சோமசுந்தரம்
இந்தியாவின் பெரிய வங்கியில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன்
யு.எஸ்ஸில் இருப்பதால் மனைவி மீனாட்சி யுடன் அடையாறில் காந்தி நகரில் ஒரு
தனிவீட்டில்75 வயதுக்கேற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வலியுடன் வாழ்ந்து வருகிறார். ஓய்வூதியம், சேமிப்புக்
கள் ஈட்டுத் தரும் வட்டி, மாடிப்பகுதியின் வாடகை இந்த வரவு களை
வைத்து கணிசமான மருத்துவ செலவு பெட்ரோல், இதர செலவுகளை
திறம்பட சமாளித்து அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார். இரண்டு ஆண்டுக ளுக்கு ஒரு முறை மனைவியுடன் யு.எஸ் சென்று பேரப்பிள்ளைகளுடன் மூன்று மாதங்கள்
குதூகலித்து வருவார்கள். வீட்டில் ஒரு அழகான தோட்டத்தையும் திறம்பட பராமரித்து
வந்தார்.
தொடரும் தோழர்கள்
புனைவுகள்.சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள்.சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், செப்டம்பர் 02, 2015
வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015
சிக்கினான் சின்னப்பையன்!
”நான்தான்
சின்னப் பையன்.
இக்கதையின்
ஆசிரியர் மற்றும் நாயகன்.
என்
கதைகளில் உயிர் இருக்க வேண்டும் என நினைப்பவன்.
ஒரு
விலைமாதின் கதை எழுத எண்ணம் கொண்டேன்.
அது
வாழ்க்கையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நண்பன் மூலம்,ஒரு விலமாதைப் பார்க்கப்
போவதாகத் தீர்மானித்தேன்
தவறாக
எண்ண வேண்டாம்.ஒரு விலைமாதாக அவளுடைய அனுபவங்களை அறியத்தான்;நான் அனுபவிக்க
அல்ல.
தரகன்
என்னை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று,”எட்டாம் எண் அறைக்குப் போங்க. காத்துக் கிட்டிருக்கா.சீக்கிரம் முடிச்சிட்டுக் கிளம்புங்க.”என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.
அறைக்கதவு
திறந்தே இருந்தது,கட்டிலின் மீது அவள் அமர்ந்திருந்தாள்.
”வாங்க “என்று சொல்லி விட்டுக் கையை நீட்டினாள்,பணத்துக்காக.
பணத்தை
வாங்கியவள் தன் உடைகளைக் களைய முனைந்தாள்
நான்
அவளைத் தடுத்து நிறுத்தினேன்
“நான் அதற்காக வரவில்லை.உன்னிடம்
சில விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”
என்றேன்
அவள் என்னை ஒரு புழுவைப் போல்
பார்த்தாள்”அப்படியாளா
நீ?கேளு” என்றாள்
பேச ஆரம்பித்தோம்.
அவளுக்குச் சந்தேகம் அதிகம்.கணவனுக்கு
தன்னைத் தவிர பிற பெண்களின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்திருக்கிறாள்.
ஒரு நாள்,மாலையும் இரவும் சந்திக்கும்
நேரத்தில் வெளியே சென்று திரும்பும் போது அவள் கணவன் போன்ற ஒருவன் ஒரு வீட்டினுள்
நுழைவதைப் பார்த்தாள்.சினம் மூண்டு தானும் அந்த வீட்டினுள் நுழைந்தாள்.அங்கே
அமர்ந்திருந்த பெண்ணிடம் இப்போது வந்தவர் எங்கே எனக்கேட்க அவள் ஓர் அறையைச்
சுட்டிக் காட்டினாள் .இவள் போய்க் கதவைத்தட்ட ,கதவு திறந்தது.ஆனால் உள்ளே இருந்தது
அவள் கணவனல்ல.இவள் திரும்பும் போது பின்னிருந்து இருகைகள் பலமாகப் பிடிக்க மூக்கில்
ஒரு துணி அழுத்தப்பட்டது.
கண் விழித்தபின் உடலெல்லாம் வலி.தன்
நிலையை உணர்ந்தாள்.
அந்தப்பெண் வந்தாள்.சொன்னாள்”இங்கு நடந்த்தைக் காணொளியாகப்
பதிவுசெய்திருக்கிறோம். இனி நீ தொடர்ந்து ஒத்துழைக்வில்லை என்றால் அது உன்
குடும்பத்தாருக்கு அனுப்பப்படும். இப்போது உன்னை எங்கள் ஆள் வீட்டில் கொண்டு போய்விடுவான்.
நாளை காலை 11மணிக்கு வருவான் அவனுடன் வரவேண்டும்”
அவள் சென்றாள்.தான் தற்கொலை செய்து
கொண்டால் கதியற்று நிற்கப் போகும் தன் சிறுபெண்ணைநினைத்தாள்.படுகுழியில்விழுந்தாள்
”இதுதான் என் கதை!இந்தச்சாக்கடைக்கு நீ
ஏன் வந்தாய்?நீயும் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறாய்”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு
தட்டப்பட்டது.
அவள் பயந்து ஒதுங்கினாள்
அவன் திகைத்தான்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே
வந்தார்கள்.... போலீஸ்!
அவளை இருவர் பிடிக்க, இருவர் இவனிடம் ”வாய்யா
மன்மதராசா” என்றபடிக் கைகளைப் பிடித்தனர்
“சார் நான் அதுக்கு
வரவில்லை...நான் ”என்று
அவன்ஆரம்பிக்க அவர்கள் சிரித்துக் கொண்டே ”பின்ன
வேடிக்கை பாக்க வந்தயா” என்றனர்
அப்போது ஒரு ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
அவரைப் பார்த்த்தும் அவன் அவமானத்தால்
வெளிறிப் போனான்.
அவர் அதிர்ந்தார்.
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
அவன் அவரிடம் ஏதோ சொல்ல முயன்றபோது கையை
உயர்த்தி அவனைத் தடுத்து விட்டுப் ”போகலாம்” என்றார்.
அவன் குப்பையாய் வெளியேறினான்.
வீட்டுக்கு வந்ததும் அப்பா”சிவகுரு! அன்னைக்குப் பெண் பார்த்தோமே அவங்க
வீட்டிலிருந்து இப்பத்தான் போன் பண்ணினாங்க.நம்ம சம்பந்தத்தில அவங்களுக்கு
விருப்பமில்லையாம் ,அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டு இன்னைக்கு
மாத்திட்டாங்க. பெண்ணோட அண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்தான்
போன் பண்ணினாரு.நான் போய் நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்”
அவன் அவரைத் தடுத்தான்”வேண்டாம்பா.விட்டுடுங்க,போய்க்
கேக்கறது நமக்குத்தான் அவமானம்”
பாவம் சின்னப்பையன்!இனிமே கதை எழுதுவானா?!”
..............
..............
கதையைப் படித்து முடித்து விட்டுக் குமுதத்தை
கீழே வைத்தாள் தாரிணி.மனம் கனத்திருந்தது.கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.மீண்டும்
குமுதத்தைப் பார்த்தாள். கதாசிரியர் பெயர் சிவகுருநாதன்.மென்பொருள் துறையில் பணி
புரிபவர் என்ற அறி முகத்துடன் படமும் பிரசுரமாயிருந்தது.எப்படிப்பட்ட அநியாயம்
நிகழ்ந்து விட்டது?
ஒரு முடிவுக்கு வந்தாள்.தாய் தந்தை வெளியே
சென்றிருந்தனர்.
கைபேசியை எடுத்தாள்
“ஜி-2 காவல் நிலையமா?அண்ணா நான்தான்
தாரிணி.............”.பேசினாள்
இனி சிவகுரு சிக்குவதை சிவனாலும் தடுக்க
முடியாது!
டிஸ்கி:பாவம் வராகமிகிரர்!அதிர்ச்சி அடைந்து உறைந்து போயிருக்கிறார்.ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்!
செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015
சிவப்பு விளக்கும்,சின்னப்பையனும்!
சிவகுருநாதனைத் தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் தவறாமல் வார இதழ்களைப்
படிப்பவரா?
சமீபத்திய குமுதம் இதழ்களில் அவனது சில
கதைகள் வெளியாகியுள்ளன.
ஆம்.அவன் ஒரு மொட்டு விடும் எழுத்தாளன்
ஆனால் நீங்கள் அக்கதைகளைப்
படித்திருந்தால் கூட உங்களுக்கு அவன் பெயர் தெரிய வாய்ப்பில்லை.
ஏனெனில் அவன் சொந்தப்பெயரில் கதை
எழுதுவதில்லை.
அதற்கென அவன் சூட்டிக் கொண்ட புனைபெயர்—”சின்னப் பையன்”
வாசகர் கடிதத்தில் அவன் கதைக்குப்
பாராட்டும் கிடைத்திருக்கிறது.
இதற்கென்றே சில பேர்வழிகள் இருக்கத்தானே
செய்கிறார்கள்!
ஆனால் அவன் கதையைப் படித்த அவன் நண்பன்
ஒருவன்—ஒரு குறையைச் சுட்டிக் காட்டினான்
அதாவது அவன் எழுதும் விசயத்தில்
ஆழமில்லை என்பது.
முந்தைய கதையில் உண்மை நிகழ்வுக்குப் புறம்பான சில செய்திகளைச்
சுட்டிக் காட்டிய அவன் சொன்னான்”எடுத்துக் கொள்ளும் விசயத்தைப் பற்றிய அறிவு மிக
முக்கியம். எதையுமே அனுபவ பூர்வமாக எழுதும்போது அது முழுமையடைகிறது.’
சிவகுருவுக்கு அவன் சொன்னது சரியென்று
தோன்றியது.
இப்போது அவன் ஒரு சிவப்பு விளக்குப்
பெண் பற்றிய கதைக்கான கருவை யோசித்து வைத்திருந்தான்.
