தொடரும் தோழர்கள்

வியாழன், மே 17, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு-20-05-2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

//சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்

  வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

யோகநாதன்: கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். சென்ற ஆண்டு சி.என்.என். ஐ.பி.என். செய்தி சேனல் ‘ரியல் ஹீரோஸ்’ விருதை இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

யோகநாதன் குறித்து சி.என்.என். ஐ.பி.என். வெளியிட்ட செய்திக்கான லிங்க்:

சாதனைத்தமிழர் யோகநாதன்

தி ஹிந்து நாளிதழ் செய்தி:

Deep Rooted Love

காணொளி:

யோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்கிறது சென்னை யூத் பதிவர் சந்திப்பு குழு.

அடுத்த சிறப்பு விருந்தினர் செல்வி விஷாலினி அவர்கள்:

                                 
பதினோரு வயதே நிரம்பிய இவருடைய ஐ.க்யூ. லெவல் 225. இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ள தமிழ்மகள். விஷாலினி குறித்து உணவு ஆபீசர் தளத்தில் வெளிவந்த செய்திக்கான லிங்க்:

விஷாலினி – இந்தியாவின் விடிவெள்ளிசகோதரி விஷாலினியையும் அன்புடன் வரவேற்கிறோம்.

....................................................................................


Chennai Youth bloggers Meet:
Date: 20/05/12 Sunday
Address:
டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) 
....................................................................................//
 
டிஸ்கி:-யூத் பதிவர் சந்திப்பாம்!அதனால் போய் வெளியே இருந்து எட்டிப்பார்த்து விட்டு வரலாம் என இருக்கிறேன்! ஹி,ஹி!

26 கருத்துகள்:

 1. வாழ்துக்கள்..சிறப்பாய் நடக்க...

  பதிலளிநீக்கு
 2. போய் வாருங்கள். யூத் பதிவர் சந்திப்பில் மனதால் இளையவரான தாங்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாமா? போய் வந்ததும் ஒரு சூடான பதிவை எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. என் மனமார்ந்த வாழ்த்துக்களை தூரத்தில் இருந்து தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. நானும் உங்ககூட வெளியில நின்னு எட்டிப் பாக்க வரேன். கம்பெனி இல்லயேன்னு கவலைப்படாதீங்க...

  பதிலளிநீக்கு
 5. அண்ணே வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
 7. தம்பி கணேஷ் உடன் நானும் உங்ககூட வெளியில நின்னு எட்டிப் பாக்க வரேன். கம்பெனி இல்லயேன்னு கவலைப்படாதீங்க!

  நேரம் குறிப்பிடவில்லையே?
  மூவரும் ஒன்றாகப் போகலாம் தொலைவழி தொடர்பு கொள்வோம்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்

  பதிலளிநீக்கு
 9. சந்திப்பு இனிமையாக நடக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா17 மே, 2012 அன்று PM 6:32

  டிஸ்கி:-யூத் பதிவர் சந்திப்பாம்!அதனால் போய் வெளியே இருந்து எட்டிப்பார்த்து விட்டு வரலாம் என இருக்கிறேன்! ஹி,ஹி!....//

  முப்பது வயதில் தொப்பை வைத்தால் யூத்...ஹிஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 11. கணேஷ்!நீங்க யூத் தான்!அதனால் உள்ளேயிருந்து என்னை எடிப்ப் பாருங்க!:-)
  நன்றி

  பதிலளிநீக்கு
 12. புலவர் ஐயா!குறிப்பிடப்பட்ட நேரம் 4 மணி .ஆனால் 5 மணிக்கு முன் தொடங்காது!தொடர்பு கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 13. ரெவெரி சொன்னது…

  டிஸ்கி:-யூத் பதிவர் சந்திப்பாம்!அதனால் போய் வெளியே இருந்து எட்டிப்பார்த்து விட்டு வரலாம் என இருக்கிறேன்! ஹி,ஹி!....//

  //முப்பது வயதில் தொப்பை வைத்தால் யூத்...ஹிஹிஹிஹி...//
  அப்படிப் பார்த்தாலும் நான் யூத் இல்லை!ஏனெனில் எனக்குத் தொப்பை இல்லை!
  நன்றி

  பதிலளிநீக்கு
 14. யூத் பதிவர்கள் சந்திப்பு எனப் பார்த்தவுடன்
  நீங்கள்தான் தலைமை என நினைத்தேன்
  வெளியிலிருந்து பார்த்துவிட்டு என்ற பதிலைப் பார்த்ததும்
  குழம்பிப்போய்விட்டேன்
  ஒருவேளை இது வயதுக் கணக்கோ ?

  பதிலளிநீக்கு
 15. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நன்றிசாஅர்.......புதிய லிங்குகளை தந்தமைக்கு அங்கு விசிட் பன்னிட்டு வாரன்...

  பதிலளிநீக்கு
 17. எல்லாரும் வெளிய நின்னுட்டா நாங்க குழந்தைக எங்க நிக்கிறது?

  பதிலளிநீக்கு
 18. பெயரில்லா18 மே, 2012 அன்று AM 10:30

  அடையார் அசல் அஜீத் சென்னை பித்தன் அவர்களே வருக. வருக.

  பதிலளிநீக்கு