தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 15, 2012

முதியோர் இல்லத்தில் அம்மா இருந்தால் என்ன தவறு?


தலைப்பு ,எனது முந்திய பதிவு”அம்மாவே தெய்வம்” படித்து விட்டு நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி.

முதியோர் இல்லத்தில் அம்மா இருந்தால் என்ன தவறு?

நான் இளைஞன் அல்ல.இன்றைய கலாசாரத்தை என்னால் புரிந்து கொள்ள
 முடியாமல் இருக்கலாம்.

பைத்தியக்காரத்தனமான பழமைச் சிந்தனைகள் என்னுள் நிரம்பியிருக்கலாம்.

குபேரனைக் கும்பிடும் இக்காலத்தில் பாசம்,நேசம் என்பதன் பொருள் மாறிப் போய் விட்டது என்று  புரிந்து கொள்ளாதவனாய் இருக்கலாம்.எனக்குத் தெரிந்த அவில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமை.

முதியோர் இல்லத்தில் அம்மா இருந்தால் என்ன தவறு?”

படிப்பை முடித்த பின் பிள்ளைகள்,வேலைக்காக வெளிநாடு சென்று விட,இந்தியாவில் பெற்றோர்,வேறு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் தனியாக வாழ நேரிடுகிறது.என்ன வசதிகள் இருந்தாலும்  னிமையும் பதுகாப் பின்மையும் பாதகமான அம்சங்கள் என்பதை மறுப்பதற்கில்லை.அந்நிலையில் அவர்கள் நலன் கருதி அவர்கள் வசதியான முதியோர் இல்லத்தில் சேர்க்கப் படுகிறார்கள்—கிளாசிக் குடும்பம்,வானப்பிரஸ்தா போன்றவை.அங்கு அவர்களுக்கு நட்புகளும் கிடைக்கின்றன ;பாதுகாப்பும் இருக்கிறது.இது தவிர்க்க இயலாதது.

ஆனால் அதே ஊரிலேயே.பெற்றோரை ஒரு தொந்தரவாகவோ,பாரமாகவோ நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் தான்,தன் மனைவி குழந்தைகளுடன் ஹாயாக இருக்கும் மகன்கள் பற்றியே இங்கு பேச்சு.   என் நெருங்கிய உறவுக்காரப் பெண் ஒருவர் .ஒரே பையன் செல்லமாக வளர்த்தார்.அவர் கணவர் இறந்தவுடன்.மகன், மனைவி சொல்படி அவளை வெளியே அனுப்பி விட்டான்.நல்ல வேளையாக் கொஞ்சம் குடும்ப ஓய்வூதியம் வருகிறது.அதை வைத்துக் கொண்டு ஒரு முதியோர்  இல்லத்தில் சேர்ந்து தினம் வருந்திக்கொண்டிருக்கிறார் ,மகனின் செய்கையை எண்ணி..

தன் வீட்டில் தன்னுடன் தன்னைப் பெற்ற,தன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய, தாயை வைத்துக் காப்பாற்றாமல் ,அவளுக்கு வயதாகி விட்டது,வேலை செய்ய இயலாது,பாரம்தான் என அவளை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

முதலில் சொன்னது போல் நான் பழைய காலத்து மனிதன்.நவீன சிந்தனைகள் இல்லாதவனாக இருக்கலாம்.

பதிவுலகமே இளைஞர்களின் பாசறைதான்.

எனவே அந்த இளைஞர்களைக் கேட்கிறேன்.

பதில் சொல்லுங்கள்!
58 கருத்துகள்:

 1. பெற்றோர்களை "சீ" என்றும் கூறிவிடாதே!
  இறை மறுப்பைத் தவிர, பெற்றோர் கூறும் எதனையும் நிராகரிக்காதே!
  தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது!
  மேலே குறிப்பிட்டவை இறைவேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  பொதுவாக அனைத்து வேதங்களும் இதையேதான் மொழிகின்றன.
  இருந்தாலும் நாம் திருந்துவதாக இல்லை.
  நாம் முதியவராவதற்கு அதிக தூரம் இல்லை என்பதையாவது எண்ணி இப்படிப்பட்ட பாவச்செயலில் ஈடுபடாமல் தவிர்ப்பது நம் "எதிர்காலத்துக்கு" நன்மையை தரும்.