எனவே அப்படிப்பட்ட ஒரு பெண்ணைச்
சந்தித்து விவரம் சேகரிக்கலாம் என முடிவு செய்தான்
இந்த விசயத்தில் கில்லாடியான நண்பன்
ஒருவனின் உதவியை நாடினான்.
இரண்டு தளத்தில் அதை எழுத அவன் முடிவு
செய்திருந்தான்—ஹை கிளாஸ்,லோ கிளாஸ்
நண்பன் அவனை ஒரு புரோக்கரிடம் அறிமுகப்
படுத்த,சனிக்கிழமை அந்த சுப தினம் வந்தது.
உள்ளே போன பின் ஒரு மணி நேரத்துக்குள்
பேச வேண்டியதையெல்லாம் பேசி விட்டு வரும்படி அவன் அறிவுறுத்தினான்.
அவன் உள்ளே போனான்.
அவள் தயாராயிருந்தாள்
அவன் “நான் அதற்காகவரவில்லை.உன்னிடம்
சில விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”
அவள் அவனை ஒரு புழுவைப் போல்
பார்த்தாள்”அப்படியாளா நீ?கேளு” என்றாள்
அவர்கள் பேச ஆரம்பித்தனர்,
கதவு தட்டப் பட்டது.அவள் பயந்து ஒதுங்கினாள்
அவன் திகைத்தான்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்....
போலீஸ்!
அவளை இருவர் பிடிக்க, இருவர் இவனிடம் ”வாய்யா
மன்மதராசா” என்றபடிக் கைகளைப் பிடித்தனர்
“சார் நான் அதுக்கு வரவில்லை...நான் ”என்று
அவன்ஆரம்பிக்க அவர்கள் சிரித்துக் கொண்டே ”பின்ன
வேடிக்கை பாக்க வந்தயா” என்றனர்
அப்போது ஒரு ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
அவரைப் பார்த்த்தும் அவன் அவமானத்தால்
வெளிறிப் போனான்.
அவர் அதிர்ந்தார்.
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
அவன் அவரிடம் ஏதோ சொல்ல முயன்றபோது கையை
உயர்த்தி அவனைத் தடுத்து விட்டுப் ”போகலாம்” என்றார்.
அவன் குப்பையாய் வெளியேறினான்.
வீட்டுக்கு வந்ததும் அப்பா”சிவகுரு! அன்னைக்குப்
பெண் பார்த்தோமே அவங்க வீட்டிலிருந்து இப்பத்தான் போன் பண்ணினாங்க.நம்ம சம்பந்தத்தில
அவங்களுக்கு விருப்பமில்லையாம் ,அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டு இன்னைக்கு
மாத்திட்டாங்க. பெண்ணோட அண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் போன் பண்ணினாரு.நான் போய்
நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்”
அவன் அவரைத்
தடுத்தான்”வேண்டாம்பா.விட்டுடுங்க,போய்க் கேக்கறது நமக்குத்தான் அவமானம்”
(இது டிசம்பர் 2014 இல் இப்பதிவில் வந்த கதை’என்ன காரணத்தாலோ அப்போது அவ்வளவு வரவேற்பு இல்லை.எனவே மீள் பதிவு!)
வெள்ளி, ஜூலை 24, 2015
முடிவில்லாத முடிவுகள்!
புனேவுக்குப் போன முருகேசன் என்ற கதை மூன்று
பகுதிகளாக வெளி வந்தது
கதையை நான் முதலில் எண்ணியபடி முடித்திருந்தேன்.
இருவரின் கருத்து எனக்குள் ஓர் எண்ணத்தைத்
தோற்றுவித்தது
அக்கருத்துகள்…..
//I think
I can guess...probably he would meet his would b who might b on a similar
mission…வாசு//
//வெளியே நின்றது பூரணி என்று மட்டும்
சொல்லி விடாதீர்கள்!...ஸ்ரீராம்//
வியாழன், ஜூலை 23, 2015
புனேவுக்குப்போன முருகு.-கதையின் முடிவு
முன்குறிப்பு: பலர் முருகு தவறு செய்து
விடக்கூடாது என்ற கருத்தில் இருப் பதாகத் தெரிகிறது. ஆனால் முருகு ஒரு
நோக்கத்துக்காக,வீட்டில் பொய் சொல்லி விட்டுப் புனே வந்தவன் .அந் நோக்கம்
நிறைவேறாமல் போனால் அவன் மனரீதியாகப் பாதிக்கப்படக் கூடும். எனவே அவன் விருப்பம்
நிறைவேறட்டும்!ஒன்று செய்யலாம்.அவன் தவறு செய்யாமல் தப்பிப்பது போல் ஒரு முடிவும்
எழுதிப் பார்க்கலாம்.
இன்னொரு செய்தி.சிலர் நினைப்பது போல்
கதையில் திருப்பம்.மர்மம் எதுவும் இல்லை. முடிவில் ஒரு முரண்நகை இருக்கலாம்.அதுவே
சரி என்று எனக்குத் தோன்றியது.
இனி,கதைக்குள் போவோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)