தொடரும் தோழர்கள்

திங்கள், மே 28, 2012

என்ன பரிசு வேண்டும்?!--பிங்க்பாங்க் பந்து!


இது பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்தவக் கல்லூரியில் படித்து வந்த என் அக்கா மகள் சொன்ன ஒரு கதைதான்.(இப்போது அவள் யு.எஸ்ஸில் ஒரு ஆன்காலஜிஸ்ட்). இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் அவதாரம் எடுத்து மின்ஞ் சலில் வந்திருக்கும் இக்கதையை(!) உங்களுடன் பகிராமல் இருப்பது மிகப் 'பெரிய குற்றம் 'என்று தோன்றியதால், அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு குழந்தைக்கு அதன் பிறந்தநாளன்று உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று அப்பாகேட்க எனக்கு ஒரு சிவப்புபிங்க்பாங்க்பந்து வேண்டும் என்று சொல்ல ,தந்தை வாங்கிக் கொடுத்தார்

அடுத்த பிறந்த நாளன்றும் சிவப்புபிங்க்பாங்க் பந்து வேண்டும் எனக் கேட்க தந்தை வாங்கிக் கொடுத்தார்

பத்தாவது பிறந்தநாளின் போதும்   அவன் கேட்டபடியே சிவப்பு பிங்க்பாங்க் பந்து பரிசாக் கிடைத்தது. 15 ஆவது பிறந்த நாளன்றும் அவன் சிவப்பு பிங்க் பாங்க் பந்து வேண்டும் எனக் கேட்க தந்தை வாங்கித் தந்தார்.

தேர்வில் வெற்றி பெற்ற பின்

தந்தை:மகனே என்ன பரிசு வேண்டும்?
மகன்:சிவப்பு பிங்க்பாங்க் பந்து.

…….
திருமணத்தின் போது

தந்தை:மகனே ,என்ன பரிசு வேண்டும்?
மகன்:சிவப்பு பிங்க்பாங்க் பந்து!

இப்படி வாழ்நாள் முழுவதும் மனைவி மக்கள் எல்லோரிடமும் அவன் கேட்ட பரிசு ’சிவப்பு பிங்க்பாங் பந்து!’

கடைசியாக அவன் மரணப் படுக்கையில் இருக்கையில் உறவினர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க அவன் சொன்னான்”ஒரு சிவப்பு பிங்க்பாங்க் பந்து.”

பந்தைக் கொடுத்தபின் அவனது மகன் கேட்டான்”அப்பா!எப்போதும் பரிசாக சிவப்பு பிங்க்பாங்க் பந்தே கேட்டீர்களே,ஏன்?”

அவன் சொன்னான்”அது வந்து மகனே எனக்கு……………….”

பேசிக்கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்து விட்டது!

ஹா,ஹா,ஹா!!

32 கருத்துகள்:

 1. அதுசரி...
  கடைசி வரைக்கும் சொல்லாமலே பொயிட்டானே படுபாவி...
  ஹா... ஹா....

  பதிலளிநீக்கு
 2. ஹா,ஹா,ஹா!!

  முடிவு ! யாருக்குத் தெரியும்!?

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. அது எதுக்குனா ........................................(உஷ் ..ரகசியம் ) யாரிடமும் சொல்லாதிங்க

  பதிலளிநீக்கு
 4. ஆஹா... என்னன்ன சொல்லாம போன மர்மமே ரசிக்கும்படியான ஒரு விஷயமா அமைஞ்சிட்டுதே. சூப்பருங்கோ!

  பதிலளிநீக்கு
 5. செத்துப் போன ” பிங்க்பாங்க்” பந்து ஆசாமி அப்பாவியா? அடப் பாவியா?

  பதிலளிநீக்கு
 6. ஒரு சிவப்பு பிங்க்பாங்க் பந்து.”

  மரணத்திலும் மறையாத சஸ்பென்ஸ்....!!!

  பதிலளிநீக்கு
 7. நானும் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்ததுள்ளேன்,

  "என்ன கொடுமை, இதை படித்து விட்டு நான் மட்டும் காரணம் தெரியாமல் நொந்து போய் இருக்க வேண்டுமா இந்தா நீயும் பி(ப)டித்துக்கொள்" என்று நண்பன் ஃபார்வேட் பண்ணியிருந்தான்!.

  அனால், "அவர் ஏன், கடைசிவரை பிங்க் பால் கேட்டுக் கொண்டிருந்தார் என்றுதான் தெரியவில்லை.

  :))

  பதிலளிநீக்கு
 8. எங்களுக்கும் அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது .

  பதிலளிநீக்கு
 9. சிவப்புப் பந்தில் மனம் ஏன் லயித்ததோ அவருக்கு
  அவருக்கே வெளிச்சம்...

  பதிலளிநீக்கு
 10. இந்த அருமையான ‘சஸ்பென்ஸ்’ கதைக்கு ஒரு ‘முடிவு’சொல்பவருக்குப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கலாம்.

  செய்யலாமா நண்பரே?

  பதிலளிநீக்கு
 11. //அவன் சொன்னான்; “அது வந்து மகனே எனக்கு..........”//

  ”எனக்கு.....ஒரு வித்தியாசமான ஆளா வாழ்ந்து சாகணும்னு ஆசை. அதனாலதான், அறியாப் பருவத்தில் கேட்ட பிங்பாங்க் பந்தையே ஆவி பிரியற இந்த நேரத்திலும் கேட்டேன்..........”

  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் ஆவி பிரிந்தது.

  முடிவு எப்படி?

  பதிலளிநீக்கு
 12. கதையின் முடிவில் ஸஸ்பென்ஸ் இருப்பது உண்மைதான். ஆனால் ஒரு குழந்தை சின்ன வயதில் சிவப்பு’பிங்க்பாங்க்’ பந்து கேட்டது என்பதுதான் நம்பமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 13. அடப்பாவி மனுசா...! சிகப்பு பந்து மேல வைத்திருக்கிற பாசத்தை “பந்துக்கள் மேல காட்டலையோ!?” அதனால உண்மை தெரியாம போயிருச்சே..!!!

  பதிலளிநீக்கு
 14. இதெல்லாம் ஒரு பதிவு? இதற்கு கருத்துக்கள்? இதற்கு சிங்சாங் அடிக்க இருபது பேர்கள்? இதற்கு தமிழ்மண வாக்குகள்? தண்டமோ தண்டம். என்ன கொடுமை இது?

  இத்தளத்துக்கு இருக்கும் தமிழ்மண டிராபிக் ரேன்க்கை வைத்து தமிழ்மணத்தின் தராதரமும் வெட்ட வெளிச்சமாகிறது.

  வசியநம !!!

  பதிலளிநீக்கு
 15. இந்த பதிவுக்கு தமிழ்மணத்தில் பரிந்துரைத்து வாக்களித்திருக்கும் நபர்கள்

  rrajja kuttan jram178 kashyapan tthamizhelango maduraisokkan chennaipithan sasikala2010eni@gmail.com

  இவர்களை நினைத்து எதனால் சிரிப்பது ?

  சிவ! சிவா !!!

  பதிலளிநீக்கு
 16. //Syed Ibramsha சொன்னது…
  நானும் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்ததுள்ளேன்,

  "என்ன கொடுமை, இதை படித்து விட்டு நான் மட்டும் காரணம் தெரியாமல் நொந்து போய் இருக்க வேண்டுமா இந்தா நீயும் பி(ப)டித்துக்கொள்" என்று நண்பன் ஃபார்வேட் பண்ணியிருந்தான்!.

  அனால், "அவர் ஏன், கடைசிவரை பிங்க் பால் கேட்டுக் கொண்டிருந்தார் என்றுதான் தெரியவில்லை.

  :))

  29 மே, 2012 9:48 am //


  மூன்று ஆண்டுகளுக்கு முன் பரவி ஊசிப்போனதை காப்பி அடித்ததா?

  அட‌ ச‌ங்க‌ரா. ஏன் இந்த‌ பொழ‌ப்பு?

