தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 29, 2013

அன்பைக் கொன்ற ஆணவம்!
உணர்ச்சிகள் பலவும்

ஒன்றாய் வாழ்ந்த ஒரு தீவு!

வருத்தம் ,கோபம், வெறுப்பு

வீறு கொண்டெழும் போது

வந்தணைத்து ஆறச் செய்யும் அன்பு!

வசந்தம் நிலவிய அத்தீவுதனில்

வந்ததே ஒரு நாள் பெரும் புயல்!

கடல்கோள் ஒன்று வந்து

காணாது போகும் நிலை தீவுக்கு!

உணர்வுகள் எல்லாம் பயந்தன

உரைத்தது அன்பு உன்னத வழி

ஓடம் ஒன்று செய்து ஓடிப்போகலாம்!

ஓடமும் தயார்,ஓடிச்சென்று ஏறின உணர்வுகள்

ஒன்று மட்டும் ஏறவில்லை!

திமிராய் அமர்ந்திருந்தது தீவிலே

ஆணவம் என் அவ்வுணர்வு

அன்பு சென்று அழைத்தது

அசையவில்லை ஆணவம்!

அனைத்தும் தப்பிச்செல்ல

அவை சொல்லியும் கேட்காமல்

ஆணவத்துன் சேர்ந்து அழிந்து  அன்பும்!

ஆம் அன்பு வாழவேண்டுமெனில்

ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!

உறவுகளில் புரிதல் வேண்டும் 

உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும் 

ஆணவம் தோற்கும்,

அன்பே சிவம்!

22 கருத்துகள்:

 1. //உறவுகளில் புரிதல் வேண்டும்

  உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

  உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும் //

  ;))))) அருமையான ஆக்கம் ஐயா. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. சொன்ன விதமும் அற்புதம்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. ஆணவம் குடிகொண்ட மனமென்னும் தீவு ஆணவமென்னும் கடல்கோளினால் நிச்சயம் அழியும்... அன்பே சிவம்... அருமையாய்ச் சொன்னிர்கள் பித்தரே

  பதிலளிநீக்கு
 4. .. உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும்

  ஆணவம் தோற்கும்,

  அன்பே சிவம்! ..

  உண்மை தான் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. ஆம் அன்பு வாழவேண்டுமெனில்

  ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!

  உறவுகளில் புரிதல் வேண்டும்

  உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

  உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும்

  ஆணவம் தோற்கும்,

  அன்பே சிவம்!
  அருமையான அறிவுரை வரிகள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. விட்டுக் கொடுத்தால் அன்பு வெல்லும் ஆணவம் தோற்கும் என்பது உண்மைதான். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும் ஆணவம் தோற்கும். உண்மைதான். நல்ல அறிவுரை.

  பதிலளிநீக்கு
 8. ஆணவம் தோற்கட்டும்......

  அன்பே சிவம்!

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. //அன்பு வாழவேண்டுமெனில்
  ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!//
  உண்மையான வார்த்தைகள். பின்பற்றுவதில்தான் சிக்கல்

  பதிலளிநீக்கு
 10. அறியாமையும் இதற்கொரு காரணமாகிறது .அன்பு நிலைக்க
  வேண்டும் என்றால் ஆணவத்தைத் தவிர்க்க வேண்டும் என்று
  சொன்ன அழகிய கருத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா !

  பதிலளிநீக்கு
 11. உறவுகளில் புரிதல் வேண்டும்

  உன்னத நிலைக்கு விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

  உணர்ந்து நடந்தால் அன்பு வெல்லும்

  ஆணவம் தோற்கும்,

  அன்பே சிவம்!
  அருமையான கருத்துகள்..!

  பதிலளிநீக்கு
 12. உறவுகள் புரிதல் வேணும்.... அருமை ஐயா..

  பதிலளிநீக்கு
 13. “ஆணவத்துடன் சேர்ந்து அழிந்தது அன்பும்!
  ஆம் அன்பு வாழவேண்டுமெனில்
  ஆணவத்தைக் கொல்ல வேண்டும்!“

  நல்ல கருத்து ஐயா.

  பதிலளிநீக்கு
 14. ஆணவம் இருக்கும் இடத்தில் அறிவு வேலை செய்யாதே தல, அன்பே சிறந்தது இந்த உலகில்...!

  பதிலளிநீக்கு
 15. ஆணவமே அழிவுக்குக் காரணம். அன்பு மட்டுமே மனிதானாக வைத்திருக்கும்

  பதிலளிநீக்கு
 16. அன்பே சிவம்,சிவமே மனிதன்/

  பதிலளிநீக்கு