தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 05, 2013

பரல்கள்-மீண்டும் ஒரு லிமெரிக்




உங்கள் குரலை கனிவான மொழிகளைப் பேசுவதற்கும்
             காதுகளை மற்றவர்களின் குறையைப் பரிவுடன் கேட்பதற்கும்
             புத்தியை எதிலும் உண்மையை அறிவதற்கும்
             இதயத்தை அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்துங்கள்

....................................................................


முளகுமூடு பற்றி நேற்று எழுதினேன்.

குமரி மாவட்டத் தமிழ் கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழ்!
என் அம்மா அவர்களது மொழி புரிவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள்.
ஒரு நாள் பால்காரர் தாமதமாக வந்தார்.
என் அம்மா காரணம் கேட்க அவர்’பனி’ என்று சொன்னார்.
அம்மா உடனே ’ஆமாம் பனி அதிகமாகத்தான் இருக்கிறது ’என்று சொல்ல அவர் ’உங்களுக்கும் பனியா’என்று கேட்க ’பனி எல்லோருக்கும்தான்’ என அம்மா சொல்ல......ஒரே குழப்பம்தான்!
அவர் சொன்ன பனி... காய்ச்சல்,ஜுரம்.
அம்மா சொன்ன பனி ....கொட்டும் பனி!
ஆனால் நான் சில நாட்களிலேயே அவர்கள் தமிழில் பேச ஆரம்பித்து விட்டேன்...”சைக்கிள்ள ஒற்றக் கேறு கேறிச் சவட்டி” என்பது போல்!
இவ்வாறு மதுரைத்தமிழ்,நெல்லைத்தமிழ்,கொங்குத்தமிழ்,சென்னைத்தமிழ்,முகவைத் தமிழ் எல்லாமே பழகியிருக்கிறேன்!
.......................................................................
  

ஒரு லிமெரிக்
........................

அடுத்த வீட்டு ஆம்பிள  அவன்தான்அப்பு
 அவன்ஆசைப்பட்ட பொண்ணு  பேரு சுப்பு
 கவர யோசனை சொன்னான் கோண்டு
சொன்னபடி அடிச்சான் மட்ட செண்டு
இப்ப அவன்  பக்கத்தில போனாலே  ஒரே கப்பு! 

இதையே கொஞ்சம் மாத்தினா இன்னொரு லிமெரிக்!

 அடுத்தவீட்டு ஆளு சுப்பு
அவன் அருகே போனாலே கப்பு
யோசனை சொன்னான் கோண்டு 
அடிச்சான் மிக நல்ல சென்டு
எல்லாரும் இப்பக் கப்புச் சிப்பு!

A limerick is a short, humorous, often nonsense poem, especially one in five-lines with a strict rhyme scheme (AABBA)



7 கருத்துகள்:

 1. மதுரைத்தமிழ்,நெல்லைத்தமிழ்,கொங்குத்தமிழ்,சென்னைத்தமிழ்,முகவைத் தமிழ் எல்லாமே பழகியிருக்கிறேன்! - தமிழி பேச்சுகளுக்குப் பாராட்டுக்கள்...

  லிமெரிக்குகள் ரசிக்கவைத்தன...!

  பதிலளிநீக்கு
 2. தங்கள் லிமெரிக்
  என்னுள்ளும் ஆசையைத் தூண்டிப்போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. லிமெரிக் ரசித்தேன்.
  ஒரே சொல், இரு வேறு அர்த்தம் என்றால் குழப்பம்தான்.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் பனியைப்பற்றி எழுதியுள்ளதைப் பார்க்கும்போது நான் கேள்விப்பட்ட ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘பனியில் பனி செய்ததால் பனி வந்துவிட்டதாம்!’ (முதல் பனி தமிழ், இரண்டாம் பனி, தெலுங்கு மூன்றாம் பனி மலையாளம்.)

  லிமெரிக் வழக்கம்போல் சூப்பர்!

  பதிலளிநீக்கு