  பதிலளிநீக்கு
 2. உடன் வந்து அருமையான கருத்துச்சொன்ன உங்களுக்கு நன்றி அஜீஸ்.சத்தியமான வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொருவரும் சராசரியாக 25 வயதிற்கு மேல் தான் சம்பாதிக்க ஆரம்பிப்போம், 25 வருடங்கள் நம்மளை கவனித்துக்கொண்ட நம் பெற்றோர்களுக்கு நாம் திருப்பி செய்யும் கைம்மாறு என்ன ..?

  சராசரியாக ஒவ்வொரு பெற்றோரும் 60 வயது வரை அவர்களது சொந்த காலில் தான் நிற்கிறார்கள், சராசரியாக மீதமுள்ள வெறும் பத்து வருடங்களுக்கு நம்மால் அவர்களை பார்த்துக்கொள்ள முடியாவிட்டால் நாம் மனிதர்களாக பிறந்து என்ன பயன் ..?

  பதிலளிநீக்கு
 4. நல்ல கருத்து. முந்தின பதிவைப் படிக்கவில்லை, படிக்க விருப்பமும் இல்லை. இது அனைத்து பெற்றோர்களுக்கும் பொருந்துமா? மகனுக்கு அடிப்படைக் கல்வியைத் தவிர வேறு எந்த உதவியையும் செய்யாமல் தேவையான மாரல் சப்போர்டையும் அளிக்காமல் (பணம் அல்ல, முயற்சிகளுக்கு ஒரு ஆதரவு மட்டுமே), மகன் நல்ல நிலைமைக்கு வந்து விட்டால் தான் முதியவனாகும் போது தனக்கு உதவி செய்ய மாட்டான் என்று நினைத்து, தன் காலையே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நினைப்பில் சதா குற்றம் குறை சொல்லியே வளர்க்கப் பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்துமா? பணம் இல்லையென்ற காரணத்தினால் சொந்தத் தங்கை திருமணத்தில் பெற்றோராலும் தம்பியாலும் முற்றிலும் புறக்கணிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் இது பொருந்துமா?

  பதிலளிநீக்கு
 5. முதியோர் இல்லம் அறவே ஒழிக்கனும் ஐயா

  பதிலளிநீக்கு
 6. உண்மை,வரலாற்றுசுவடுகள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கேள்வியின் நியாயமும் வேதனையும் புரிகிறது ஐயா!.

  நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி!.

  //நான் பழைய காலத்து மனிதன்.நவீன சிந்தனைகள் இல்லாதவனாக இருக்கலாம்.//

  என்ன சார் நவீன சிந்தனை? இன்றும் பிள்ளைகள் கர்ப்பத்தில் இருந்துதானே பிறக்கிறது. இவ்வுண்மையறியாமல், வானத்தில் இருந்து குதித்தாக நினைப்பதுதான் நவீன சிந்தனையோ?.

  பதிலளிநீக்கு
 8. @அமர பாரதி
  நீங்கள் சொல்வது போன்றவர் மிகச் சிறுபான்மை.விதி விலக்குப் போன்றவர்கள்.ஆனால் அவர்களுக்கும் பிள்ளைப்பாசம் என்பது இல்லாமல் போயிருக்காது.
  //பணம் இல்லையென்ற காரணத்தினால் சொந்தத் தங்கை திருமணத்தில் பெற்றோராலும் தம்பியாலும் முற்றிலும் புறக்கணிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் இது பொருந்துமா//
  இது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.இவரே புறக்கணிக்கப்பட்டவர் எனில்,பெற்றோர் அவரைச் சார்ந்து இருக்க வாய்ப்பும் குறைவே.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. @Syed Ibramsha
  நான் நவீன சிந்தனை என்று சொன்னதே ஒரு எதிர்மறையான கருத்தில்தான்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நானும் திரு சையத் இப்ராம்ஷா அவர்களது கருத்தை ஆதரிக்கின்றேன்.

