தொடரும் தோழர்கள்

ஞாயிறு, மே 13, 2012

அம்மாவே தெய்வம்!


ஆலயம் சென்று அம்மனைத் தொழுவீரே

வீட்டினில் இருக்கும் அம்மாவைத் தொழுததுண்டா?

அம்மன் சிலைக்குப் பட்டுப்புடவை

அம்மாவுக்கு ஒரு நூல்புடவை உண்டா?

சர்க்கரைப் பொங்கல் ,வடை படைப்பீரே

சாதாரணச் சோறு உண்டா அம்மாவுக்கு.

கோவில் கட்ட கொடை கொடுப்பீரே,

வீட்டில் இருக்க இடம் இல்லையோ தாய்க்கு ?

தன் உடலில் பத்து மாதம்  தங்க வைத்தாள்

இன்றவள் இருப்பதோ முதியோர் இல்லம்!

அம்மனும் சரி அம்மாவும் சரி

அன்பைத் தவிர எதுவும் கேட்கவில்லை!

இந்நாளில் உறுதி மொழியெடுங்கள்

அன்னையைப் போற்றுவோம்

அவள் தாள் பணிவோம்!
 --------------------------------------
தாய்மையே தலை வணங்குகிறேன்!

20 கருத்துகள்:

 1. அருமை ஐயா..அனைவரும் யோசிக்க வேண்டிய விசயம்..

  பதிலளிநீக்கு
 2. அன்னையின் அன்பை அழகாக ஆராதித்திருக்கிரீர்.
  தாயின் பெருமைகளை விளக்கும் கவிதை ஒன்றை படித்திருக்கிறேன்.எனது வலைப பதிவிற்கு வருகை தந்தால்மகிழ்ச்சி அடைவேன்.
  த. ம 2

  பதிலளிநீக்கு
 3. அன்னைக்கு நிகர் எவருமில்லை ..!

  பதிலளிநீக்கு
 4. அன்னையைப் போற்றுவோம்

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு.
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 6. அன்னையைப் போற்றுவோம்... தாய்மையையும் அன்பையும் பேணுவோம்.. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா :D

  பதிலளிநீக்கு
 7. எளிமையான வரிகளில் அழுத்தமாய் ஓர் கவிதை...அருமை சார்..

  பதிலளிநீக்கு
 8. அம்மாவுக்கு நிகராய்ச் சொல்ல உலகில் எதுவும் கிடையாது. அருமை!

  பதிலளிநீக்கு
 9. அருமையான சிந்தனை. கடைபிடித்தால்,கடைத்தேறுவோம்.

  பதிலளிநீக்கு
 10. நட்ட நடு நிசியில் பெற்ற அம்மாவைப் போ வெளியே எனத் துரத்திய
  மா பாதகர் இன்று இருபது வருடம் கழித்து
  மஹானுபாவன் போல அன்னதானம் செய்கிறேன் என்று
  நிதி திரட்டுகிறார்கள். அதையும் தான் பார்க்கிறோம்.
  ப்ராயச்சித்தமாக இருக்குமோ என்னவோ ?

  சரியான சாட்டை அடி. கொடுத்து இருக்கிறீர்கள்.

  அம்மா அவள்
  இருக்கும்போதும் அன்பு
  இறந்தபோதும் அன்பு
  மறந்தவனை மன்னிக்குமோ
  மனம் ?

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 11. மிக அருமையான வரிகள். ஆயிரம் முறை சொன்னாலும் அலுக்காத ஒரே வார்த்தை அம்மா.

  பதிலளிநீக்கு
 12. உண்மையான அன்னையர் தினம்...
  வாழ்த்துக்கள் சொல்ல முழு தகுதிடையவர்.....
  தாங்கள்........

  தங்களை வணங்குகிறேன்......

  பதிலளிநீக்கு
 13. உண்மையான அன்னையர் தினம்...
  வாழ்த்துக்கள் சொல்ல முழு தகுதிடையவர்.....
  தாங்கள்........

  தங்களை வணங்குகிறேன்......

  பதிலளிநீக்கு
 14. அன்னையைத் துதிக்கும் அழகிய கவி.

  பதிலளிநீக்கு
 15. யார்...யாரோ சொல்வதை விட நீங்க தாயைப்பற்றி சொல்வதுதான்... பொருந்தும் ஐயா!

  பதிலளிநீக்கு
 16. புரட்சி தலைவர் பாணி. தாயை பெருமை படுத்தும் போற்றும் வண்ணம் பல படங்கள் தலைப்பு , படத்தில் காட்சி அமைப்பு ; நடிகர் திலகம் கூட தன வீட்டிற்கு அன்னை இல்லம் என்று தான் பெயர் வைத்தார் ...
  தாயை தவிர மற்ற அனைவரையும் தாய் என்றும் போற்றும் மாக்களுக்கு சரியான அடி ..
  திருந்தட்டும் அவர்கள் . வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 17. உங்களோடு நாங்களும் தாய்மைக்கு தலை வணங்குகிறோம்.

  பதிலளிநீக்கு
 18. முதியோர் இல்லத்தில் அம்மா இருந்தால் என்ன தவறு?

  பதிலளிநீக்கு