தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 01, 2012

பிறந்தநாள் வாழ்த்துகள்,’வெல்ல முடியாதவருக்கு’!

( இடை வேளை இன்னும் முடியவில்லை.டூரிங் டாக்கீஸில் இடைவேளையில் முறுக்கு விற்கும் சிறுவன் போல் ஒரு அவசரத் தோற்றம்)

நாள்-31-12-2006
இடம்-பார்க் ஷெராட்டன் ஹோட்டல்,சென்னை
நேரம்-இரவு 9.00 மணி.
நான் என் நண்பர்கள் மூன்று பேருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு புறப்படத்தயாராகிறேன்.


அந்த நேரத்தில் அந்த முன்னணிக் கதாநாயகர் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் 'தல' காட்டுகிறார்.


அவரை முன்பே நண்பனின் மகன் திருமணத்தில் சந்தித்து அறிமுகம் உண்டு.


அவரைப் பார்த்ததும் வழமையான குசலம் விசாரிப்புக்குப் பின் நான் திடீரென்று அவரிடம் சொன்னேன்.


”அடுத்த ஆண்டு நீங்கள்தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார்”


அவர் முகத்தில் வியப்பு கலந்த ஒரு மகிழ்ச்சி.


அவர் கேட்டார் “எப்படிச் சொல்கிறீர்கள்?”


என் நண்பர்கள் சொன்னார்கள் “ஸார்,ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்”


நான் சொன்னேன்”உங்கள் முகத்தையும்,உங்களை நான் சந்தித்திருக்கும் நேரத்தையும் வைத்துக் கூறினேன்”


அவர் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றிப் பேசினோம்.(ஆழ்வார்)


பின் அவர்களைப் பேச விட்டு விட்டு நான் டாய்லெட்டுக்குப் போய்விட்டேன்.
முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் அவர் எனக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.


“நீங்கள் தொழில் முறை சோதிடரா?” அவர் கேள்வி.


“இல்லை.சோதிடம் எனது பொழுதுபோக்கு.நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே நான் பார்க்கிறேன்.உங்களைப்  பார்த்த அந்த  வினாடியில்
 சொல்ல வேண்டும் என்று தோன்றியது.சொன்னேன்”.-நான்


அவர் என் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கித்தன் கை பேசியில் சேமித்துக் கொண்டார்.பின் சொன்னார்”நான் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.”.


ஆனால் அதன் பின் அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை.


அடுத்த ஆண்டு முடிவில், முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படம் மீண்டும் படமாக்கப் பட்டு, இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பாத்திரத்தில் நடிக்க,அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.


என் சோதிடம் பலித்து விட்டதுதானே?


(இது வரை மீள்பதிவு )


 இன்று பிறந்த நாள் காணும் அந்த நடிகருக்கு வாழ்த்துகள்.


திரைத்துறையில் அவரைப் பற்றி ஒருமித்த கருத்து ”நல்லவர்”


ரசிகர் மன்றத்தின் துணையுடன் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கும் நடிகர்களிடையே,தன் ரசிகர் மன்றங்களைக் கலைக்கும் துணிச்சல் உள்ளவர்.


மனதில் தோன்றியதை வெளிப்படையாக உரைப்பவர்.(அதனால் சில பிரச்சினைகளிலும் சிக்கியவர்)


அவர் செய்யும் பிரியாணிக்குத் திரையுலகில்  பல ரசிகர்கள்.


சமீபத்தில் ஒரு படத்துக்காக டூப் இன்றி ஹெலிகாப்டரில் இருந்து தொங்கி நடித்ததாகச் செய்திகள் வந்துள்ளன.


வெல்ல  முடியாதவர் என்ற பெயருடையவர்.


அவருக்கு மீண்டும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.



31 கருத்துகள்:

  1. அப்படியா...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அஜீத் பற்றி அவரை நேரில் சந்தித்த பழகிய அனைவரும் அவர் எப்படி உதவினார், எவ்வளவு எளிமையானவர் என்று கூறுகிறார்கள். அந்த நல்ல உள்ளத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. இன்று பிறந்த நாள் காணும் அந்த நடிகருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கு வாழ்த்து! சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. ஆம்! அவர் பண்பாளர் என்பதை பல கட்டுரைகளில் படித்தும், பலர் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். அவருக்கு மகிழ்வுடன் உங்கள் மூலம் என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2 மே, 2012 அன்று AM 1:15

    அந்த நல்ல உள்ளத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. ”தல” அஜித் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. தங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. Congrats on reaching the summit. Long awaited and expected. I also cannot help but point out certain coincidences. First rank achieved on 1.5.12 ( May day) the result of continuous hard work. Incidentally the repeat blog about Thala is also about his achieving super stardom ! vasudevan

    பதிலளிநீக்கு
  12. அவர் பெயரை தமிழ் படுத்தி அசத்தி விட்டீர்கள். நல்ல மனிதர் அஜித்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா2 மே, 2012 அன்று AM 10:51

    'அடையார் அசல் அஜித்' சென்னைபித்தன் அவர்களே. நீங்கள் நடிகர் அஜித்துடன் எடுத்த போட்டோவை போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. தமிழ்மணம் பதிவுகளில் தங்கள் பதிவு முதல் இடத்திற்கு வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த நேரத்தில் Henry Wadsworth Longfellow என்ற கவிஞரின் வைர வரிகளை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

    “The heights by great men reached and kept were not attained by sudden flight, but they, while their companions slept, were toiling upward in the night.”

    இன்னும் உயரத்திற்கு செல்ல எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. நன்றி மோகன்குமார்

    நன்றி கூடல்பாலா

    நன்றி சீனி

    நன்றி என்.எச்.பிரசாத்

    பதிலளிநீக்கு
  16. நன்றி இராஜராஜேஸ்வரி

    நன்றி வரலாற்றுச் சுவடுகள்

    நன்றி ஆதி வெங்கட்

    நன்றி புலவர் ஐயா

    பதிலளிநீக்கு
  17. நன்றி கணேஷ்

    நன்றி சசிகலா

    நன்றி ரெவெரி

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  18. ! சிவகுமார் ! சொன்னது…

    // 'அடையார் அசல் அஜித்' சென்னைபித்தன் அவர்களே. நீங்கள் நடிகர் அஜித்துடன் எடுத்த போட்டோவை போடுங்கள்.//


    :-)))

    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  19. @வே.நடனசபாபதி

    உங்கள் அனைவரின் ஆதரவில்,இங்கு வந்து விட்டேன்.இதற்கு மேல்?!ஓய்வுதான்!!

    நன்றி சபாபதி அவர்களே

    பதிலளிநீக்கு
  20. In response to Mr.Nadanasabapathy's wonderful observations, you seem to have decided to sabbatical from blogging. Never rest on your laurels. There are more summits to be conquered. Think of tennis legends like Ivan lendel, Borg, Becker,Agassi whose appetite for victories never diminished. Vasudevan

    பதிலளிநீக்கு
  21. அஜித் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவர்ந்தவராக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. முதனமைப் பதிவரான தாங்கள் முதல் இடம் பெற்றமைக்கு
    மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு