தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 20, 2015

மெய்யறிந்தேன் பாராயோ!



21வது நூற்றாண்டில், சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பேய் மழை வானம் பிளந்து கொட்டுகிறது.

2004-2005ல் பெய்த மழை முகப்புத்தகத்தை இப்போதும் நனைத்துக் கொண்டு இருக்கிறது.

2008-2009ல் விட்டு விட்டு அடைமழை பெய்தது. நவம்பர் 23லிருந்து டிசம்பர் 10 வரை பெய்த மழை ஜெகந்நாதனை மிக்க சிரமத்தில் ஆழ்த்தியது. 

இந்த வாரம் என்ன மழைங்க!. ரமணன் வானத்தை வென்று விட்டார்.  நாட்டில் பத்தினிப் பெண்கள் தொகை அதிமாகிவிட்டதோ?!! பெய் என்றால் பெய்யும் மழை
21ஆம் நூற்றாண்டில் புறநகர் பகுதிகள் நீண்டு விஸ்தாரமாகிக் கொண்டே செல்கின்றன. சி.எம்.டி.ஏ அனுமதியுடன் கட்டப்படும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அல்லாமல், அருகிலேயே முனிசிபாலிடி, பஞ்சாயத்து அனுமதி பெற்று கட்டப்படும் இரண்டு மாடிக் கட்டிடங்கள் புற்றீசல் போல் பரவுகின்றன. வீடு கட்டுபவர்கள் கீழ்மட்ட ஏரிகளில் உள்ள நிலங்களையும் விடுவதில்லை. மழைகாலத்தில் இத்தகைய வீடுகள் காஷ்மீரத்தின் படகு வீடுகள் ஆகிவிடுகின்றன. வேளச்சேரி, மடிப்பாக்கம், சென்னையின் ஸ்ரீநகர்.
மழைநீர் வடிகால்கள் எந்தவித கண்காணிப்பும் இல்லாமல் கட்டப்படுகின்றன. தரையடியின் கேபிள்கள் மூலம், தேங்கும் மழை நீரால் ஏற்படும் தாக்கங்கள் அபாயமானவை. புதிய டிரான்ஸ்பாமர்களும் இதற்குச் சளைத்தவை அல்ல. புதிய வசதிகள் இருந்தும் இல்லாமல் போகின்றன. வாரப்பட்ட தூருகள் திரும்பவும் வடிகால் கால்வாய்களுக்குச் செல்ல ஏதுவாக அவைகள் அள்ளப்படுவதில்லை. சாலைகள் பெருக்கப்படுவதில்லை. குப்பை அள்ளும் பணிக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. நடைபாதை வணிகர்கள் சாலைகளை அசுத்தமாக்கி சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். எங்கெங்கு காணினும் குப்பையடா. தண்ணீர் தேங்குவதற்கு வேறென்ன வேண்டும்?
இவைகளில்லாமல் மற்றும் பல காரணிகளுக்காக ஜெகந்நாதன் துயருற்றார்.

அன்று காலை மழை சற்று குறைந்தவுடன், ஜெகன் நடைபயிற்சிக்கு ஆயத்தம் ஆனார். மனத்தில் கண்டவை தெருக்களில் பிரதிபலித்தன. அவர் தெருவில் தண்ணீர் அதிகமாக தேங்கவில்லை. வடிகால் கால்வாய்கள் இல்லாததே ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.

காலியாக வந்த ஆட்டோவில் ஏறி 20 மீட்டரில் இறங்கினார். அங்கே ¼ கிலோமீட்டர் நீளம் 25 மீட்டர் அகலம் கொண்ட இலங்கைத்தீவு தென்பட்டது. வானரங்களே அவர் நடப்பதற்கு ஒரு திட்டை அமைத்துத் தந்தாற் போல் அகமகிழ்ந்தார். சுமார் 45 நிமிடங்கள் நடையை மேற்கொண்டபோது அவரது அனுபவங்கள் இதோ.

ஒரு காவல்காரன்தண்ணீரிலே கால் வைக்காம நடங்க ஐயா. ஷாக் அடிக்கிறதுஎன்றான்.

இரண்டு அழககிளும் மூன்று களவாணிகளும் (டெக்கீஸ்) ஊர் சென்று ஐவரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஐவரும் பாதங்கள் (காலணிகள்) மூழ்கும் அளவு தண்ணீர் மட்டத்தில் நடந்தார்கள். மின்தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

ஓ.எம். ஆர்ரில் உள்ள இவர்களது விடுதியில் நுழைய முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், தற்காலிகமாக ஒரு நண்பியின் வீட்டிற்கு போய்கொண்டிருப்பதாக ஜெகன் அறிந்தார். விலாசம் என்ன என்று கேட்டார்.. கைபபசிடில் உரையாடிக் கொண்டிருந்த நண்பிக்கும் தெரியவில்லை. வீட்டின் அங்க அடையாளங்களைக் கூட நண்பியால் கைபேசியில் விளக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அழகிகள் மட்டுமே விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள் போல் தெரிகிறது. 3 களவாணிகளும் திரும்பி வந்தனர்.உங்கப்புராணை சத்தியமா நான் காவல்காரன்என்ற பாவனையில் ஜெகனைப்பார்த்துவிட்டு ஷூ கால்களை தண்ணீரில் இறக்கினார்கள்.

ஒரு காக்கா செத்த எலியை அலகில் கொத்திக்கொண்டு வந்து, கீழே போட்டுக் கொத்திக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.காக்காக் கூட்டத்தை பாருங்க”, இப்போது 5 காக்கைகள் எலியை ருசித்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் குப்பைத் தொட்டியை ஒரு குறத்தி நோண்டிக் கொண்டிருந்தாள். கரைகடைந்த குறத்தியின் மகனும் தாய்க்கு உதவிக்கரம் நீட்டினான். அருவருப்பை சகிக்க முடியாத ஜெகன் குறத்தியை விளித்து, ஏலியைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட வேண்டினார். மகன் வலது கையால் வாலைப்பிடித்து எலியின் ஈமக்கிரியையை முடித்தான். ஆட்டோவில் 20 மீட்டர் பணம் கொடுக்காமல் பயணித்த ஜெகன் எலிக்கு ஈமக்கிரியை செய்ய 10 ரூபாயை தட்க்ஷிணையாக கொடுத்தார்.

ஜெகன், ஐடாயுவிற்கு இராமர் செய்த ஈமக்கிரியையை அசை போட்டார்.சீச்சி, எதை ஏதோடு இணைப்பது, தமக்குப்பித்துப் பிடித்து விட்டதோ என பயந்தார்.
தொடர்ந்துராவண்அபிஷேக்பச்சனும், இராவணன் விக்ரமும்மனதில் தோன்றினார்.

நவீன காலத்து சீதை ராவணனின் உணர்வுகளை மதிக்க ஆரம்பித்து விடுகிறாள். மணிரத்தினத்தின் சீதையாயிற்றே. புதுமைப்பெண், ஐஸ்வர்யாராய் வேறென்ன செய்ய முடியும். மாமனாராலேயே (அமிதாப்பச்சன்) ஒத்துக்கொள்ள முடியவில்லை. கண்டனம் தெரிவித்தார். (ஊடகங்கள் மூலம்) 

ஜெகனுக்கு பித்தம் முத்தி விட்டது. அகலிகை மீண்டும் கல்லானாள்என்று மூணுமூணுத்தார். 

அகலிகை கௌதம முனிவரின் மனைவிதானே, கௌதமி என்றும் சொல்லலாம். இரண்டு பேரும் பாபநாசம் செய்தவர்கள். முன்னவர் இந்திரன் சில்மிஷத்தால் கணவனால் கல்லாக்கப்பட்டு இராமரின் பாதார விந்தங்களை ஸ்பரிசித்து பாப விமோசனம் பெற்றார். பின்னவர் கணவர் தயவால் பாபநாசம் செய்தார்.

ஒரு மீடியம் சைஸ் கருங்கல் சாலை நடுவேகிடந்தது.

ஜெகன் அதன் பக்கத்தில் சென்று காலணிக்குள் இருந்த சிறு, கல், குப்பைகளை தட்டி, வெறுங்காலை, கைக்குட்டை எடுத்து துடைத்துக் கொள்ள விழைந்தார்.

கால்களை ஸ்பரிசித்த கல் அகலிகையாக (மீண்டும் கல்லான) உயிர்த்தெழுந்தாள். சென்னைப் பித்தனின் பக்கபலம் நீங்கள், உங்கள் வலது பாத ஸ்பரிசத்தால் தான் எனக்கு இம்முறை சாபவிமோசனம் என்று அகலிகை சொன்னபோது ஜெகன் திகிலடைந்தார்.

 துறவு பூண்ட கௌதமர், மின்னும் முகத்துடன் மனைவியின் அருகில் நின்றார். ஜெகன் அவர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றார். படபடப்பு நீங்கியது. முனிவரைப் பார்த்துஅகலிகையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் கல்லானாலும் அவர்தான் உங்கள்மனைவிஎன்றார்.

மணிரத்தினத்தின் ராமனை பார்த்து தான் எனக்குஇந்த மனமாற்றம் என்றார்.

என் வலது கால் செய்த புண்ணியம் என்ன?”

எலியின் ஈமக்கிரியையை நீ உன் செலவில் செய்யத்  துணிந்தாய் அல்லவா! அதனால் உன் வலது கால் ஸ்பரிசம் கல்லை க(ன்)னியாக்கியது.

ஜெகன் அகலிகையை மரியாதை மிகுந்த அன்புடன் பார்த்துபுதுமைப் பித்தனும், சென்னைப் பித்தனும் உங்கள் கதையை எழுதி மிகவும் களைத்துவிட்டார்கள், தயவு செய்து மீண்டும் கல்லாக முயற்சிக்காதீர்கள்என்று வேண்டினார்.

ஒன்று சேர்ந்த தம்பதிகள் புன்னகையுடன் மழை மேகத்தில் ஒருமித்தனர்.

மழையில் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் அதை பாறாங்கல் போட்டு மூடிய மாநகராட்சித் தொழிலாளிகள், கல்லை ஓரம் கட்டி, மண்ணைக் கொட்டி குழியை மூடி பள்ளத்தை மேடாக்க வந்தனர்.

ஜெகனைப் பார்த்துகொஞ்சம் தள்ளி நின்னு யோசிங்க பெரியவரேஎன்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டனர்.

மனத்திரைக்கும், நிஜத்திரைக்கும் இடையே எத்தனை காட்சிப்பிழைகள்என்று ஜெகன் தலையை பிய்த்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தார்.

.....பார்த்தசாரதி

12 கருத்துகள்:

  1. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    சரிதான்! (இது பதிவுக்கான கமெண்ட்!)

    தம +1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    அறியாத தகவலும் அற்புதமான கதையும் நன்று.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. செம செபி சார்! ஸாரி... பார்த்தசாரதி சார்!! அதுவும் கௌதமி-பாபநாசம் என்று சொல்லித் தகதிமிதா ஆடிட்டீங்க! ஹஹஹ்ஹ் பரவாயில்லை ஜெகனின் பித்தம் முத்தியதால் அழகாகப் பார்த்தசாரதிக்குச் சொல்லக் கிடைத்தது..

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி தனபாலன்;ஆனால் இப்போது களைத்துத்தான் போயிருக்கிறேன். மூன்று நாட்களாக உடல் நிலையில் சரியில்லை(அம்மாவுக்கும்) அதானால்தான் கருத்துக்குக்களுக்குப் பதில் சொல்லவோ ,மற்ற தளங்களுக்குச் செல்லவோ இல்லை.தாயாராயிருந்த பதிவுகளை வெளியிட்டு விட்டுச் சும்மா இருந்து விட்டேன்.

      நீக்கு
  5. மாயக்கட்டிலில் திரு ஜெகன் தூங்கியிருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  6. மாயக்கட்டிலில் திரு ஜெகன் தூங்கியிருப்பாரோ?

    பதிலளிநீக்கு
  7. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    பதிலளிநீக்கு
  8. மாயக்கட்டில் மாயம் செய்கிறதே...

    பதிலளிநீக்கு
  9. உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்....

    பதிலளிநீக்கு
  10. உடல் நலனில் கவனம் செலுத்துங்கள் ஐயா!

    மழை வந்தாலும் பிரச்சனை, வராவிட்டாலும் பிரச்சனை தான் என எத்தனை குழப்பங்கள்.

    பதிலளிநீக்கு