருந்து அவர் குரல் என்னைத் துரத்தியது”வாங்கிக் குடுக்க மாட்டியா?”

பேருந்தில் ஏறி விட்டேன்.

அதிசயமாக இருக்கையும் கிடைத்தது.

அமர்ந்தேன்.

ஆனால் ஓட்டலை அடையும் வரை அந்தக் குரல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
பேருந்தில் யோசித்துக் கொண்டே சென்றேன்.

இந்தப் பேருந்து இல்லாவிட்டால் அடுத்த பேருந்து.

அவர் சொல்வதைக் கேட்டு,அவரை விசாரித்து அவர் சொல்வது உண்மையா எனத் தெரிந்து கொண்டு,அவருக்கு உதவியிருக்கலாமோ?(பணம் கொடுக்காமல்,மாத்திரையாக வாங்கிக் கொடுத்திருக்கலாம்.100-200 ஆகியிருக்கலாம்))

பேருந்து பிடிக்கும் என் அவசரத்தில்  ஒரு உண்மையான வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டேனோ?

சினிமாவில் வருவது போல்,மனச்சாட்சியின் மற்றொரு உருவம் வாதிட்டது……….

அவரைப் பார்க்கும்போதே தெரிந்த்து,அவர் வசதியானவர் இல்லை என்று.

ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள எத்தனையோ இடங்கள் இருக்க மிக அதிகமாகச் செலவாகும் மலருக்குப் போயிருப்பாரா?

நாங்கள் சந்தித்த இடம் மலரிலிருந்து அவரால் நடந்து வரக் கூடிய தூரம் அல்ல;ஏன்அங்கு வந்தார்?

பணம் குறைவாக இருந்தால் மாத்திரைகளைக் குறைத்து வாங்கிக் கொண்டு பின்னர் மீதியை வாங்கலாமே?ஏன் செய்யவில்லை?

அறிமுகமில்லாத என்னை ஏன் தெரிந்தவன் போல் நடித்தார்?

கேள்விகள்,கேள்விகள்,கேள்விகள்…………

என் மனச்சாட்சியின் இரு உருவங்களும் இன்னும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

26 கருத்துகள்:

 1. கவனமாக "கவனித்து" விட்டு அடுத்த பேருந்தில் பயணம் செய்திருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த எண் பேருந்து அரை மனிக்குப் பின்னரே வரும்!அதுவும் அப்போது இரண்டு பேருந்துகள் சேர்ந்து வேறு வந்து விட்டன!யோசிக்க நேரமேது?!
   நன்றி தனபாலன்

   நீக்கு
 2. மனச்சங்கடம் தான்! எனக்கும் இந்த அனுபவம் உண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அநேகமாக அனைவருக்கும் இது போன்ற அனுபவம் இருக்கலாம்!
   நன்றி ஐயா

   நீக்கு
 3. முதுமையில் வறுமையும் ஆரோக்கியமற்ற வாழ்க்கையும் கொடுமை.

  பதிலளிநீக்கு
 4. Instead of getting confused over this now, you could have helped him instantly by getting him the required tablets. Even if you come to know subsequently that he has cheated, it is okay; at least you would have been spared from answering the calls from different directions of your conscience.

  பதிலளிநீக்கு
 5. Instead of getting confused over this now, you could have helped him instantly by getting him the required tablets. Even if you come to know subsequently that he has cheated, it is okay; at least you would have been spared from answering the calls from different directions of your conscience.

  பதிலளிநீக்கு
 6. ஐயா ஒரு நபிமொழிதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது!
  யாசிப்பவன் குதிரைமீதமர்ந்து கேட்டாலும் அவனுக்கு உன்னால் முடிந்ததை கொடுத்துவிடு. அல்லது சும்மா இருந்துவிடு. குதர்க்கம் பேசாதே!

