ஒரு பழமொழி....
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
எந்த அம்பும் தானாகவே வில்லிலிருந்து புறப்பட்டு வந்து தாக்காது
வில்லில் நாணேற்றி அம்பை வைத்து எய்வதற்கு ஒருவன் தேவை.
அவன் எங்கு குறி பார்த்து எய்கிறானோ அங்கு சென்று தாக்கும் அந்த அம்பின் மீது குற்றமிலை.
அம்பினால் தாக்கியவன் மீதே குற்றம்.
தொடரும் தோழர்கள்
வியாழன், மே 18, 2017
புதன், மே 17, 2017
இசை
”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)
மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.
இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.
எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.
ஒருவர் நண்பர் பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி பற்றிய உரையாடல்கள் நிகழும்..
அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.
நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.
மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.
ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்
இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்
என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,
என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!

செவ்வாய், மே 16, 2017
ப.க.பு.மொ.4.....பொற்கைப் பாண்டியன்
பாண்டிய மன்னன் வழக்கம் போல் இரவுக்காவலின் பொருட்டு வீதி வலம் வந்து கொண்டிருந்தான்.
அப்போது ஒரு வீட்டிலிருந்து கேட்ட குரல்கள் அவன் கவனத்தை ஈர்த்தன.
அந்த வீட்டுத் தலைவன் வியாபார நிமித்தம் வெளியூர் செல்வதை மனைவியிடம் சொல்ல அவள் திருடர் பயம் இருக்கிறதே என்று கவலைப்பட,அவன் பாண்டியனின் செங்கோல் காக்கும் என்றுசொன்னான்.
மன்னன், மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக மகிழ்ந்து அந்த வீதியை தினம் இரவில் காக்க முடிவு செய்தான்.
சில நாட்கள் சென்றன.வழக்கம் போல் வீதி வலம் வருகையில் அந்தவீட்டிலிருந்து பேச்சுக் குரல் கேட்டது.மன்னன் ஐயமுற்று வீட்டுக்கதவைத் தட்டியபின்தான் உணர்ந்தான்,கேட்ட,கேட்கும் குரல் வீட்டுத்தலைவனுடையது என்று.தான் தட்டியது அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்,அத் தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவையும் தட்டிச் சென்றான் மன்னன்.
மறு நாள்...
அரசவையில் அமைச்சர்,பிரதானிகளுடன் அமர்ந்திருந்தான் பாண்டியன்.அப்போது அந்த வீதி மக்கள் எல்லோரும் வந்து முதல் நாள்யாரோ கதவைத் தட்டிய செய்தியைச் சொல்லி முறையிட்டனர்.
மன்னன் சொன்னான்”அவனைப் பிடித்து விடுவேன் விரைவில்.என்ன தண்டனை என்றுநீங்கள் சொல்லுங்கள்”
அவர்கள் சொன்னார்கள்”அவன் கையை வெட்ட வேண்டும்”
நிகழ்பவற்றைக் கவனித்து வந்தார் அமைச்சர்.அரசனின் முகமும் அவன் பேச்சும் அவருக்கு மன்னன் இதில் தொடர்புடையவனாக இருப்பான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன
ஆம்.அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்!
அமைச்சர் எழுந்தார்”பொறுங்கள் மன்னா.எல்லார் வீட்டுக் கதவும் தட்டப்பட்டது எனில் எதோ காரணம் இருக்க வேண்டும்.எனவே தட்டியவன் பிடி பட்டவுடன்,காரணத்தை அறிந்து,அதன்பின் அதற்கேற்பவே தண்டனை வழங்க வேண்டும்.அவ்வாறின்றி தண்டனை வழங்கலாகாது” என்று சொல்லி மக்களிடமும் கேட்க அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அமைச்சர் மன்னனிடம் “மன்னா!குற்றவாளியை நீங்கள் அறிவீர்கள் எனில்,விரைவில் வரச் செய்து விசாரிக்க வேண்டும்”.