  அருமையான கேள்வி இக்கால இளைஞர்களுக்காக.

  நிச்சயம் உங்கள் பதிவு சிலருக்கு மனமாற்றத்தை உண்டாக்கக் கூடும். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. நமக்கும் ஒருநாள் முதுமை வரும். பூமியதன் வாழ்நாளை பார்க்கும் போது நம் வாழ்க்கை சில வினாடிகள்.

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் சிந்திப்பதற்கு எதிர்மாறாக சிந்திப்பதுதான் நவீன சிந்தனை, இளைஞர்களின் எண்ணம் என்றால் எனக்கு நவீன சிந்தனை வேண்டாம், நானும் முதியவனே என்று கூறிக் கொள்கிறேன். அம்மாவைப் பராமரிக்க இயலாமல் உள்ளூரிலேயே முதியோர் இல்லத்தி்ல் விடுபவர்களெல்லாம்... மனித ஜென்மத்தி்ல் சேர்த்தியாக மாட்டார்கள்!

  பதிலளிநீக்கு
 13. பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு சந்தோஷமாக இருப்பதாக நினைப்பவன் , முற்பக; செய்யின் பிற்பகல் விளையும் என்பதை மறக்கக்கூடாது. நாளை உனக்கும் இதே கெதிதான் அப்போது வருந்தாமல் சந்தோஷமா வாழ பழகிக் கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
 14. Nothing wrong at all in that; that is the best GIFT a Mom can get on this day - Mothers' day - from "her children!"

  In fact, we (my wife and I), prefer to be left alone when we age and when my son gets married.

  We want our OWN space...Outlook here is totally different, and it is hard to understand for you folks back home in Tamil Nadu!

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. அய்யா!

  உங்களுக்கு வயதாகிருக்கலாம்-
  ஆனால் அனுபவமும் பக்குவமும்-
  இளையர்களை விட உங்களுக்கே-
  அதிகம்!

  நீங்கள் கேட்டது-
  நியாய கேள்வி!

  உண்மைதான்!
  என்னை கேட்டால்-
  "பெத்தவளை மதித்தா-
  நீ உத்தமனே தாண்டா!

  அந்த உத்தமிய மறந்தா-
  நீ-
  செத்தவனே தாண்டா!
  என்ற பாடல் வரியே பதில்!

  பதிலளிநீக்கு
 17. நல்ல பதிவு.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.வயதான தாய் தந்தையை அடைந்து அவர்களுக்கு பணிவிடை செய்யாதவன் நாசமாகட்டும் என்ற நபிகள் நாயகத்தின் (ஸல்)அவர்களின் போதனை நினைவுக் கூற தக்கது.ஒரு முறை புனித போரில் கலந்துக்கொள்ள வந்த ஒரு மனிதரிடம் உனக்கு வயதான தாய் தந்தை இருக்கின்றனரா? என்று நபிகள் நாயகம் கேட்டார்கள். ஆம் என்று அவர் சொன்னவுடன் அவர்களுக்கு பணிவிடை செய் உனக்கு போரில் கலந்த நன்மைக் கிடைக்கும் என்றார்.நாம் நம்முடைய பெற்றோரை எவ்வாறு பேனுகின்றோமோ அதை பார்க்கும் நம் பிள்ளைகள் அதை பேணுவார்கள்.

  பதிலளிநீக்கு
 18. Today wife is future Mother . But youth doesnt know this fact. Sir Muthiyor illam is Manitha kaattchi salai . Inke manitharkalai murukangal vanthu parthu selkintrana .

  பதிலளிநீக்கு
 19. இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்! எனக்கு தாயன்பு கிடைக்க வாய்ப்பில்லை! அதனால் இல்லாதவர்களுக்குத்தான் தாயினருமை தெரியும்!

  பதிலளிநீக்கு
 20. நான் ஒரு இளைஞன் என்ற ரீதியில் இதற்கு மதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் ஐயா..

  இன்றைய உலகில் பணம் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது.இந்த பணத்துக்காகத்தான் மனிதம் பேயாட்டமாக அலைகிறான்.மேலும் இந்த உலகம் மிகவும் வேகமாக இயங்குகிறது.

  பணத்துக்காக அலையும் மனிதன் வாழ்வதுக்கு பணம்தான் வேனும் என்று சொல்லித்தந்த குருவை மறப்பது புதுமையான ஒன்றுதான்.

  உங்களிடம் வினாத்தொடுத்த நண்பரிடம் கேட்கிறேன்...

  நாம் தாயின் வயிற்றிலிருக்கும் போது எம்முடைய ஒரு அசைவால் ஏற்படும் வேதனையை மறந்து அதனையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்ளும் தாய்க்கு நாம் செய்த நன்றிக்கடன் என்ன??

  அவர் பிரசவ வழியால் பெற்ற வேதனையைத்தான் எம்மால் ஈடு செய்ய முடியுமா??

  சரி நாம் குழந்தைப்பருவத்தில் இருக்கும் போது அவள் எமக்கு செய்த சேவைகளில் சிறு பகுதியேனும் எம்மால் அவருக்கு செய்ய முடியுமா..?

  தாயினுடைய ஏறாழமான சேவைகளை நாம் மறந்து விட்டு அந்த தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது எந்த வகையில் நியாயமானது..?

  என்னைப் பொருத்தவரை நல்லா முதுமையடைந்த தாய் என்னுடன் ஒரே விட்டில் இருப்பது எனக்கு பெருமையும் அவருக்கு நான்செய்யும் சேவைகள் எனக்கு அவர் செய்ததுக்கு ஒரு வீதமேனும் ஈடாகாது.

  தாய் என்னுடன் இருப்பது எனக்கு கிடைத்த பக்கியமே

  பதிலளிநீக்கு
 21. கருத்துக்களை அவசரமாக ஒரு வேகத்தில் சொல்லிவிட்டேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 22. நீங்கள் பழமையுமில்லை உங்கள் சிந்தனையில் பழமையுமில்லை சென்னை பித்தன். பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில் ஒரு தவறுமில்லை என்று நம்புகிறேன். இதில் வெளிநாடு உள்நாடு என்றெல்லாம் இல்லை - இன்றைய சமூக நிலையில் பெற்றோர்களைப் பேண முதியோர் இல்லம் போன்றவை மிகவும் அவசியம். அப்பா அம்மாவை மதிக்கிறேன் பேர்வழி என்று அவர்களை வீட்டில் வைத்துக்கொண்டு அவமரியாதை செய்வதை விட அவர்கள் சுதந்திரத்தை மதித்து தனியாக வாழ விடுவதில் என்ன தவறு? இதில் பாவ புண்ணியப் பார்வை அறியாமை என்று நினைக்கிறேன். முதியோர் இல்லத்தில் சேர்ப்பதால் அன்பு இல்லை என்று நினைப்பது பெரும் அறியாமை. நாமும் முதியவர்கள் ஆவோம் - அதனால் தான் இந்தப் பக்குவம் வரவேண்டும் என்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. ஆளை விடுறா சாமி, நீ கண்ணாலம் கட்டிக்குட்டு என்கிறான் போ; என்னையும் உங்க அம்மாவையும் தனியா வுட்டுடுபா; இது தான் நாங்கள் எங்க குழதைகளுக்கு வைக்கும் கோரிக்கை...

