தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 26, 2015

விடுமுறை,சிரிமுறை!

ஒரு விருந்தில் இரு நண்பர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு விழுந்து விட்டார்கள்.

மற்றவர்கள் அவர்களைத் தூக்கி வந்து மின்தொடர் வண்டியில் ஏற்றி விட்டனர்.

போதை தெளிந்து விழித்த அவர்களில் ஒருவன் எதிரே அமர்ந் திருந்தவரிடம்”நீங்கள் யார்” என்று கேட்டான்.

அவர் சொன்னார்”நான் ஒரு விமான ஓட்டி”

உடனே அவன் மற்றவனிடம் சினத்துடன் சொன்னான்”பார் ,அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள்.விருந்து முடிந்ததும் மின்தொடர் வண்டியில்  ஏற்றி விடுகிறோம் என்று சொல்லி விட்டு ஆகாய விமானத்தில் ஏற்றி விட்டு விட்டார்கள். இப்போது என்ன செய்வது?!”

சனி, ஜூலை 25, 2015

இப்படித்தான் சொத்து சேர்ந்ததா?!


இந்த வாரம் கதை வாரமாகி விட்டது.

திங்கள் முதல் வெள்ளி  வரை இரு கதைகளை வைத்து ஓட்டி விட்டேன்!

சனியன்றும் ஒரு கதை எழுதி விடலாம் எனப் பார்த்தால் ஒரு முடிச்சும் கிடைக்கவில்லை.

என்ன செய்வது?

வெள்ளி, ஜூலை 24, 2015

முடிவில்லாத முடிவுகள்!



புனேவுக்குப் போன முருகேசன் என்ற கதை மூன்று பகுதிகளாக வெளி வந்தது
கதையை நான் முதலில் எண்ணியபடி முடித்திருந்தேன். 

இருவரின் கருத்து எனக்குள் ஓர் எண்ணத்தைத் தோற்றுவித்தது

அக்கருத்துகள்…..

//I think I can guess...probably he would meet his would b who might b on a similar mission…வாசு//

//வெளியே நின்றது பூரணி என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்!...ஸ்ரீராம்//

வியாழன், ஜூலை 23, 2015

புனேவுக்குப்போன முருகு.-கதையின் முடிவு



முன்குறிப்பு: பலர் முருகு தவறு செய்து விடக்கூடாது என்ற கருத்தில் இருப் பதாகத் தெரிகிறது. ஆனால் முருகு ஒரு நோக்கத்துக்காக,வீட்டில் பொய் சொல்லி விட்டுப் புனே வந்தவன் .அந் நோக்கம் நிறைவேறாமல் போனால் அவன் மனரீதியாகப் பாதிக்கப்படக் கூடும். எனவே அவன் விருப்பம் நிறைவேறட்டும்!ஒன்று செய்யலாம்.அவன் தவறு செய்யாமல் தப்பிப்பது போல் ஒரு முடிவும் எழுதிப் பார்க்கலாம்.

இன்னொரு செய்தி.சிலர் நினைப்பது போல் கதையில் திருப்பம்.மர்மம் எதுவும் இல்லை. முடிவில் ஒரு முரண்நகை இருக்கலாம்.அதுவே சரி என்று எனக்குத் தோன்றியது.

இனி,கதைக்குள் போவோம்

புதன், ஜூலை 22, 2015

புனேவுக்குப் போன முருகு--பகுதி இரண்டு



முருகு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் சீரடி  போகும் செய்தியைச் சொன்னதும் அவர்களுக்கு மிக மகிழ்ச்சி.

திருமத்துக்கு முன் போய் வணங்கி விட்டு வா நன்மைகள் நடக்கும் என்று ஆசி வழங்கினர்.

அவன் மனம் குற்ற உணர்வினால் சுருக்கென்றது.கணேசன் ஏற்கவே சொல்லியிருந்தான் புனேவிலிருந்து விபூதி கொண்டு வந்து சீரடி உதி என்று கொடுத்து விடலாம் என்று .புனே செல்லும் நாள் நெருங்க நெருங்க முருகு வுக்குப் படபடப்பு அதிகமானது .அதை வெளிக் காட்டாமல் எப்படியோ சமாளித்தான்.

செவ்வாய், ஜூலை 21, 2015

புனேவுக்குப் போன முருகேசன்!



முருகேசனுக்குச் சில நாட்களாகவே ஒரு ஐயம் மனத்தை அரிக்கத் துவங்கி யிருந்தது.அது என்ன ,ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளும் முன், முருகேசனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வது அவசியம்.இனி முழுப் பெயரைச் சொல்லாமல்  அவனை முருகு என்றே அழைப்போமாக.

திங்கள், ஜூலை 20, 2015

பார்ப்பானும் பாம்பும்!



”ஏன்னா!அம்முலுவாத்திலே நேத்து ராத்திரி பாம்பு வந்துடுத்தாம்.நல்ல பாம்பாம். அவளோட ஆத்துக்காரர் அதை அடிச்சுட்டாராம்.நல்ல பாம்பைக் கொல்றது பாவமில்லையோ?குழாயடில இதுதான் பேச்சு”

மனைவி விமலா சொன்ன செய்தியைக் கேட்ட நாராயணன் சட்டையை மாட்டிக்கொண்டு சங்கர ஐயர் வீட்டுக்குப் புறப்பட்டார்.யார் சங்கர ஐயர் என்று யோசிக்கிறீர்களா?. அம்முலுவின் கணவர்தான்.

ஞாயிறு, ஜூலை 19, 2015

தாய்மையைப் போற்றுவோம்!

 நான் பிறந்தவுடன் என்னை அன்புடன் அணைத்த கைகள்
நான் நடக்க முதல் அடி எடுக்கையில் வழி நடத்திய கைகள்
நான் கீழே விழுந்து அழுகையில் கண்ணீர் துடைத்த கைகள்
நான் இருக்கிறேன் உனக்கு என்ற உறுதி தந்த கைகள்

அகப்படாமல் ஓடிய என்னைப் பிடித்திழுத்து குளிப்பாட்டிய கைகள்
அடங்காத என் தலை முடியை எண்ணையிட்டுப் படிய வாரிய கைகள்
அடுத்தவர் கண் பட்டதோ என அடிக்கடி திருட்டி கழித்த கைகள்
அடிக்க நேர்ந்தாலும்  நோகாமல் அடித்துப் பின் கண்ணீரை மறைத்த கைகள்

தனக்குப் பிடிக்காதெனினும் எனக்குப் பிடித்த உணவைச் சமைத்த கைகள்
கண் விழித்துப் படிப்பதற்கு சூடான தேநீர்  தயாரித்து அளித்த கைகள்.
படிப்பில் சிறக்கும்போது  மகிழ்ந்து பாராட்டித் தட்டிய கைகள்
எந்த வேலையும் நான் செய்ய விடாமல் தானே உழைத்த கைகள்

எத்தனையோ சொல்லலாம் இன்னும்,எண்ணிலடங்காதவை

இன்று

காலத்தின் விளையாட்டில்  வலிவற்று நடுங்கும் கைகள்
அவை வேண்டுவதோ ஒரு ஆறுதலான தொடுகை
வலிக்கும் போது வலி நீக்கும்  ஒரு மருந்தான வருடுதல்
என்னை உருவாக்கிய கைகளுக்கு  வேறென்ன செய்யப்போகிறேன்?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.
உனக்கு முழுமையான உடல் நலத்தை நல்க அவனை வேண்டுகிறேன்.



சனி, ஜூலை 18, 2015

இராகு தரும் நன்மைகள்!!



இராகுவும் .கேதுவும் நிழற்கோள்கள் எனப்படுபவை.

மற்ற கோள்கள் சுற்றும் திசைக்கு எதிர்த் திசையில் சுற்றுபவை

பாம்புக் கோள்கள்,எனவே தீய பலன்களே தருமோ எனப் பலர் அஞ்சுகின்றனர்
ஆனால் அவ்வாறல்ல.

பழைய சோதிட நூல்களில் உள்ள இரு பாடல்களை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்

வியாழன், ஜூலை 16, 2015

ராசாவும் கனியும்!



இது ஓர் அரசனும் கனியும் பற்றிய கதை

நீங்கள் அறியாத கதையல்ல.

இது நீங்கள் அறிந்த கதைதான்.

கனி அரசனை விட்டு நீங்கிய கதை.

திங்கள், ஜூலை 13, 2015

அறஞ் செய விரும்பு!


சுவாமி பித்தானந்தா அவர்களின் உரை கேட்க கூட்டம் காத்திருந்தது

சுவாமி வந்தமர்ந்தார்.

இன்று ஒரு மாறுதல்.உங்கள் மனத்தில் ஆன்மிகம் பற்றிப் பல ஐயங்கள் இருக்கலாம்.இன்று நீங்கள் அவற்றைக் கேள்விகளாக்கி இவன் மீது வீசுங்கள்.இவனால் இயன்ற அளவு தெளிவாக்குவான்சொன்னார் அவர்.

ஒருவர் எழுந்தார் "சாமி,கடவுளை எப்படி வழிபடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பெரியதாக பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால் முடியாது.நான் என்ன செய்ய வேண்டும் சாமி?"

"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லை..இதில் பகட்டு தேவையில்லை. நான் என்ற அகந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்குங்கள்  .வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் மனமகிழ்ந்து,.உங்கள் பூசையை ஏற்றுக்கொள்வான்"-

 மற்றொருவர் கேட்டார்"சாமி, நான் அதிக வசதியில் லாதவன்.தானம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.ஆனால்  சிறிதாக ஏதாவது செய்தால் எல்லோரும் நகைப்பார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நான் என்ன செய்ய சாமி?"

அவர் பதில் அளித்தார்"உங்களுக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீங்கள் இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தீர்களே, அதுவும் ஒரு அறம்தான்.நீங்கள் உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்கு வழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் அறம்தான்."

அடுத்தவர் கேட்டார்"இதெல்லாம் கூட முடியவில்லை என்றால் என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவரது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்

."ஊரில் எல்லோரும் உங்களை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவீர்களேயாகில் அதுவே சிறந்த அறம்தான்-


கடைசியாக அவர் சொன்னார்இவற்றையெல்லாம் இவன் சொல்லவில்லை.திருமூலர் சொல்லியிருக்கிறார்.இது ஒரு பானைச்சோற்றில் ஒரு சோறு பதம் போலத்தான். திருமந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.நமது மடத்தின் வெளியீடு கூட உளது வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்!







ஞாயிறு, ஜூலை 12, 2015

விடுமுறை,சிரிமுறை

மருத்துவர் திறந்த இதய அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டுத் தன் அறையில் வந்து அமர்ந்தார்

அந்த நோயாளியின் மனைவி அவர் எதிரே வந்து அமர்ந்தாள்.

“அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார் மருத்துவர்.

அந்தப் பெண்மணி சொன்னாள்”நன்றி ஐயா.உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”

“கேளுங்கள்”

“அவர் இதயத்தில் வேறு ஏதாவது பெண் இருக்கிறாளா?!”





வெள்ளி, ஜூலை 10, 2015

எட்டாம் வீட்டில் குரு என்ன செய்வான்?




அவர் எங்கள் குடும்ப நண்பர்.

சிறு வயது முதல் என்ன அறிந்தவர்.

சிறிது சோதிடமும் அறிந்தவர்.

அன்று என்னிடம் வந்தார்.

ஏதோ கவலையாக இருப்பது போல் காணப்பட்டார்.

வியாழன், ஜூலை 09, 2015

காவல் துறையின் நகைச்சுவை உணர்வு!



மடிக் கணினியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த ‘சொறி’முத்து திடீரென்று சிரிக்கத் தொடங் கினான்.வெடிச் சிரிப்பு;அடக்க முடியாத சிரிப்பு.

அதைப் பார்த்த பிச்சுவா பாபு கேட்டான்”ஏண்டா இப்படிச் சிரிக்கிறே”

முத்து சிரிப்பை அடக்காமலே சொன்னான்”அண்ணே .காவல் துறையின் முகநூல் பக்கத்தில் உங்களைப் பத்திப் போட்டிருக்காங்க.உங்க புகைப்படம் வேறு வெளியிட்டிருக்காங்க”.மேலே பேச இயலாமல் சிரிக்கத் தொடங்கினான்.

பாபு சினந்து சொன்னான்”டேய்.என்னன்னு சொல்லு.பிறகு சிரி.”

முத்து சொன்னான்”உங்க புகைப்படத்தைப் பார்த்துதான் சிரித்தேன்.எங்கிருந்து கிடைத்ததோ அவர்களுக்கு இந்தப் படம்.பார்த்தா சிரிப்பை அடக்க முடியலே அண்ணே.நீங்களே பாருங்க” என்று கணினியை பாபுவிடம் கொடுத்தான்.

பாபு அதை வாங்கிப் பார்த்தான்.முதலில் அவனுக்கும் சிரிப்பே வந்தது.பின் எரிச்சல் ஏற்பட்டது.  தன்னைக் கேவலப்படுத்தவே இப்படி ஒரு படத்தைப் போட்டிருக்கிறார்களோ என நினைத்தான் ”பிணையத்தில் விடுவிக்கப் பட்ட இந்த பாபு தலை மறைவாகி விட்டான்.யாராவது பார்த்தால் காவல் துறைக்குத் தகவல் தரவும்”இதுதான் அப்படத்துடன் இருந்த செய்தி

ஒரு முடிவுக்கு வந்தான்.அத்தகவலின் கீழ் கருத்துப் பெட்டியில் எழுதினான்”உங்களுக்கு ஒரு நல்ல படம் கிடைக்கவில்லையா. வேண்டும் என்றால் நான் ஒரு நல்ல அழகான படம் எடுத்து அனுப்புகிறேன்!”

சில நொடிகளில் அந்தக் கருத்துக்கு மறு மொழி வந்தது.”நீ காவல் நிலையத்துக்கு வந்தால் நாங்களே நல்ல படம் எடுப்போம்?எப்போது வருகிறாய்?”

பாபு சிரித்தான்,காவல் துறைக்கும் நகைச்சுவை உணர்வு உள்ளது என நினைத்தான்

மீண்டும் தட்டினான்”விரைவில் வருவேன் சரியான வழக்கறிஞர் ஒருவரோடு!”

எப்படி இந்த பூனை எலி விளையாட்டு?

(கதையல்ல உண்மை நிகழ்வு)

தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒரு விளம்பரம் என்னைக் கவர்ந்தது.

ஓர் ஆணும் பெண்ணும் நன்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.அப்போது ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை ,கதை சொல்லும்.பின்புலத்தில் கேள்வி”இது நட்பா காதலா”
பின் அவர்கள் சேர்ந்து செல்கையில் கைகள் உரசிக்கொள்ளும்.அவன் வருந்துகிறேன் என்று சொன்னதும்,அவள் அவன் பக்கம்  ஒரு துள்ளலுடன் திரும்பி தன் கையை அவன் பற்றத் தருவாள்

அந்தத் துள்ளல் அவள் உள்ளத்தை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.

இது எனக்குப் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள்

”இது நட்பா காதலா”என்பது என் பழைய பதிவொன்றின் தலைப்பு!

விளம்பரம் இயல்பாகவும் இளமைத் துள்ளலுடனும் உள்ளது

இளைஞர்களுக்குப் பிடிக்காமல் இருக்குமா?

புதன், ஜூலை 08, 2015

தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்!



நாம் தமிழில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

சில நேரங்களில் நான் யோசித்துப் பார்க்கிறேன்,தமிழில்தான் எழுதுகிறோமா என்று.

தொடக்க காலத்தில் நான் இயன்ற அளவு வேற்று மொழிக் கலப்பின்றி எழுதி வந்தேன்.

தெரியாத சொற்கள் வரும்போது ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைத் தேடிப் பயன் படுத்துவேன்.

ஆனால் காலப்போக்கில் அந்நிலை மாறி விட்டது.

செவ்வாய், ஜூலை 07, 2015

முத்தத்தில் என்னதான் இருக்கிறது?!



முத்தம்!!

சொல்லும்போதே,கேட்கும்போதே,நினைக்கும்போதே மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சியை, உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு சொல். நாம் முத்தம் என்றவுடன் நினைப்பது உதடுகள் இணையும் முத்தத்தையே.ஆனால் முத்தத்தில் எத்தனை வகை?

பாசத்தின் வெளிப்பாடாக நெற்றியின் உச்சியில் இடும் முத்தம்.

குழந்தையை அணைத்துக் கன்னத்தில் இடும் முத்தம்.(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி)

ஒரு மரியாதைக்காகக் கையில் இடும் முத்தம்.(இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மங்களூரில் ஒரு கிறித்துவ நண்பரின் திருமணத்துக்கு சர்ச்சுக்குப் போயிருந்தோம்.திருமணம் முடிந்ததும் அனைவரும் மணப்பெண்ணின் கையில் முத்தமிட்டனர்.நாங்களும்தான்.எங்கள் நண்பர் ஒருவர் நேரம் கழித்து வந்தார்.நாங்கள் சொன்னதைக் கேட்டு மிஸ், பண்ணி விட்டேனே என்று வருத்தப்பட்டார்!)

முன்பெல்லாம் ஆங்கிலப் படங்களில்தான் முத்தத்தைப் பார்க்க முடியும்.ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களிலும் அவ்வப்போது முத்தத்தைப் பார்க்க முடிகிறது-உபயம்-உலகநாயகன்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்?அதன் சுவை என்ன?

வள்ளுவர் சொல்கிறார்---

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும் (டாக்டர்.மு.வ.-உரை).

நான் ரசித்த சிவகுமாரனின் கவிதை ஒன்று

“ஆரஞ்சுத் தேன்சுளையா !
அங்கென்ன தத்தையொன்று
கூரலகால் கொத்திவந்த
கோவையா- யார்தான்
பவளத்தைக் கீறிவைத்தார்
பார்ப்போம் ! அடடா
அவளின் இதழா
அவை.

இப்படியிருந்தால் சுவைக்காமல் இருக்க முடியுமா?


முடிப்பதற்கு என் பழைய கவிதை ஒன்றிலிருந்து சில வரிகள்,இதழின் பெருமை பேசுபவை!

//என்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்
அடைந்தவை சில,அபகரித்தவை சில
அனைத்துமே விலை மதிப்பற்றவை
பார்த்தால் நீங்கள் சிரிப்பீர்கள்
அதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்
பார்க்கலாம் வாருங்கள்.
இதோ இப்பெட்டியில் பட்டுத்துணியில்
படுத்திருக்கும் இந்த ஸ்பூன்.
ஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.
ஐஸ்க்ரீமைத் துளிதுளியாய் அவளெடுத்து
செம்பவள இதழ் திறந்து உண்ணும்போது
அவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.
இன்றைக்கும் அவள் இதழின் இனிமை
இதை விட்டு நீங்கவில்லை!
இந்த டம்ப்ளரில் எழுதியிருக்கிறது
சாந்தி விஹாரில்  திருடப்பட்டதென்று
சாயம் பூசாமலே சிவந்திருக்கும்
அவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.
வேறு யார் உதடும் இதில் படக்கூடாது.
எனவே நான் எடுத்து வந்து விட்டேன்.
அந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்!
சாப்பிட்ட பின் நளினமாய் அவள்
இதழொற்றிக்  கசக்கியெறிந்த  காகிதம்
சட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது
அவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.//

எல்லா இளைஞர்களுக்கும்  இந்த முதிய இளைஞனின் முத்த தின வாழ்த்துகள்! 

(முத்தத்துக்கு என்று தனியாக ஒரு தினம் வேண்டுமா என்ன!)