“மன்னன் எழுந்தான்.ஆசனம் விட்டுக் கீழே வந்தான்”அமைச்சரே,பிரதானிகளே,குடி மக்களே நானே குற்றவாளி”என்றான். அமைச்சர் விவரம் கேட்க நடந்ததை எடுத்துரைத்தான்.
அமைச்சர் மக்களைக்கேட்டார். மக்கள் சொன்னார்கள் மன்னன் செய்தது குற்றமல்ல என்று. ஆனால்,மன்னன் தன் அவசரச் செயலுக்குத் தான் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என சொன்னான்.
அமைச்சர் சொன்னார் ”மன்னா!உங்கள் செயல் அச்சத்தையும் கலக்கத்தையும் அம்மக்களுக்கு அளித்தது என்பது உண்மை.எனவே அவர்களுக்கு அதற்காக ஈடு தர வேண்டும்.நீங்கள் அவசரப்பட்டதால் ஏற்பட்ட இக்குழப்பத்துக்குத் தண்டனை,அந்த வீதி வீடு ஒவ்வொன்றுக்கும் ஒரு பொற்கை செய்து மன்னர் வழங்க வேண்டும்”
மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“பொற்கை அளித்தபாண்டியன்,பொற்கைப் பாண்டியன் வாழ்க எனக் குரல் எழுப்பினர்.
டிஸ்கி:எல்லா வீட்டுக் கதவையும் தட்டினான் என்றால் ஒரு வீட்டிலிருந்து கூடவா வெளியே வந்து பார்க்கவில்லை?அவ்வாறு ஒரு வீட்டிலிருந்து பார்த்திருந்தாலும் ,அடுத்த வீடுகளில் தட்டுபவனைப் பார்த்திருக்கலாமே.?பாண்டியன் ஆட்சியில் இரவு வெளி வர அவ்வளவு அச்சமா மக்களுக்கு...?

ஞாயிறு, மே 14, 2017
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
தாய் எனும் தெய்வம்,வணங்குவோம்,போற்றுவோம்,பாதுகாப்போம்.
வயதான காலத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு,பரிவு ,பாசம் இவைதாம்.
இதைத் தர முடியாதா பிள்ளைகளால்?!
அன்னையர் தின வாழ்த்துகள்!
சனி, மே 13, 2017
ப.க.பு.மொ. 3....பாரியும் முல்லையும்
காட்டு
வழியில் ரதத்தை வேகமாகச் செலுத்தி வந்த பாரி திடீரென்று நிறுத்தினான்.
உடன்
இருந்த அங்கவை,சங்கவை இருவரும் ஒருமித்த குரலில் கேட்டனர்”ஏன் தந்தையே ரதத்தை நிறுத்தி
விட்டீர்கள்?”
பாரி”அதோ
பாருங்கள்” என்று சுட்டிக்காட்டினான்.
அவன்
காட்டிய இடத்தில் பசுமையான முல்லைக் கொடி ஒன்று பற்றிப் படர ஆதரவின்றித் தவித்துக்
கொண்டிருந்தது.
பாவம்
தந்தையே என்றனர் மகளிர்.
”அதற்கு
நாம் உதவி செய்ய வேண்டும்.அருகில்,கொம்பு ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்”என்றான் பாரி.
மூவரும்
ரதத்திலிருந்து இறங்கித் தேடினர்.அங்கு ஆதாரமாக வைக்கக் கூடிய கொம்பு எதுவும் கிடைக்கவில்லை.
பாரி
யோசித்தான்.சொன்னான்”நம் ரதத்தின் மேல் அக்கொடியை படர விட்டு விட்டு நாம் அரண்மனை திரும்பி
ஆட்களை அனுப்பிப் பந்தல் அமைத்து விட்டு ரதத்தை எடுத்து வரச் செய்யலாம்.”
