தொடரும் தோழர்கள்

வியாழன், மே 31, 2012

நாமெல்லோரும் சோம்பேறிகள் அல்ல!


”என்னடா?ரவி வரலையா?”
”உனக்குத்தான் தெரியுமே!அவன் மகா சோம்பேறி.தயாராகி வரத்துக்குள்ள விடிஞ்சுடும்” 
நண்பர்கள் பேச்சு.

”இன்று ஞாயிறு.சோம்பேறித்தனமா படுக்கையில் கிடந்து விட்டு லேட்டாத்தான் எந்திரிக்கப் போறேன்”
விடுமுறை நாளில் ஒருவர்.

இவர்கள் சொல்லும் சோம்பேறித்தனம் என்பது என்ன?

எதுவும் செய்யாமல் இருத்தல்,வெட்டித்தனம்,செயலின்மை என்பவை பொருள்கள் எனலாம்.

ஆனால் சித்தர்கள் மொழியில் சோம்பல் என்பதே வேறு
அது வேலையற்று இருப்பது அன்று.

அது எல்லா வேலைகளுக்கும் மேலான வேலை.

அது தூங்காமல் தூங்கும் ஒரு நிலை

மெய்யுணர்வு நிலை.

ஜே.கே. சொல்வது போல் தேர்வுகளற்ற அறிநிலை,விழிப்புணர்வு.

அது செயலற்ற விழிப்புணர்வு நிலை

சித்தர் மொழியில் செத்த சவம் போன்ற நிலை.

திருமூலர் சொல்கிறார்..

“சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
 சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
 சோம்பர் உணர்வு சுருதி முடிந்த இடம்
 சோம்பர் கண்டார்அச் சுருதிக்கண் தூக்கமே”

தன் செயல் அற்றுச் சிவச் செயலாக இருப்பவர் சோம்பர்.அவர்கள் 
இருப்பது, கிடப்பது எல்லாம் இயற்கைத் தூவெளியானசிவ வெளியில்.

வேதங்கள் முடிந்த இடம் நாதாந்தம் ஆகும்(நாதம்+அந்தம்)

அவர்கள் உணர்ச்சி வியாபிக்கும் இடம்  அந்த நாதாந்தம் ஆகும்.அங்கு அவர்கள் பேரின்பமாகிய தூக்க நிலை எய்தி நினைவற்று இருப்பர்.

 சோம்பர் நிலையில் மனத்தின் தூண்டல்கள் எல்லாம் நிலை குத்திப் போகின்றன.

அது சிவயோக நித்திரை என்று குறிக்கப்படும்

நமது புலன்கள் உறங்க உணர்வு விழித்திருக்கும் நிலை.

”பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
 உய்த்தொன்று மாபோல்விழியுந்தன் கண்ணொளி
 அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச்
 சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே’----(திருமந்திரம்)

”பித்தம் பிடித்தவன் மருந்து உண்டு  பித்தம் நீங்கி இயல்பாக ஆவான். கண்படலம்(cataract) நீங்கப்  பெற்றவன் தெளிவான பார்வை பெறுவான்
 அது போல் இறைவன் அருளால், உள்ளத்தெளிவு பெற்று இயல்பான செயல்களை விட்டு அச் சிவத்தில் கூடி நின்றேன்.”

இத்தகைய செயலொழிந்த நிலையே சோம்பர் நிலை.

அந்நிலையில் இருப்பவரே சோம்பேறிகள்.

நாமெல்லாம் சோம்பேறிகள் அல்ல.

நாம் செயலற்று  இருந்தால் அது வெட்டித்தனம்;

அங்கு செயலுமில்லை,விழிப்புணர்வுமில்லை!

18 கருத்துகள்:

  1. /நாம் செயலற்று இருந்தால் அது வெட்டித்தனம்;

    அங்கு செயலுமில்லை,விழிப்புணர்வுமில்லை!/

    OK Sir, Understood.

    பதிலளிநீக்கு
  2. சோம்பேறித்தனத்தின் பின்னால் இவ்வளவு இருக்கிறதா? புதிதாய் கற்றுக் கொண்டேன் இன்று. நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. ‘ஓ! அதனால்தான் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதெக்காலம்” என்கிறார்களோ?
    விளக்கத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அப்பிடியே ஒரு எழுத்து விடாம மனப்பாடம் பண்ணிக்கிட்டேன் ..,

    விடுமுறை தினங்களில் பகல் பன்னிரெண்டு மணிவரை தூங்கும் என்னை அடுத்ததபா யாராவது சோம்பேறின்னு சொல்லட்டும் அப்ப வச்சுக்கிறேன் கச்சேரியை இதை அப்படியே ஒப்பிப்பேன்ல ஹி ஹி ஹி :D

    பதிலளிநீக்கு
  5. சோம்பேறித்தனத்துக்கு புது நோட்ஸ் இங்கே விறகப்படும்:)

    உறக்கம் என்பதும் கூட ஒரு மோனநிலையே!அதை அனுபவிச்சாத்தான் தெரியும்:)

    பதிலளிநீக்கு
  6. "சோம்பேறிக்கான" புதிய விளக்கத்திற்கு, நன்றி ஐயா!.

    பதிலளிநீக்கு
  7. நமது புலன்கள் உறங்க உணர்வு விழித்திருக்கும் நிலை.

    அறிதுயில் ????

    பதிலளிநீக்கு