  பதிலளிநீக்கு
 17. சிந்திக்க உண்மைகள். சொன்னது…

  //Syed Ibramsha சொன்னது…
  நானும் மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்ததுள்ளேன்,


  "என்ன கொடுமை, இதை படித்து விட்டு நான் மட்டும் காரணம் தெரியாமல் நொந்து போய் இருக்க வேண்டுமா இந்தா நீயும் பி(ப)டித்துக்கொள்" என்று நண்பன் ஃபார்வேட் பண்ணியிருந்தான்!.

  அனால், "அவர் ஏன், கடைசிவரை பிங்க் பால் கேட்டுக் கொண்டிருந்தார் என்றுதான் தெரியவில்லை.

  :))

  29 மே, 2012 9:48 am //


  //மூன்று ஆண்டுகளுக்கு முன் பரவி ஊசிப்போனதை காப்பி அடித்ததா?

  அட‌ ச‌ங்க‌ரா. ஏன் இந்த‌ பொழ‌ப்பு?//

  இந்த இடுகையே கீழ்க்கண்ட வரிகளுடன்தான் தொடங்குகிறது
  //இது பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை கீழ்ப்பாக்கம் மருத்தவக் கல்லூரியில் படித்து வந்த என் அக்கா மகள் சொன்ன ஒரு கதைதான்.(இப்போது அவள் யு.எஸ்ஸில் ஒரு ஆன்காலஜிஸ்ட்). இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் அவதாரம் எடுத்து மின்னஞ் சலில் வந்திருக்கும் இக்கதையை(!) உங்களுடன் பகிராமல் இருப்பது மிகப் பெரிய குற்றம் என்று தோன்றியதால், அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.//

  எனவே இது புதிய சிந்தனை என்றோ,என் சொந்தச் சரக்கு என்றோ நான் சொல்லவேயில்லை!மூன்று ஆண்டுகள் இல்லை,பல ஆண்ருகளுக்கு முன்பே நான் கேட்டது என்றே சொல்லியிருக்கிறேன்.அதை நீங்கள் படிக்கவில்லையோ?
  இது போல் மின்னஞ்சல்களைப் பகிர்வது பதிவுலகில் சகஜமே.

  நான் இது மட்டும் எழுதவில்லை.வேறு பலவும் எழுதுகிறேன்.
  இதுவே பொழப்பு அல்ல!

  நன்றி.  வசியநம !!!

  பதிலளிநீக்கு
 18. சென்னை பித்தன் சொன்னது…

  // இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் அவதாரம் எடுத்து மின்னஞ் சலில் வந்திருக்கும் இக்கதையை(!) உங்களுடன் பகிராமல் இருப்பது மிகப் பெரிய குற்றம் என்று தோன்றியதால், அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.//

  பகிராமல் இருப்பது "மிகப்பெரிய குற்றம்". அப்படியா? எந்த கண்ணூட்டத்தில்?

  பகிர்ந்ததன் மூலம் வலையுகமே ஜென்ம சாபல்யம் அடைந்தது விட்டதா?

  வசியநம.

  பதிலளிநீக்கு
 19. @சிந்திக்க உண்மைகள்.

  மிகப் பெரிய குற்றம் என்று சொன்னது ஒரு நகைச்சுவைக்காக! நகைச்சுவை உணர்வு இல்லையெனில் நான் என்ன செய்ய?

  என் பகிர்வினால் பதிவுலகம் ஜென்ம சாபல்யம் அடையும் என நான் என்றும் நினைக்கவில்லை.

  பாஞ்சாலி சபதம்பாட்டுதான் நினைவுக்கு வருகிறது-சிறிது மாற்றுகிறேன்--
  ”பொழுது போக்குதற்கே வலைப் பதிவு எழுதுகின்றோம்
  அழுதலேனிதற்கே?”

  உங்கள் profile ஏன் மறைக்கப் பட்டிருக்கிறது?

  பதிலளிநீக்கு
 20. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

  //செத்துப் போன ” பிங்க்பாங்க்” பந்து ஆசாமி அப்பாவியா? அடப் பாவியா?//
  ரெண்டுமோ!

  பதிலளிநீக்கு