அங்கவை
சொன்னாள்”தந்தையே!இங்கிருந்து அரண்மனை பத்து காத தூரமிருக்கும்.நாம் நடந்து செல்வது
சாத்தியமல்ல.ஒன்று செய்யலாம்.நாங்கள் இருவரும் கொடியை எங்கள் மேல் படர விட்டு நிற்கிறோம்.நீங்கள்
சென்று விரைவில் ஆட்களுடன் திரும்பி வாருங்கள்”
பாரி
சிரித்தான்”ஒரு கொடிக்கு இரு கொடிகள் கொம்பாவதா?நான் நிற்கிறேன்.நீங்கள் என்னிலும்
விரைவாக ரதம் ஓட்டுவீர்கள்.சென்று வாருங்கள்”
அவர்கள்
மின்னலெனப் புறப்பட்டனர்
முல்லைக்
கொடிக்குத் தானே கொழு கொம்பாகி நின்றான் பாரி!
வெள்ளி, மே 12, 2017
வீரம்+ விவேகம்= அஜித்
வீரம்
இல்லாத விவேகம் கோழைத்தனம்;விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்........(பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர்)
மனத்தில்
அச்சம் நிறைந்து,ஏதாவது சால்ஜாப்புச் சொல்லிக் கொண்டு எதிர்க்குரல் எழுப்பாமல் இருப்பது
வீரம் அல்ல;கோழைத்தனம்.
சிறந்த
வீரனாயினும்,எதிரியின் வலிமை,காலம் ,இடம் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மோதுவது வீரமல்ல,முரட்டுத்தனம்.
ராஜாராணி
படத்தில்(பழைய படம்) சாக்ரடீஸ் நாடகத்தில் சாக்ரடீஸ்சொல்லும் அறிவுரை,முக்கியமானது.
“வீரம்
விலைபோகாது,விவேகம் துணைக்கு வராவிட்டால்.தீட்டிய வாளும்,தினவெடுத்த தோள்களிலே தூக்கிய
ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே,இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”
வீரம்
என்பது உடல் வலு மட்டும்தானா.சண்டையிட்டு வெல்வது மட்டும்தானா?இல்லை.
எங்கு
குரல் எழுப்ப வேண்டுமோ அங்கு அச்சமின்றிக் குரல் எழுப்புவதும் வீரம்.அதற்கு உடல் வலிமை
தேவையில்லை..மன வலிமை போதும்.
அச்சத்தை
தொலைத்தால்தான்,வீரம் பிறக்கும்.
ஆனால் எங்கு அச்சப் பட வேண்டுமோ அங்கு அஞ்சுவது விவேகம்.
என்னவேதான் வள்ளுவர் சொன்னார்
“அஞ்சுவது
அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”
என்று.
வீரமும்
விவேகமும் உள்ள ராசாக்கள்தான் அந்தக் காலத்தில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார்கள்!
.
சூழ்நிலைகள்
மீதும் தன் உடற்குறைகள் மீதும் பழி போட்டுத் தப்பிக்காமல்,இடர்ப்பாடுகள் வென்று சாதனை
படைக்கும் எவருமே வீரர்தான்.
அறிவு,விவேகம்
இணைந்தால்தான்,வீரம் வெற்றி பெறும்.
வீரம்,விவேகம் இரண்டும் இணைந்தவன்,வெல்லப்பட முடியாதவன்....அஜித்(வட மொழியில்)

வியாழன், மே 11, 2017
பெண்மணி அவள் கண்மணி!
”மரகதம்!பீரோவெல்லாம் நல்லாப்பூட்டி ஒருதடவைக்கு ரெண்டு தடவையாச் செக் பண்ணிடு”
“எல்லாம்
பண்ணிட்டேன் .நீங்க கவலைப் படாமல் இருங்க.”’
“எப்படிடீ
முடியும்?”20 பவுன் நகை உள்ள இருக்கே.சனியன் பிடிச்ச லாக்கரும் கிடைக்க மாட்டேங்குது.”
“எல்லாம்
பத்திரமா இருக்கும்”
”இல்லடி.இந்த முத்து வேற கடன் வாங்கின 2 லட்சத்தை நேத்து ராத்திரித் திருப்பிக் குடுத்துத் தொலைச்சிட்டான்.அது வேற வீட்டில இருக்கே”
”நான்
பாத்துக்கறேன்.பயப்படாதீங்க”
”எனக்கென்னவோ
திக்கு திக்குன்னுதான் இருக்கு”
கனவனும்மனைவியும்
வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு செல்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)