  அதாவது இவன் ஏன் யாசிக்கிறான். அதான் குதிரை இருக்கே. அதை வைத்து சம்பாதிக்கலாமே அல்லது அதை வித்து பணம் பண்ணலாமே என்றெல்லாம் குதர்க்கம் பேசக்கூடாது. அவனுக்கு என்ன எழவுப்பிரச்சனையோ. கை நீட்டி கேட்டுவிட்டான், அதுவும் நம்மிடம். முடிந்ததை கொடுப்போம். இல்லையென்றால் sorry சொல்லி நகர்வோம்.

  அதுபோக இந்த மாதிரி செயல்களுக்காக வருந்தினால் பிறகு வாழ்க்கையில் சிரிக்கவே முடியாது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அஜீஸ்!
   நலந்தானே?
   நன்றி

   நீக்கு
 7. நான் இது மாதிரி உதவி செய்து, பின்னர் நான் ஏமாற்றப்பட்டது அறிந்து வருந்தியிருக்கிறேன். இப்படிப் பட்டவர்களுக்கு பணமாக தருவதை விட அவருக்கு தேவையான மருத்தை வாங்கித் தந்திருக்கலாம். ஏனெனில் அவர் ஏமாற்றுப் பேர்வழியாக இருந்தால் அதை விற்பது கடினம் அல்லவா?

  பதிலளிநீக்கு
 8. கொஞ்சம் நிதானித்திருக்கலாம்தான் ஐயா!

  பதிலளிநீக்கு
 9. இதுபோன்று எனக்கும் பல அனுபவங்கள் உள்ளன. ஒரு சில நிகழ்ச்சிகளில் என்னை ஏமாற்றியவர்களும் உண்டு.

  ஒருசில நேரங்களில் அவர்களையே மடக்கி அவர்கள் வாயாலேயே நான் உண்மையைக் கக்க வைத்ததும் உண்டு.

  சென்னை வடபழநி பஸ் நிலையத்தில் முன்பின் தெரியாத ஒருவன் என்னை சந்தித்தான். ஏதேதோ கதை சொன்னான். கடைசியில் என்னிடம் நன்றாகவே மாட்டிக்கொண்டான். பிறகு என்னிடமிருந்து தப்பித்தால் போதும் என்று அவனுக்கு ஆகி ஓடியேவிட்டான்.

  எல்லா நேரங்களிலும் எல்லோரையும் சந்தேகப்படவும் முடியாது. நம்மால் முடியுமானால் உதவலாம். தவறேதும் இல்லை தான். ஆனால் சற்று கவனமாகத்தான் செயல்பட வேண்டும். தாக்ஷிண்யம் தன நஷ்டம் தான்.

  பதிலளிநீக்கு
 10. உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இதுமாதிரி சமயங்களில். ஒரு முடிவு எடுத்து நகர்நத பின்பு வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை.

  பதிலளிநீக்கு
 11. இருதலைக் கொள்ளி எறும்பு கதைதான்! சிலர் ஏமாற்றவும் செய்கிறார்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. சிலருக்கு நமது முகத்தைப் பார்த்ததும் பணம் தருவார் என்ற நம்பிக்கையில் கேட்பதுண்டு, இனி அடுத்தமுறை இப்படி ஒரு சம்பவம் நடந்தால் கவனமாக விசாரித்து காசு கையில் கொடுக்காமல் பொருளை வாங்கிக் கொடுங்கள்.

  இங்கேயும் சில பாகிஸ்தான், பங்களாதேசிகள் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு என்று பணம் கேட்பதுண்டு, நானும் அவர்கள் முகத்தை உன்னிப்பாக கவனித்து காசு கொடுப்பதுண்டு.

  இதுவும் ஒரு தர்மம்தானே தல...போகட்டும் விடுங்க.

  பதிலளிநீக்கு
 13. சிலசமயங்களில் இப்படியாவதும் உண்டு.

  பதிலளிநீக்கு
 14. உண்மையாய் இருக்காது.இப்படிபலபேர் இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு