தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 26, 2013

பரல்கள்--.நட்பு;பதிவர் சந்திப்பு;லிமெரிக்;மனிதம்இன்று மனம் உற்சாகமாக இருக்கிறது.எதையாவது எழுத கை பரபரக்கிறது.இது வரை பலமுறை சொல்லிவிட்டேன்;இன்றும் சொல்கிறேன்;இனியும் சொல்வேன்…..இந்தப் பதிவுலகுக்கு வந்ததால் எனக்குக் கிடைத்த,எனக்கு மட்டுமல்ல,பதிவர்கள் அனைவருக்குமே கிடைத்த மிகப் பெரிய பேறு முகம் தெரியாத நட்புகள்;தூரம் அதற்கு ஒரு தடையல்ல; வயதென்பது அங்கு ஒரு பொருட்டல்ல.இந்த 68 வயதுக்காரனுக்கு,இவன் பட்ட மேற்படிப்பு முடித்துப் பணியில் அமர்ந்த காலத்தில் கூடப் பிறந்தே இராத சிலர் பதிவின் மூலமே  நண்பர்கள் ஆகியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலர் இங்கு வரும்போது தேடி வந்து சந்தித்து உரையாடிச் செல்வது என்னை நெகிழ வைக்கிறது;புதிய உற்சாகத்தை தருகிறது,இன்று அப்படிப்பட்ட ஒரு நாள்; நன்றி நண்பரே!
………………………………………………………………………………

ஒரு நாய் பற்றிய குட்டிக்கதை படித்தேன்.
அதில் கடைசியில் சொன்ன கருத்து என்னைக் கவர்ந்த்து.
அது............
ஒரு நாய் நமக்கு ஒரு குருவாக இருந்து என்ன போதிக்கிறது?!.....
அன்புக்குரியவர்கள் வீட்டுக்கு வரும்போது ஓடிச் சென்று  அவர்களுக்கு வரவேற்பளியுங்கள்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்;வேறு ஒன்றாக பாசாங்கு செய்யாதீர்கள்
நீங்கள் தேடுவது ஆழப்புதைந்து இருந்தாலும் தோண்டி எடுக்காமல் விடாதீர்கள்
அன்புக்குரியவர் கவலை/சோகத்தில் இருக்கும்போது மௌனமாக அருகில் அமர்ந்து,உங்கள் தொடுகையால் ஆறுதல் கூறுங்கள்.
ஆம்!உண்மையாக அன்பு செலுத்துவது எப்படி என்று நாய்க்குத் தெரியும்;நமக்கு?!
.......................................................................
பல ஆண்டுகளுக்கு முன் நா.பா.அவர்களின் “கங்கை இன்னும் வற்றிவிடவில்லை” என்ற சிறுகதை இப்போது நினைவுக்கு வருகிறது.
அதில் ஒரு விபத்தின் காரணமாக ரயில் ஒன்று மணிக்கணக்கில் ஒரு நிலையத்தில் நின்று விடுகிறது.
அனைவருக்கும் பசி.
எதோ ஒரு நிறுவனம் இலவச உணவுப் பொட்டலம்,ஒருவருக்கு ஒன்று,வழங்க,அனைவரும் அடித்துப் பிடித்து வாங்குகிறர்கள்.
ஒரு கிராமவாசி பொட்டலம் வாங்கி வரும்போது  ஒரு கர்ப்பிணிப் பெண் பசியுடன் அவன் கைப் பொட்டலத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான்.
அதை அவளிடம் கொடுத்துச் செல்கிறேன்.
சிறிது நேரத்தில் உணவு வழங்கும் இடத்தில் ஒரே சப்தம். யாரையோ அனைவரும் அடிக்கிறார்கள்.
அங்கு சென்று பார்த்து வந்தஒருவர் சொல்கிறார்”யாரோ ஒருத்தன் ஒரு பொட்டலம் வாங்கிவிட்டு மீண்டும் வாங்கவந்தானாம்,அடித்து விட்டார்கள்!”
இது போன்ற சிலரிடம் மனிதம் இருக்கும் வரை,அதுவே நம் நாகரிகமாக இருக்கும் வரை கங்கை வற்றாது என முடியும் கதை.
ஆம்!பேரிடர்கள் நேரும் சமயத்தில் இது போன்று மனிதம் வெளிப்படும்.
தன் குதிரைகள்,கடை எல்லாம் இழந்தபோதும் சில பயணிகளைக் காட்டுப்பாதையில் அழைத்துச் சென்று காப்பாற்றிய ஒரு மனிதரைப் பற்றி இன்று படித்தேன்.
நன்றிக்கடனாக அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து அவருக்கு மறுவாழ்வு தர முயலும் அந்தப் பயணிகளைப் பற்றியும் படித்தேன்.
கங்கை இன்னும் வற்றிவிடவில்லை!
.................................................................

லிமெரிக்(சிந்துகவி!)எழுதி ரொம்ப நாளாச்சு.இதோ ஒரு லிமெரிக்…………

பதிவர் சந்திப்புக்குப் போனாரு சூசை
பலரும் பராட்டுவாங்கன்னு ஆசை
போற வரைக்கும் தெரியலை
அவர் பதிவை யாரும் அறியலை
பாவம் தொங்கிப் போச்சு இப்ப அவர் மீசை

லிமெரிக்கின் நோக்கமே நகைச்சுவைதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

49 கருத்துகள்:

 1. சுவையான பகிர்வு! மனிதம் இன்னும் வற்றிவிடவில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன்! லிமரிக் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. குட்டிக்கதை - நன்றி உட்பட நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது இன்றைக்கு...!

  மறுபடியும் இனிய சந்திப்பு எப்போது...? முடிவாகவில்லையா...?

  சிந்துகவி - செமகவி...!

  நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தார்;சந்தித்தோம்.
   அடுத்தவருக்குக் காத்திருப்போம்!
   நன்றி தனபாலன்

   நீக்கு
 3. மீசை தொங்கிப்போன அந்த பதிவர் யாருங்கோ!?

  பதிலளிநீக்கு
 4. லிமரிக் வடிவம் அழகாக வந்துள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. நா பா சிறுகதை, லிமரிக் இரண்டும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 6. மனிதம் பற்றிய சிறுகதை அருமை.... மற்றவையும் அருமை.... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. அந்த செந்நிறப் பதிவர் உங்களை வந்து சந்தித்துவிட்டுப் போனாரா? மிக்க மகிழ்ச்சி! லிமெரிக் வழக்கம் போல அசத்தியது என்னை! நா.பா.வின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அதன் மூலம் மனிதத்தை நீங்கள் எடுத்தியிம்பியிருப்பது மெய்சிலிர்ப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய சந்திப்பு!உடன் பழம்பெரும் பதிவரும்!
   கருத்துக்கு நன்றி பாலகணேஷ்

   நீக்கு
 8. பாட்டாவே பாடலாம் போலிருக்கு

  பதிலளிநீக்கு
 9. வயதென்பது அங்கு ஒரு பொருட்டல்ல//அது ஒரு [பொருட்டல்ல. எல்லோருமே படைப்பாளிகள்

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் மனதால் இளமையாய் இருக்கும்போது வயதைப்பற்றி எழுதுவதேன்? வழக்கம்போல் பரலில் இருந்த முத்துக்களும் மாணிக்கங்களும் மனதை கவர்ந்தன. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானோ நீங்களொ என்றுமே வயதை மறைக்க முயன்றதில்லை,பழைய புகைப்படத்தை வெளியிட்டு.!எனவே அதற்கென்று தனி முக்கியத்துவம் எதுவும் நான் கொடுக்கவில்லை.அது ஒரு உண்மை! அவ்வளவே!