  பதிலளிநீக்கு
 24. கையோடு இன்னொன்றையும் எழுதி வைக்கிறேன்.. :)

  பிள்ளைப் பேறு ஒரு விபத்து. பத்து மாதம் சுமப்பதும் துறப்பதும் அன்னை/தந்தையின் விருப்பம். பிள்ளையை வளர்க்கும் பணியில் அன்னை தந்தையின் contribution இன்றியமையாதது. yet, தாய் தந்தை கடமையைச் செய்தார்கள் - அவ்வளவு தான். பதிலுக்கு அவர்களைப் பேணுவது பிள்ளைகளின் கடமை என்று எதிர்பார்ப்பது, தாய் தந்தை செயலில் ஒரு அனாகரீக உட்பொருளை அல்லவா உருவாக்குகிறது? "நாளைக்கு என்னை வச்சுக் காப்பாத்துவாங்கறதுனால இன்னக்கு சோறு போடுறேன்" என்று தினம் சொல்லிவந்தால் என்ன ஆகும் என்று யோசிப்போம்.

  தாய் தந்தையைப் பேணுவது மனிதாபிமானம் - பண்பட்ட மனதுள்ளவர் அத்தனை பேருக்கும் இயற்கையாகத் தோன்றும் உணர்வு. தாய் தந்தையரை மதிப்பவர்கள்.. அவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள்.. இக்கட்டான எந்த சூழலிலும் அவர்கள் முதுமையைக் கழிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதியோர் இல்லம் போன்றவை இக்கட்டான சூழல்கள் இல்லாத இடங்கள். பிள்ளைகளுக்குத் தொந்தரவாக இருப்பதை எந்தப் பெற்றோரும் விரும்புவதும் இல்லை.

  இதை நன்றிக்கடன் பாவம் புண்ணியம் மனிதம் மிருகம் என்றெல்லாம் வகைப்படுத்துவது பேதமை.

  பதிலளிநீக்கு
 25. நம்பள்கி சொன்னது…

  //Nothing wrong at all in that; that is the best GIFT a Mom can get on this day - Mothers' day - from "her children!"

  In fact, we (my wife and I), prefer to be left alone when we age and when my son gets married.

  We want our OWN space...Outlook here is totally different, and it is hard to understand for you folks back home in Tamil Nadu!//

  it is better we do not understand your western outlook!you are talking about parents who are well off .have you thought about a widowed poor/middle class mother who has to depend on her son.?they are the majority and i am talking about them.
  thank you for your comments.

  பதிலளிநீக்கு
 26. @சிட்டுக்குருவி
  நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமான கேள்விகள்.சில கேள்விகள் எனக்கு ஆதிசங்கரரின் “மாத்ரு பஞ்சகத்”தை நினைவு படுத்துகின்றன.நான் உங்களுடன் முழுமையாக உடன் படுகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அப்பாதுரை சொன்னது…

  //நாமும் முதியவர்கள் ஆவோம் - அதனால் தான் இந்தப் பக்குவம் வரவேண்டும் என்கிறேன். //

  ஆம் நாமும் முதியோர்கள் ஆவோம்.அப்போது உணர்வோம் அந்த வலியை!

  பதிலளிநீக்கு
 28. நம்பள்கி சொன்னது…

  // ஆளை விடுறா சாமி, நீ கண்ணாலம் கட்டிக்குட்டு என்கிறான் போ; என்னையும் உங்க அம்மாவையும் தனியா வுட்டுடுபா; இது தான் நாங்கள் எங்க குழதைகளுக்கு வைக்கும் //
  "east is east and west is west and never the twain shall meet"

  பதிலளிநீக்கு
 29. @அப்பாதுரை
  பெற்றோர் எவரும் எதிர்பார்த்துத் தங்கள் கடமையைச் செய்வதில்லை.ஆனால் குழந்தைகளுக்குக் கடமை என்று ஒன்றில்லாமல் போய் விடுமா?முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ,பெற்றோரும் விரும்புவதாக ,அன்பின் அடிப்படையில் அமைவதில்லை .அன்பு, பாசம் ,உறவு என்பதெல்லாம் புத்தகத்தில் படிக்கும் வெறும் வார்த்தைகளாகும் காலம் வந்து கொண்டிருக்கிறது என எண்ணுகிறேன்.

