தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

ஹாலிடே!ஜாலிடே!!


ஒரு கணவன்,மனைவி  ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கவனின் அருகில் வந்து”டார்லிங்!நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி?”

கணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு!”

மனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”

கணவன்  அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச்  சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”

மனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.

மனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் ?மனைவி இல்லையே?”

கணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு!”

மனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

29 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  2. "ஹாலிடே!ஜாலிடே!!"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. பிழைக்க தெரிந்த பெரிய வீடு ! வாசு

    பதிலளிநீக்கு
  4. " நம்ம "என்பது ரொம்ப அருமை
    ஜாலி பதிவு ஜோர் வாழ்த்துக்கள்
    த.ம 4

    பதிலளிநீக்கு
  5. காசு தான் எல்லாமே!
    அது சரி , கிறிஸ்துமஸ் எப்போலேருந்து ஹிந்து பண்டிகையாக மாறியது?

    பதிலளிநீக்கு
  6. இரவு வணக்கம்,ஐயா!"ஹாலிடே! ஜாலிடே!!" தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது,ஹி!ஹி!ஹி!!!!!

    பதிலளிநீக்கு
  7. ஹா...ஹா....கவுண்டமணி தோற்றார் போங்கள்....! என்ன டர்ன் மனைவியின் கருத்தில்...!

    பதிலளிநீக்கு
  8. ஹா... ஹா... ஹா... ரசித்துச் சிரிக்க வைத்த ஜோக். உங்களுக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. உல்லாச வாழ்க்கை வாழ தேவையான பணம், எவ்வாறு கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஹா ஹா ஹா... புத்திசாலி கணவனா? மனைவியா? ரொம்பவே சிந்திக்க வைத்த ஹாலிடே ஜாலிடே.

    பதிலளிநீக்கு
  11. அண்ணே துட்டு மட்டும் போதும் என நினைக்கும் சிலருக்கு இது உறுத்துமோ..!

    பதிலளிநீக்கு
  12. நல்ல நகைச்சுவை. சொகுசு வாழ்வு எதையும் கடந்து போக வைக்கிறது. வாழ்த்துகள் சகோதரா. பிந்திய நத்தார் வாழ்த்துகளும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல நகைச்சுவை. சொகுசு வாழ்வு எதையும் கடந்து போக வைக்கிறது. வாழ்த்துகள் சகோதரா. பிந்திய நத்தார் வாழ்த்துகளும், இனிய புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  14. இப்படித்தான் ஒரு காலத்தில் சாராயம் குடிப்பது மனைவிக்குத் தெரியாமலிருந்தது. இப்போதோ சாராயம் குடிக்கிறேன் என்பதில் ஆண் பெண் குழந்தை அனைவருக்கும் அது ஒரு பெருமை மற்றும் STATUS SYMBOL.
    அதேபோல இப்போது சின்னவீடா!?
    இது கலாச்சார சீரழிவா?
    முன்னேற்றமா அல்லது பின்னேற்றமா?

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா,
    நல்லா இருக்கிறீங்களா?
    என்னா ஒரு கொல வெறி..
    சின்ன வீடும் அழகு தான்.
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  16. அது வேணும், இது வேணும்ன்னு வீட்டுக்காரரை நச்சரிக்க கூடாதா?

    பதிலளிநீக்கு
  17. பணம் படுத்தும் பாடு
    என்ன சொல்வது...?

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  18. என் கை காலெல்லாம் கட்டு போட்டிருக்கிறேன். கொஞ்சம் அதிகமா விழுந்து விழுந்து சிரித்துவிட்டேன். அதனாலதான்.ஹி..ஹி..ஹி இந்த இடுகையின் மூலம் கணவன்மார்களுக்கு நல்லதொரு யோசனையையும் சொல்லியிருக்குறாப்புல இருக்கு!

    பதிலளிநீக்கு
  19. பணம் மட்டும் இருந்தால் போதும்.....எதுவும் கிடைக்கும்....ந்ல்ல கற்பனை... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்....www.rishvan.com

    பதிலளிநீக்கு
  20. ஹா ஹா ஹா

    ரசித்தேன்

    த.ம 13

    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  21. பணமிருந்தால் மட்டுமே இது சாத்தியம். நல்ல ஒரு நகைச்சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு