ஒரு விருந்தில் இரு நண்பர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு விழுந்து விட்டார்கள்.
மற்றவர்கள் அவர்களைத் தூக்கி வந்து மின்தொடர் வண்டியில் ஏற்றி விட்டனர்.
போதை தெளிந்து விழித்த அவர்களில் ஒருவன் எதிரே அமர்ந் திருந்தவரிடம்”நீங்கள் யார்” என்று கேட்டான்.
அவர் சொன்னார்”நான் ஒரு விமான ஓட்டி”
உடனே அவன் மற்றவனிடம் சினத்துடன் சொன்னான்”பார் ,அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள்.விருந்து முடிந்ததும் மின்தொடர் வண்டியில் ஏற்றி விடுகிறோம் என்று சொல்லி விட்டு ஆகாய விமானத்தில் ஏற்றி விட்டு விட்டார்கள். இப்போது என்ன செய்வது?!”
தொடரும் தோழர்கள்
போதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஜூலை 26, 2015
வெள்ளி, அக்டோபர் 11, 2013
காலையும் நீயே!மாலையும் நீயே!!
நீ
இல்லாத என் காலைகள்
விடிதலே இல்லாத நாட்களின் தொடக்கம்
நிம்மதியில்லை,சுறுசுறுப்பில்லை
நாள் முழுதும் ஒரு வெறுமையே மிஞ்சும்!
நீ
எனக்கு வேண்டும் எழுந்தவுடன்
என் கையில் ஏந்த வேண்டும் உன்னை
உன்
மணத்தை நான் முகர வேண்டும்
மெல்ல மெல்ல,ருசித்து ருசித்து
என்
நா உன்னைச் சுவைக்க வேண்டும்
ஆகா! இதுவன்றோ சொர்க்கம்!
பேஷ்
பேஷ் ரொம்ப நன்னாருக்கே!!
(புரிந்ததா?!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)