  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 30. தருமி சொன்னது…

  //இதையும் கொஞ்சம் பாருங்கள். ஒரு வயதானவனின் கருத்து ...//

  நான் வீரன் விஜயனின் கருத்தோடு உடன்படுகிறேன்.

  இந்த வயதானவன் பிள்ளைகளைச் சார்ந்து இல்லை..ஆனால் என் தாயைக் கவனிப்பது என் கடமையாகக் கருதுறேன்.
  நன்றி தருமி ஐயா.

  பதிலளிநீக்கு
 31. அருமையாகச் சொன்னீர்கள் உஸ்மான்.நன்றி

  பதிலளிநீக்கு
 32. வீடு சுரேஸ்குமார் சொன்னது…

  // இல்லாதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்! எனக்கு தாயன்பு கிடைக்க வாய்ப்பில்லை! அதனால் இல்லாதவர்களுக்குத்தான் தாயினருமை தெரியும்!//
  உண்மை.எனக்குத் தந்தையன்பு என்ன வென்று தெரியாது--என் ஐந்து வயதில் தந்தையை இழந்தேன்.என் தாய்தான் எனக்குத் தந்தையுமானவர்.
  நன்றி சுரேஸ்குமார்

  பதிலளிநீக்கு
 33. அருமையான பதிவு! அடிக்கடி நான் ஆதங்கப்பட்டு எழுதுவது தான்! இதற்கு இளைஞர்கள் தான் மன வலிமையும் கடமை உணர்வுகளுமுள்ள தார்மீகப்பொறுப்புடன் இருக்க வேண்டும். முதியோர் இல்லம் சென்று முதியவர்களின் தனிமையையும் கண்ணீரையும் பார்த்தால்தான் கொஞ்சமாவது அந்த வலி என்னவென்று புரியும். எந்த ஒரு உயிரும் அன்பினால்தான் உயிர் வாழ்கிறது. எப்படி அன்பு கிடைக்கும்போது மனசு பூரிக்கிறதோ, அதை திரும்பக்கொடுக்கும்போது தான் முழு வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகிறது. இது பொதுவாய் எல்லோருக்கும் பொருந்தும் போது, நம்மைப் பெற்றவர்கள் பால் அது பல மடங்காக இருத்தல் வேண்டாமா? அவர்கள் எதுவுமே செய்திருக்காவிட்டாலும்கூட, அன்பு என்பதையே காட்டியிருக்காவிட்டாலும்கூட, இந்த உலகத்தின் அழகுகளையும் நல்லவைகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பதற்கான நன்றியை நாம் காட்டலாமே?

  பதிலளிநீக்கு
 34. Today's children say that we have given birth to them because we wanted them, and all parents take care of their children. So there is no big deal about it. These are the sentences I hear from my children.they think that they have all rights to do whatever they want after they cross their age of 21.

  பதிலளிநீக்கு
 35. நின்க்கத் தனக்கு! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!உணர்ந்தால் சரி!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 36. @மனோ சாமிநாதன்

  தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 37. @Narmi
  it is a pity that some of the younger generation do not care for the finer feelings in life.
  thank you

  பதிலளிநீக்கு
 38. @புலவர் சா இராமாநுசம்
  உண்மை.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 39. தன்னை வயதான காலத்தில் பிள்ளைகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாருக்கும் அவர்கள் குழந்தைகளை எப்படி கவனித்துக் கொண்டார்களோ அப்படியே கவனித்துக் கொள்ளப் படுவார்கள்.  இது ஒரு இரு வழிப் பாதை.  முற்பகல் செய்ததுதான் பிற்பகலில் விளையும்.

  பதிலளிநீக்கு
 40. நீங்கள் நினதைத்தது தவறு! நான் சொல்ல வந்தது, பணம் இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் "வயதானவர்கள் எல்லோரும், உடம்பு ஊனமாக இருந்தாலும்" இங்கு தனியாக இருப்பதைத் தான் விரும்பிகிரார்கள்.

  ஏழையாக இருந்தாலும் வாழ்வதற்கு மகனையோ அல்லது மகளையோ சார்ந்து இருக்கவேண்டியது இல்லை; அந்த வேலையை செய்யவேண்டியது அரசாங்கம் மட்டுமே!

  நான் சொல்லவந்தது அதைத்தான்!

  பதிலளிநீக்கு
 41. @அமர பாரதி
  முற்பகலில் நல்லதே செய்திருந்தாலும் பிற்பகலில் இன்று அது விளையாமல் போகிறதே அதுதான் வருத்தம் அமரபாரதி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 42. @நம்பள்கி
  நான் என்ன கண்டேன் அதையெல்லாம்!நான் சொல்ல வந்தது இங்கு இருக்கும் நிலை பற்றியே!
  நன்றி நம்பள்கி

  பதிலளிநீக்கு
 43. //முற்பகலில் நல்லதே செய்திருந்தாலும் பிற்பகலில் இன்று அது விளையாமல் போகிறதே அதுதான் வருத்தம் அமரபாரதி// அது கொடுமைதான் அய்யா. அரசாங்கம் தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். கண்ட இலவசங்களுக்காக பணத்தை வீணடிப்பதை விட முதியோர் இல்லங்களைக் கட்டி நல்ல முறையில் பராமரிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 44. அமர பாரதி சொன்னது…

  //முற்பகலில் நல்லதே செய்திருந்தாலும் பிற்பகலில் இன்று அது விளையாமல் போகிறதே அதுதான் வருத்தம் அமரபாரதி//

  //அது கொடுமைதான் அய்யா. அரசாங்கம் தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். கண்ட இலவசங்களுக்காக பணத்தை வீணடிப்பதை விட முதியோர் இல்லங்களைக் கட்டி நல்ல முறையில் பராமரிக்கலாம்.//

  அப்படிச் செய்தால் ஓட்டுக் கிடைக்குமா?!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 45. பெயரில்லா16 மே, 2012 அன்று 8:26 PM

  கணேஷ் சொன்னது…
  நீங்கள் சிந்திப்பதற்கு எதிர்மாறாக சிந்திப்பதுதான் நவீன சிந்தனை, இளைஞர்களின் எண்ணம் என்றால் எனக்கு நவீன சிந்தனை வேண்டாம், நானும் முதியவனே என்று கூறிக் கொள்கிறேன். அம்மாவைப் பராமரிக்க இயலாமல் உள்ளூரிலேயே முதியோர் இல்லத்தி்ல் விடுபவர்களெல்லாம்... மனித ஜென்மத்தி்ல் சேர்த்தியாக மாட்டார்கள்!
  //
  Amen.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் ஐயா,
  நல்லதோர் கேள்வியினை நம்மிடத்தே விட்டிருக்கிறீங்க.

  பிள்ளைகள் தாம் விரும்பின் தம் கூடப் பெற்றோரை அழைத்து வெளிநாடுகளில் வைத்திருக்கலாம். ஆனால் தம்மை பெற்று வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை கவனிக்காது, பார்க்காது இருப்பது தான் ரொம்ப வேதனையான விடயம். இது தவறு என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 47. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. அவரவர்கள் தாங்களே முடிவு எடுக்கவேண்டிய பிரச்சினை.

  பதிலளிநீக்கு
 48. I agree with that of MANO SAMINATHAN.But the reason for this situation to be also analysed.1.In our period there was free education and even in management school there was a reasonable fees.Now education becomes business. Again in the cities such as Chennai,Mumbai , etc,the rent is too high.The young generation like to have a nice house in a high class apartment at high rate.But only one thing is if there is a WILL ,there is a way.It is in the hands of the young generation.by DK.

  பதிலளிநீக்கு