தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 01, 2013

உற்சாகமான பதிவர் சந்திப்பு!மற்றவர்கள் கூடி சுவாரயமாகப் பேசிக் கொண்டிருக்க,ஸ்கூல் பையனிடம் தன்னைப் போட்டோ எடுக்கச் சொல்லி ஏணியில் ஏறிப் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் சீனு!படங்களே நடந்ததைச் சொல்கையில் சொற்களும் வேண்டுமோ சொல்ல?!

இன்று மதியம் சிவகுமார் சந்திப்பு பற்றி தொலைபேசியில் தகவல் தர,பின்னர் புலவர் ஐயா போனில் உரையாட,நான்கு மணி அளவில் பாலகணேஷ் மீண்டும் போன் செய்ய,ஐந்து மணி அளவில் சந்திப்பு நடக்கும் இடம் அடைந்தேன்.

பத்துப்பேர் முன்னரே வந்திருந்தனர்.

புலவர் ஐயா,பால கணேஷ்,மதுமதி,ஆரூர் மூனா செந்தில்,சிவகுமார்,சீனு,பட்டிக்காட்டான் ஜெய்,ஸ்கூல் பையன்,அரசன்,சினிமா சினிமா ராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்

மிக்சர்(மொறு மொறு மிக்சர்!),பிஸ்கட்,சமோசா,ஃபாண்டா-பேச்சுக்கு நடுவே கொறிக்க, சுவைக்க!

முக்கியமாக என்ன பேசினோம் என்று முக்கியமானவர்கள் பதிவு எழுதுவார்கள்.

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்த வரை சிலநாட்களாக எழுதாமல் சோர்ந்து கிடந்த எனக்கு இந்த இளைஞர்களின் சந்திப்பு மனத்துக்கு உற்சாகம் தரும் ஒரு டானிக்காக அமைந்தது!

நன்றி நண்பர்களே

45 கருத்துகள்:

 1. அடுத்த பதிவர்கள் திருவிழாவாக இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. மிகவும் சுவாரஸ்யமாய் அமைந்தது சந்திப்பு... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைச் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி.
   நன்றி ஸ்கூல் பையன்

   நீக்கு
 3. அடிக்கடி சந்திப்பை நடத்தி பதிவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஆத்மா!நமக்கும் ஏதாவது டானிக் வேண்டுமல்லவா!
   நன்றி

   நீக்கு
 4. கொஞ்ச நாட்கள் இடைவெளிக்கு பிறகு தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. முதல் போட்டோ சரியாக வரவில்லை, சரிசெய்து வெளியிடவும்.

  பதிலளிநீக்கு
 6. அலுவலகப் பணியால் இந்த சந்திப்பை தவற விட்டது சற்றே வருத்தம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருத்தம் வேண்டாம்.இது ஒரு முன்னோட்டம்தானே!
   நன்றி ரூபக்

   நீக்கு
 7. // என்னைப் பொறுத்த வரை சிலநாட்களாக எழுதாமல் சோர்ந்து கிடந்த எனக்கு இந்த இளைஞர்களின் சந்திப்பு மனத்துக்கு உற்சாகம் தரும் ஒரு டானிக்காக அமைந்தது! //

  உற்சாகம் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 8. படங்கள் நல்லா இருக்கு. இதுல யார் யாருனுறதை சொன்னா நல்லாயிருந்திருக்குமே?
  மனதுக்குப் பிடித்த பேச்சும் நட்புக் கூட்டமும் சோர்வுக்கு நல்ல மருந்து. உண்மை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கு முதுகுதான் தெரிகிறது!

   நீங்கள் சொல்வது உண்மையே அப்பாதுரை
   நன்றி

   நீக்கு
 9. சந்திப்பு = சந்தோஷம். இளம்புயல் சீனு படத்தில் சரியாகத் தெரியவில்லையே....!

  பதிலளிநீக்கு
 10. பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கிறது,

  பதிலளிநீக்கு
 11. மிகப் பெரும் சந்திப்புக்கு
  இந்த சந்திப்புக்கு அச்சாரமாயிருக்கும்
  என நினைக்கிறேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. உற்சாக பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 13. இளைஞர்கள் மத்தியில் நானுமொரு,மிகமிக(முதியவன்) இளையவன்! நன்றி!பித்தன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளைஞர்கள் மத்தியில் எல்லோரும் இளைஞராவது இயற்கை அய்யா!
   மிக்க நன்றி!

   நீக்கு
 14. //முக்கியமாக என்ன பேசினோம் என்று முக்கியமானவர்கள் பதிவு எழுதுவார்கள்.//

  அப்படியென்றால் நீங்கள் முக்கியமானவர் இல்லையா? நாங்கள் அப்படியல்லவா நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அதுதான் உண்மையும் கூட!

  பதிலளிநீக்கு
 15. சந்திப்புகள் தொடரட்டும்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. அதனால் பரவாயில்லை;அடுத்த கூட்டம் விரைவில்!

   நன்றி

   நீக்கு
 17. அடையார் அஜீத் வாழ்க.

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள்......

  அடுத்த பதிவர் சந்திப்பிற்கான ஆயத்தங்களா? தகவல் அறியக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடக்கலாம், உங்கள் வாழ்த்துக்களுடன்!
   நன்றி வெங்கட்

   நீக்கு
 19. எந்த விதமான சுயநலமில்லா நட்புதான் வலை நண்பர்களின் நட்பு அப்படி நண்பர்கள் ஒன்று சேர்ந்தது பொதுநலனுக்காக
  நண்பர்கள் கோடிப் பேசியதும் நல்லதுதான் நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லதே நடக்கும்

  பதிலளிநீக்கு
 20. என்னைப் பொறுத்த வரை சிலநாட்களாக எழுதாமல் சோர்ந்து கிடந்த எனக்கு இந்த இளைஞர்களின் சந்திப்பு மனத்துக்கு உற்சாகம் தரும் ஒரு டானிக்காக அமைந்தது!//

  இப்படி அடிக்கடி நண்பர்கள் சந்தித்தால் பத்து வயசு குறைந்து விடும் தல, அதனால அடிக்கடி சந்திப்பு நடத்துங்கள் சரியா...!

  பதிலளிநீக்கு
 21. மீண்டும் முழுவீச்சில் எழுதுங்க ஐயா! உங்க எழுத்துலாம் தான் எங்களுக்கு வழிக்காட்டி

  பதிலளிநீக்கு
 22. It was pleasure to meet many of you all after long gap. :-)))

  (from mobile no tamil font)

  பதிலளிநீக்கு