தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 23, 2013

கர்வா சௌத்நேற்று கர்வா சௌத் என்னும் பண்டிகை.

 இது வட இந்தியாவில் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல் நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர். இந்த உண்ணா நோன்பு உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொண்டாடப் படுகிறது. வட இந்திய நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தில் (தமிழ் ஐப்பசி) முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்த விழா இந்தித் திரைப் படங்களின் தாக்கத்தால் திருமணமாகாத பெண்களும் தங்கள் காதலர்கள்/ கணவராக வரித்தவர்களின் நலனுக்காக கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.

அன்று மாலை  விரதம் இருந்த பெண்கள் நிலவை சல்லடை வழியே பார்ப்பது ஒரு சடங்காகும்.

இது பற்றிய ஒரு கேலிச் சித்திரம்-முக நூலில் கண்டது...................


                  கர்வா சௌத் அன்று!                                                       மற்ற நாட்களில்!!

17 கருத்துகள்:

 1. விரதமிருக்கும் அன்னைய நாளிலாவது மரியாதை கொடுக்குறோமேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க ஐயா!

  பதிலளிநீக்கு
 2. அட! கர்வா ச்சவுத் பண்டிகையா?

  மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்களேன் நேரம் இருப்பின்!

  http://thulasidhalam.blogspot.co.nz/2005/10/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 3. அறியாத தகவல்! கேலிச்சித்திரம் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. முதன் முறை கேள்விப்படுகிறேன்

  பதிலளிநீக்கு
 5. கேலிச்சித்திரம் ....ஹா...ஹா...

  பண்டிகைபற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பண்டிகை..பெண்ணியவாதிகள் கையில் சிக்கி விடாதீர்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. அன்றைய தினம் கணவர்களுக்கு நிறைய செலவு! :)

  ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே செலவுகள் ஆரம்பித்து விடும்.....

  படம் - ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 8. இப்படி உண்மையெல்லாம் வெளியில இப்படி வெளிப்படையா சொல்லக்கூடாது

  பதிலளிநீக்கு
 9. பதிவின் மூலமே இப்படி ஒருபண்டிகை இருப்பதை அறிந்தேன்!

  பதிலளிநீக்கு
 10. ஹா ஹா ஹா பித்தன் ரிட்டர்ன்ஸ்

  பதிலளிநீக்கு
 11. விரதம் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
  படம் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 12. வளையல் பண்டிகை என்று சொல்லலாம் என்கிற அளவுக்கு வளையல்கள் கொட்டி கிடக்கும்.

  பதிலளிநீக்கு
 13. இப்படி ஒரு பண்டிகை இருப்பது
  தங்கள் பதிவின் மூலம்தான் தெரியும்
  படம் அருமை.
  முதல் படம் செயற்கையாக இருக்கிறது
  இரண்டாவது யதார்த்தம்.அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. சமங்கலி நோன்புற்று மண்சோறு சாப்பிட்டு தாலி பூசை எல்லாம் பண்ணுவாங்களே, அதானே. என்னவோ போங்க, வருடத்தில் ஒரு நாளாவது கணவன்மார் நிம்மதியா இருந்திட்டு போக எந்த அப்பாவியோ இப்படி பண்டிகையை உருவாக்கிவிட்டு இருப்பான். :P

  பதிலளிநீக்கு