தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 28, 2013

தீபாவளி இனிப்புகள்!முருகேசனுக்கு ஒரு மாதமாகவே சரியான வருமானமில்லை.

அன்றாடச் சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை.

இந்த நேரத்தில் தீபாவளி வேறு வருகிறது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகின்றன.

தீபாவளிக்கு மனைவிக்கு ஒரு விலை குறைந்த சேலையும்,தனக்கு ஒரு வேட்டியும் துண்டு மாவது வாங்குவது என்பதே இயலாத செயல் எனத் தோன்றியது.

தீபாவளிக்குப் பத்து நாட்களே பாக்கி.

அவன் மனம் சோர்ந்து போயிருந்த நேரத்தில்,அவனை நன்கு அறிந்திருந்த,பரமசிவம் அவனுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தார்.

 அவருக்குத் தெரிந்த வீட்டில் கொஞ்சம் தச்சு வேலை. முருகேசன் வேலையில் கெட்டிக்காரன்.
வேலை சுத்தமாக இருக்கும்.

கிடைத்த வேலை இரண்டு,மூன்று நாளையில் முடியும் வேலைதான்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

முருகேசன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

வெள்ளியன்று வேலையைத் துவங்கினான்.

இரண்டு நாட்களில் முடித்து,சனியன்று மாலை கூலியை வாங்கிவிட்டால்,மறுநாள் வேட்டி துண்டு சேலை ,ஏதாவது இனிப்பும் வாங்கி விடலாம்.

முதல் நாள் மாலையில் லேட்டாகவே அமர்ந்து வேலையைச் செய்தான்.

மறுநாளும் சீக்கிரமே வந்து மாலைக்குள் வேலையை முடித்து விட்டான்.

வீட்டுக்காரர் முருகேசனின் வேலையைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அவனுக்கான கூலி ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு, வீட்டில்செய்த இனிப்புகள் என்று சொல்லி ஒரு பொட்டலம் கொடுத்தார்,

அதை வாங்கி தனது ஜிப் போட்ட ரெக்ஸின் கைப்பையில் வைத்துக்கொண்டான்.

எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

மேல் சட்டையை அணிந்து கொண்டு நன்றி சொல்லிப் புறப்பட்டான்.

தி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவனது ஜிப் பையை.கையிடுக்கில் வைத்துக்கொண்டான்.

தெருவில் திருவிழாக்கூட்டம்.

அக் கூட்டத்தில் இடிபட்டு,நீந்தி,ஒருவாறாய் பேருந்து நிலையத்தை அடைந்தான்..

அவன் போக வேண்டிய பேருந்து இல்லை.

ஆசுவாசப் படுத்தி கொண்டு,கையிடுக்கில் இருந்த பையை எடுத்தான்.

அதிர்ச்சி அடைந்தான்.

பையின் பின்புறம் கிழிக்கப்பட்டு இருந்த்து.

அவன் உள்ளே வைத்தது இல்லை!

அடப்பாவி எவனோ அடிச்சுட்டானே என வருந்தினான்.

என்ன செய்வது?

பேருந்து வந்தது.

ஏறி அமர்ந்தான்.

சட்டைப் பையில் இருந்த சில்லறையை எடுத்துக் கொடுத்து சீட்டு வாங்கினான்.

வீடு போய்ச் சேர்ந்தான்.

மனைவியிடம் பையைக் காட்டி நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

அவளும் வருத்தப்பட்டாள்.

இருவரும் இத்தோடு போச்சே என ஆறுதல் அடைந்தனர்.

முருகேசன் இடுப்பு வேட்டியில் சுருட்டி இறுக்கி வைத்திருந்த பணத்தை எடுத்து மனைவி யிடம்  கொடுத்துச் சொன்னான்”நாளைக்கு சேலை, வேட்டி, கொஞ்சம் இனிப்பு வாங்கிடலாம் .அவங்க வீட்டில குடுத்த இனிப்பைச் சாப்பிட நமக்குக் கொடுத்து வைக்கல!”


31 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாவம் முருகேசன்!தீபாவளியை சிறிது மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டுமே
   நன்றி

   நீக்கு
 2. கதையின் எதிபாராத திருப்பம் நன்றாக இருந்தது.
  தொடர்ந்து கதை எழுதுங்கள் .

  பதிலளிநீக்கு
 3. தீபாவளிப் பண்டிகை சமயத்தில் நெரிசல் காரணமாக இப்படி நடப்பது சகஜமே! நாமதான் உஸாரா இருக்கணும். சரியாக எடுத்துச் சொன்ன சிறுகதை அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
 4. உழைத்த காசாவது பிழைத்ததில் எனக்கு ஓர் நிம்மதி ஏற்பட்டது., ஐயா. நல்ல கதை. நல்ல டிவிஸ்டு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எதிர் பார்க்காதே முடிவே தீபாவளி இனிப்பு!

  பதிலளிநீக்கு
 6. கதையை இயல்பாகவே முடித்திருக்கிறீர்கள்.

  மனநிறைவு தரும் முடிவு.

  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 7. நன்றாக இருந்தது,சிறுகதை!முடித்த விதம்,அருமை ஐயா!!!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா

  அருமையாக சொன்னீர்கள் முருகேசனின் பாடு பெரும்பாடுதான் பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. எதிர்பாராத திருப்பம்!
  தீபாவளி இனிப்பு மிகவும் சுவையாக இருந்தது ஐயா.

  பதிலளிநீக்கு
 10. நல்ல திருப்பம். ஸ்வீட்டை பிக் பாக்கெட் அடித்து திருடனும் சாப்பிட்டு மகிழ்ந்திருப்பான்! :)

  பதிலளிநீக்கு
 11. நல்ல சஸ்பென்ஸ்! திருடனுக்கு அல்வா!

  பதிலளிநீக்கு