தொடரும் தோழர்கள்

வியாழன், மே 10, 2012

இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!


இழந்ததெல்லாம்  திரும்பத் தா எனக் கென்றேன்

இழந்த தெவை என  இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன்  ,கணக்கில்லை

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில்  இளமையை இழந்தேன்

கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்

காணாமல் போனாளே அவளை இழந்தேன்

வயதாக ஆக  உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம்  இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும்  பேறும்

இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

இறைவன் மறைந்தான்.

41 கருத்துகள்:

 1. இழந்ததை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் சந்தோஷம் தான் நண்பா!
  அருமையான இழப்புக்கள் தான்!
  மிக்க நன்று
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

  வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்// கேள்வியும் பதிலையும் ஒரு சேர தந்து தெளிவு படுத்தும் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 3. கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

  உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

  நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

  சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

  தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

  திகைத்தேன்!//

  திகைப்பு மட்டுமா ஆச்சர்யமும்தான்.....!!!

  பதிலளிநீக்கு
 4. எப்படிங்க இப்படி அழகாச் சிந்திக்க முடியுது... அசந்து நின்னுட்டேன் இப்படியும் மறுபக்கம் இருக்கான்னு. அருமை.

  பதிலளிநீக்கு
 5. இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன் ..

  ஆஹா அருமை!

  பதிலளிநீக்கு
 6. AYYA!

  IZHANTHATHELAA-
  IRAIVAN THANTHATHU THAANE!
  KODUTHTHA AVAN!
  EDUKKURAAN!

  NEENGA SONNATHUM AZHAKAA IRUNTHATHU!

  பதிலளிநீக்கு
 7. romba nalla irukku.vellicham pottappala irukku sir.nijammaave thanks.

  பதிலளிநீக்கு
 8. romba nalla irukku.vellicham pottappala irukku sir.nijammaave thanks.

  பதிலளிநீக்கு
 9. கவிதையை படித்து நாங்களும் தெளிந்தோம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. பித்தன் என்பது இதைத்தானா:) இழப்பின் இரு பக்கங்கள் எதுகை மோனையோடு மொழியோடு நடனமாடுகின்றன.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அழகான கருத்துக்கள். எதற்குமே ஒரு மறுபக்கம் உள்ளதென்று இறைவன் சொல்வதுபோல அழகாக உணர்த்தி விட்டீர்களே! ;)

  பதிலளிநீக்கு
 12. சென்னைப் பித்தன்,
  ஆழமாய்ச் சிந்திக்கத் தெரிந்த,
  சிந்தித்ததைத்
  தெளிவுபடச் சொல்லத் தெரிந்த ....................
  ‘அறிவுப் பித்தன்’ நீங்கள்!

  பதிலளிநீக்கு
 13. இழந்த நல்லவை கிடைக்குமானால் இழந்த கெட்டவையும் சேர்ந்தே கிடைக்கும் என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. அருமையான ஒரு வாக்கியம் கல்வி கற்றதால் அறியாமை இழந்தோம்......ஒன்றை பெற ஒன்றை இழக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 15. இழப்பின் மறுபக்கத்தை கவிதை மூலம் உணர்த்தியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி முனைவர் பரமசிவம் அவர்களே.!தங்கப் பதக்கம் பெற்றது போல் உணர்கிறேன்..
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. என்னே அருமை !! வித்தியாஸமான கண்ணோட்ட கருத்துக்களை கவிதை மூலமக இவ்வளவு அழகாக வடிததவர்களை கண்ணதாஸனுக்கு பிறகு இப்போது காணமுடிகிறது... மிக்க நன்றி !!

  பதிலளிநீக்கு
 18. K.S. Swaminathan சொன்னது…

  //என்னே அருமை !! வித்தியாஸமான கண்ணோட்ட கருத்துக்களை கவிதை மூலமக இவ்வளவு அழகாக வடிததவர்களை கண்ணதாஸனுக்கு பிறகு இப்போது காணமுடிகிறது... மிக்க நன்றி !!//
  மிகவும் உயர்த்திவிட்டீர்கள் ஐயா!அருகதை உண்டா?
  அன்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. Sir, Are you the author of this great work.I have translated it in to english and I wanted to give credit to the author,Please write to me at ramya475 at hotmail dot com

  பதிலளிநீக்கு