தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூன் 16, 2013

தந்தையுமானவள்!அப்பா என்று நிச்சயம் அழைத்திருப்பேன்!

அள்ளி அணைத்திருப்பார் அவரும் அன்று,

ஆனால் அதெல்லாம் நினைவில் இல்லை

ஐந்து வயதுக்கு முன்  நடந்தவையெல்லாம்

எப்படி என் நினைவில் நிற்கும்?


தாயின்றிப் போய்ப் பிள்ளையைத்

தந்தை  அன்போடு பேணிவளர்த்தால்

தாயுமானவன் என்றே தந்தையை அழைப்பர்!


தந்தையின்றிப் போய் தாயே வளர்த்தால்?

தந்தையின் கண்டிப்பும் தாயின் அரவணைப்பும்

தட்டாமல் தந்து  போற்றி வளர்த்து

தன் கஷ்டம் எல்லாம் நாங்கள் உணராமல்

தாய்க்குத் தாயாகி,தந்தையும் தானாகி

தளராத உறுதியுடன் எங்களை வழி நடத்தி

தகைமையுடன் எம்மை வளர்த்திட்ட தாயே!

நீயே தந்தையுமானவள்!

தந்தையர் தினத்தில் வணங்குகின்றேன்!15 கருத்துகள்:

 1. தாயை, தந்தையர் நாளில் வாழ்த்தும் தங்களை வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 2. தகைமையுடன் எம்மை வளர்த்திட்ட தாயே!

  நீயே தந்தையுமானவள்!

  தந்தையர் தினத்தில் வணங்குகின்றேன்!

  தந்தையர் தினத்தில் தாயையும் வணங்குகின்றேன்!

  பதிலளிநீக்கு
 3. நானும் தங்களைப் போன்று
  தாய்க்குள் தந்தையை கண்டவன் என்பதால்
  இந்தச் சிறப்புப் பதிவு என்னுள்
  ஆழமாகப் பதிந்து போயிற்று
  பகிர்வுக்கு மனம்மார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 4. interesting.. நல்லாவே இருக்கு தந்தையுமானவள். நானும் உங்க கட்சி. எங்கப்பன் உதவாக்கரை. அம்மா தான் எல்லாம்.

  பதிலளிநீக்கு
 5. தந்தையுமானவள்..... சரிதானே அம்மாவே அப்பாவாக இருக்கும்போது தந்தையர்தினம் அன்று அம்மாவை வணங்குவது சரிதானே.....

  அருமை.....

  பதிலளிநீக்கு