தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 11, 2013

காலையும் நீயே!மாலையும் நீயே!!நீ இல்லாத என் காலைகள்
     
     விடிதலே இல்லாத நாட்களின் தொடக்கம்

நிம்மதியில்லை,சுறுசுறுப்பில்லை
     
     நாள் முழுதும் ஒரு வெறுமையே மிஞ்சும்!

நீ எனக்கு வேண்டும் எழுந்தவுடன்
      
     என் கையில் ஏந்த வேண்டும் உன்னை

உன் மணத்தை நான் முகர வேண்டும்
    
     மெல்ல மெல்ல,ருசித்து ருசித்து

 என் நா உன்னைச் சுவைக்க வேண்டும்
      
     ஆகா! இதுவன்றோ சொர்க்கம்!

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே!!

(புரிந்ததா?!)

30 கருத்துகள்:

 1. அடடா! காபிக்கு ஒரு கவிதை! அருமை! உண்மைதான் காபி குடிக்காமல் எனக்கும் வேலை ஓடாது!

  பதிலளிநீக்கு
 2. பேஷ் பேஷ்...! உங்களின் உற்சாகத்திற்கு காரணம் புரிந்து விட்டது ஐயா...! ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 3. நானும் இந்த ரகம்தான்
  என்வே எனக்கு இந்தக் கவிதை
  பேஷோ பேஷ்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பேஷ், பேஷ்.... காப்பின்னா நரசூஸ் காப்பிதான்... இந்த விளம்பரத்தையும் உசிலைமணியையும் மறக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறக்க முடியாது!
   உங்க லாயருக்குக் கூடக் காஃபி குடிச்சாத்தான் சுறு சுறுப்பா சிந்தனை ஓடும்!
   நன்றி ஜோச்ஃப் சார்

   நீக்கு
 5. பதில்கள்
  1. கவர்ந்தது கவராதது,பிடித்தது,பிடிக்காதது எல்லாவற்றுக்கும் கவிதைதான்!
   நன்றி அபயா அருணா

   நீக்கு
 6. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே!! (புரிந்ததா?!)

  புரியாமலா ! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா எழுதியிருக்கேள். உடனே கிளம்பிட்டேன், அதை மீண்டும் சுவைக்கத்தான். ;)

  பதிலளிநீக்கு

 7. ஆஹா! பேஷ், பேஷ் !. காப்பின்னா நரசூஸ் காப்பிதான்! அந்த சேலம் நரசூஸ் காபியின் மணமும் ருசியும் தனிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக்காலத்தில் மதுரையில் காலேஜ் ஹவுஸ் என்ற பெயரில் நரசுஸ் ஒரு ப்ளெண்ட் விற்பனை செய்து வந்தார்கள்-பீபரியும்,ப்ளாண்டேஷனும் கலந்த கலவை.சூப்பர்!
   நன்றி இளங்கோ சார்

   நீக்கு
 8. காப்பின்னா நரசுஸ் காப்பி தான்... :)

  நீங்க ஒரு காபி பிரியரா? தெரியாம போச்சே :))))

  பதிலளிநீக்கு
 9. உற்சாக பானம்!...........காப்பியும் தான்,ஹ!ஹ!!ஹா!!!

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப நல்லாருக்கு ஐயா தங்கள் கவிதை.

  பதிலளிநீக்கு
 11. பதிவர்கள் அனைவருக்கும் காப்பியும் பிடிக்கும் .பேஸ்ட்டும் பிடிக்கும் !

  பதிலளிநீக்கு
 12. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா புரியுதுங்க!!
  அழகு அய்யா. அருமையான வரிகள்.
  தலையணைக்கு ஒரு கவிதை எழுதியுள்ளேன். படிக்க எனது தளத்திற்கு வருகை தாருங்கள் அய்யா நேரமிருப்பின். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 13. ஐயாவுக்கு சூடான ஒரு காஃபி பார்சேல்

  பதிலளிநீக்கு


 14. கவிதையைப் படித்தபோது ‘கும்பகோணம் டிகிரி காபி’யை சாப்பிட்டது போன்ற உணர்வு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. உற்சாக பானத்திற்கு
  உன்னதக் கவிதை ஐயா..

  பதிலளிநீக்கு
 16. சூப்பர்! பாடுபொருள் அருமை! ஆனா எனக்கு... காலையும் நீயே, மாலையும் நீயே பிஸினஸ்லாம் கெடையாது. மத்தியானத்துலயும்கூட வேணுமாக்கும்!

  பதிலளிநீக்கு
 17. மார்னிங் ஷோனு நெனச்சா இப்படி காய்ச்சிட்டீங்களே?

  பதிலளிநீக்கு
 18. பதிவுலகத்தில இருந்துகிட்டு காபி தெரியலன்னா எப்படி ஐயா?

  பதிலளிநீக்கு