   கருத்துக்கு நன்றி சார்

   நீக்கு
 11. பதிவு பல்சுவை விருந்தாக இருந்தது
  குறிப்பாக நாய்க்கதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. எனக்கு சில நாளாய் ஒரு டவுட்டு, லிமெரிக் என்றால் என்ன ? அதன் வடிவம் என்ன (எழுத்துரு என்காதீர்கள்), இன்னும் சில அடிப்படை தகவலை சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லிமெரிக் என்பது ஆங்கிலத்தில் ஒரு வகைக்கவிதை.அதன் அடிநாதம்,நகைச்சுவை!அதை அர்த்தமற்ற கவிதை என்று கூடச் சொல்வார்கள்பொதுவாக ஐந்து வரிகள்.மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது,,முதல் இரண்டு வரிகளின் கடைசிச் சொல்லுடன்,கடைசி வரியின் கடைசிச் சொல்லின் சந்தம் ஒத்திருக்க வேண்டும்.அது போல் மூன்று நான்காவது வரிகளின் கடைசிச் சொல்லின் சந்தம் ஒத்துப்போக வேண்டும்நான் இது வரை எழுதிய லிமெரிக்குகளை தொகுத்து ஒரு பதிவாகத் தரலாமா என யோசிக்கிறேன்(ஒரு பதிவு தேத்திடலாம்!)

   நன்றி சீனு

   நீக்கு
 13. சிறப்பான பகிர்வு... நா.பா. கதை, உங்கள் லிமரிக் என அசத்தல்.

  மனிதம் தழைக்கட்டும்.... உத்திராகண்ட் இப்படி பலரை அடையாளம் காட்டியுள்ளது......

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்குள் இருக்கும் அந்த குறும்பான நகைச்சுவை இன்னும் வற்றிவிடவில்லை

  பதிலளிநீக்கு
 15. இப்படி வயசை சபையில சொல்லிப்போட்டீங்களே ஐயா..இன்னும் கொஞ்சம் குறைச்சு சொல்லியிருக்கலாமுன்னு தோணுது..ஹாஹாஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோற்றமே மூலதனமாக இருக்கும் கனவுத்தொழிற்சாலையின் நாயகர்கள் கூட(அஜீத்!) கருப்பு வெள்ளை முடியுடன் காட்சி தரும் காலத்தில் என் வயது தெரிவதில் என்ன தவறு?!

   நன்றி மது

   நீக்கு
 16. வயதென்பது அங்கு ஒரு பொருட்டல்ல///உண்மைதான் அய்யா .உலகமே உறவாகிவிட்டது இந்த வலையுலக நட்பால்.

  பதிலளிநீக்கு
 17. limerick தமிழ்ச் சொல் உங்க தயவில். நன்றி.
  நல்லாவே இருக்குங்க. எனக்குத் தெரிஞ்சு அழகான லிமெரிக்ஸ் அடிக்கடி எழுதுறது நீங்க மட்டும் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்துகவி என்னும் பதத்தைத் தந்தவர் நிரூபன் அவர்கள்!பெருமையும் நன்றியும் அவருக்கே!

   நன்றி அப்பாதுரை!

   நீக்கு
 18. சிலரிடம் மனிதம் இருக்கும் வரை,அதுவே நம் நாகரிகமாக இருக்கும் வரை
  கங்கை வற்றாது என முடியும் கதை. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 19. நன்று!!! ஆமா, அதென்ன லிமெரிக்?

  நீங்கள் எப்பொழுதும் பாராட்டிற்கு தகுதியானவரே!!

  தொடருங்கள் ஐயா!!

  பதிலளிநீக்கு
 20. தங்கள் மனம் உற்சாத்தில் இருந்ததால் வரிகள் எல்லாமே சுவையாக இருக்கின்றன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 21. செந்நிறாப் பதிவரா?! என்ன இது ஆளாளுக்கு புதிர் போடுறீங்க?

  பதிலளிநீக்கு
 22. கவிதை அருமை!வழக்கமான குறும்பு! இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 23. வயதிலும் அனுபவத்திலும் மூத்த, நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததின் பலனாய்க் கனிந்த தங்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா. அதற்குக் காரணமான பதிவுலகிற்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு