தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 04, 2012

சில்லுனு ஒரு பீர்!
தாகத்தைத் தணிக்க ’பீர் ’குடிப்பது நல்லதா?

பலர் சொல்வார்கள்இந்த வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு பீர் அடிச்ச சுகமா இருக்கும்என்று.

அதுதான் மேட்டர்.—’ஜில்லுன்னு’-அவ்வளவுதான்.

உண்மையில் பீர் குடித்தபின் அதுவும் மற்ற மது வகைகள் போல் உடல் தண்ணீரை வற்ற வைக்கிறது என்றே சொல்கிறார்கள்(dehydration)எனவே காசைச் செலவழித்து அதைக் குடிப்பதற்குப் பதில்,இளநீர் குடிக்கலாம்!காதி க்ராஃப்டில் 8 ரூபாய்க்கு பாக்கெட்டில் நீரா கிடைக்கிறது.

(சே!இன்று வெயில் ரொம்ப ஜாஸ்தி.சாயந்திரம் ஜில்லுன்னு ஒரு………….!)

அன்று ஒரு நண்பர் சொல்லிகொண்டிருந்தார்வர வர பீர் எல்லாம் தரம் குறைந்து விட்டது.நேற்று நாலு பாட்டில்  பீர் குடித்தேன் .ஒரு எஃபெக்ட்டும் இல்லை!”

இவர்கள் எல்லாம் பாட்டிலில் குடித்தால் கட்டுப்படியாகாது.குழாய் வைத்த பீப்பாயில் பீரை நிரப்பி,அதற்கு முன் நிறுத்திக் கையேந்திக் குடிக்கச் சொல்ல வேண்டியதுதான்!

பீப்பாய் என்றதும் நினைவுக்கு வருவது ;அலிபாபாவும் 40 திருடர்களும்
பீப்பாயில் ஒளிந்திருக்கும் 39 திருடர்களயும் உருட்டித்தள்ளி கொன்று விடுகிறார்கள்.

திருட்டு என்பது என்ன?அடுத்தவருக்குச் சொந்தமான பொருளை அவருக்குத் தெரியாமல்,அவரது சம்மதமோ,அனுமதியோ பெறாமல் தனக்கு சொந்த மாக்கிக்கொள்வது!

எல்லாத் திருட்டுமே  பணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.சில வசதியானவர்கள் கூட சில நேரங்களில் ஒரு பொருளைப் பார்த்தவுடன் உள்ள அரிப்பில் அதைத் திருடுகிறார்கள்-சின்னச் சின்ன பொருள்களைக்கூட!இதற்குப் பெயர் ’க்ளெப்டோமேனியா’.இதை ஒரு மன நோய் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றபோது ஒரு வீரர் ஒரு மாலில் காலுறை திருடி மாட்டிக் கொண்டார்(சுரு நாயக்?)

இப்போது சென்னையிலும் மால்கள் பெருகி வருகின்றன.இந்தக் கோடையில் குளு குளு என்று பொழுதைப் போக்க மக்கள் பலர் மால்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.செய்தித்தாளில் படித்தேன்,ஒரு விடுமுறையன்று எக்ஸ்பிரஸ்  அவென்யூ மாலில்,கூட்டம்  அமோகமாம்.ஆனால் வாங்க வந்தவர்களை விடப் பொழுதுபோக்க வந்தவர்கள்தான் அதிகமாம்.ஓசியில் ஏசி என்றால் நல்ல சுகவாசியாய்  நண்பர்களுடன் பேசிப் பொழுதுபோக்க வேண்டியதுதானே!

நான் சென்னை வாசிதான். ஆனால் சிடிசெண்டர் மால் தவிர வேறு எந்த மாலுக்கும் இது வரை சென்றதில்லை.நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்த மாலெல்லாம் கிடையாது. எங்களுக்கிருந்த ஒரே மால்,மறக்க முடியாத, வேறெந்த மாலையும் விட என்றும் சிறந்ததான மூர் மார்க்கெட்தான்.என் இனிய நினைவுகளுடன் தொடர்புடைய இடம்.

லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு.இன்று ஒரு லிமெரிக்கோடு முடிக்கலாம்!

”பாருக்குப் போனான் சுகுமார்
குடிக்க நினைச்சான் கொஞ்சம் பீர்
வந்தது பீர் இரண்டு பிட்சர்
கூடவே  கொறிக்கக் கொஞ்சம் மிக்சர்
பின்னாலே நடந்தது ஒரே ரப்சர்!”

37 கருத்துகள்:

 1. அக்கினி வெயில் நேரத்தில் அக்கினியாய் ஒரு பார்வை .tha.ma.2.

  பதிலளிநீக்கு
 2. ’க்ளெப்டோமேனியா’ஜாலி திருட்டு அந்த கணத்தில் சந்தோசத்தையும் பிறகு வருத்தையும் கொடுக்கும்.

  பதிலளிநீக்கு
 3. மூர் மார்கெட்ல என்ன சார் வாங்கினீங்க.....?இல்லை பொழுதை போக்கவா...!ஹிஹி!

  பதிலளிநீக்கு
 4. அண்ணே இங்கெல்லாம் பீர் தான் முதல்ல கொடுப்பாங்க...அப்புறம் தான் எல்லாமே...ஹெஹெ..என் சைஸ் பாத்தீங்கள்ல!

  பதிலளிநீக்கு
 5. மால்களைப் பொறுத்தவரை நீங்கள் சொன்னது மெத்தச் சரி. ஏசியை ஓசியில் அனுபவிக்க வரும் கூட்டமே அதிகம், நீண்ட நாளைக்குப் பின் உங்கள் லிமெரிக் படித்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. இந்த ‘க்ளெப்டோமேனியா’ என்பது பணம் படைத்தவர்கள் கண்டுபிடித்த சொல் என நினைக்கிறேன். இல்லாதவன் எடுத்தால் அது திருட்டாம். இருப்பவன் எடுத்தால் அது வியாதியாம். முன்னாள் குடியரசுத்தலைவர் ஒருவர் மனைவிக்குக் கூட இந்த ‘வியாதி ‘ இருந்ததாம்.

  பீரில் ஆரம்பித்து ரப்சரில் முடித்து இருக்கிறீர்கள். புதுவித அந்தாதி? வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அக்னி வையிலில் குளுகுளுக்க ஒரு பதிவு. சிறப்பாக இருக்கு.
  லிமெரிக் நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. //உண்மையில் பீர் குடித்தபின் அதுவும் மற்ற மது வகைகள் போல் உடல் தண்ணீரை வற்ற வைக்கிறது என்றே சொல்கிறார்கள்(dehydration)எனவே காசைச் செலவழித்து அதைக் குடிப்பதற்குப் பதில்,இளநீர் குடிக்கலாம்!காதி க்ராஃப்டில் 8 ரூபாய்க்கு பாக்கெட்டில் நீரா கிடைக்கிறது.//


  நல்ல, தற்காலத்திற்கு தேவையான செய்தி!.

  பதிலளிநீக்கு
 9. ayya!

  ungal vayathukku-
  anupavathirkku-
  beer adippavarkalai-
  seruppaale adikkalaam!

  பதிலளிநீக்கு
 10. வெயிலுக்கு இளநீர் ஓகே.....

  ஆனா பீர் வாங்க தான் கூட்டம் அதிகமா இருக்கு....

  பதிலளிநீக்கு
 11. பீர் , பீப்பாய் , திருட்டு, நாயக் , மால் ,மூர் மார்க்கெட் .......... !!!!!!!!!!!!!!!!!!
  அந்தாதி கெட்டது ... நிற்க பீர் குடித்தால் உடம்பிற்கு நல்லது என்றும் ஒரு கருத்து உள்ளது , அளவோடு .இரத்தத்தை சுத்தம் செய்யும் என்றும் கூறுவார்கள் .. KIDNEY STONE உள்ளவர்கள் குடிப்பது மருத்தவ ரீதியாக நல்லது என்றும் கேள்வி பட்டுள்ளேன் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 12. லிங்கில் போய்ப் பாருங்க சுரேஸ்
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. விக்கி,சும்மா பூந்து விளையாடுங்க.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. /////உண்மையில் பீர் குடித்தபின் அதுவும் மற்ற மது வகைகள் போல் உடல் தண்ணீரை வற்ற வைக்கிறது என்றே சொல்கிறார்கள்(dehydration)எனவே காசைச் செலவழித்து அதைக் குடிப்பதற்குப் பதில்,இளநீர் குடிக்கலாம்!காதி க்ராஃப்டில் 8 ரூபாய்க்கு பாக்கெட்டில் நீரா கிடைக்கிறது///////////


  அருமையான தகவல் ..!

  பதிலளிநீக்கு
 15. க்ளெப்டோமேனியா வா புது தகவல் அன்பரே

  பதிலளிநீக்கு
 16. வாசு ,அளவோடு இருந்தா நல்லதோ என்னவோ தெரியாது. குடிப்பதற்கு ஏதானும் சாக்கு வேண்டாமா?
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. பெயரில்லா4 மே, 2012 அன்று 10:04 PM

  பீர் என்றால் என்ன?

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்! எனக்கு இந்த பழக்கமெல்லாம் இல்லை! எனவே கருத்துரை போடவே எனக்கு யோசனையாக இருந்தது. இருந்தாலும் கேட்ட பாட்டின் வரிகள்....

  "சிலுக்கோட கையால வாங்கீக் குடி....
  நல்லா ஜிவ்வூன்னு ஏறீரும் தாங்கிப் புடி"
  படம் : வண்டிச்சக்கரம்

  பதிலளிநீக்கு
 19. பெயரில்லா5 மே, 2012 அன்று 12:29 AM

  லிமெரிக் சூசூசூசூசூப்பர்...

  பதிலளிநீக்கு
 20. திருமாலைத்தவிர வேறு ஒருமாலும் யானறியேன்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 21. நீண்ட இடவேளைக்குப் பின்னர் வந்து வாசித்தேன். பீர் ரசிகர்களையும், அவர்கள் கூறும் காரணங்களையும் நார் நாராக் கிழிச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 22. tamilcc.co.cc சொன்னது…

  //பீர் என்றால் என்ன?//

  ஐயா பதிவர்களே!நல்லாப் பார்த்துக்குங்க!இந்த மாதிரி பச்சைப்பிள்ளையெல்லாம் வலையுலகில் இருக்கு!எனவே பொறுப்புணர்ச்சியோடு பதிவிடுங்க! :-))
  நன்றி.tamilcc.co.cc

  பதிலளிநீக்கு
 23. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

  //வணக்கம்! எனக்கு இந்த பழக்கமெல்லாம் இல்லை! எனவே கருத்துரை போடவே எனக்கு யோசனையாக இருந்தது. இருந்தாலும் கேட்ட பாட்டின் வரிகள்....

  "சிலுக்கோட கையால வாங்கீக் குடி....
  நல்லா ஜிவ்வூன்னு ஏறீரும் தாங்கிப் புடி"//
  யார் கையால வாங்கிக் குடிச்சாலும் ஜிவ்வுன்னுதான் ஏறும்.
  குடி குடியைக் கெடுக்கும்.
  நன்றி தமிழ் இளங்கோ

  பதிலளிநீக்கு
 24. ரெவெரி சொன்னது…

  // லிமெரிக் சூசூசூசூசூப்பர்...//
  மிக்க்க்க்க்க.. நன்றி ரெவெரி

  பதிலளிநீக்கு
 25. புலவர் சா இராமாநுசம் சொன்னது…

  // திருமாலைத்தவிர வேறு ஒருமாலும் யானறியேன்!//

  திருமால் இருக்க வெறுமால் எதற்கு.
  திருமாலே நமக்குப் பெருமால்(ள்)!

  நன்றி புலவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 26. FOOD NELLAI சொன்னது…

  //நீண்ட இடவேளைக்குப் பின்னர் வந்து வாசித்தேன். பீர் ரசிகர்களையும், அவர்கள் கூறும் காரணங்களையும் நார் நாராக் கிழிச்சிட்டீங்க.//
  நன்றி சங்கரலிங்கம்!கொஞ்சம் ஃப்ரீ ஆயிட்டீங்களா?
  எனக்குத்தான் பாக்கியமில்லை!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
  vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

  பதிலளிநீக்கு