தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 25, 2013

தலைகீழாக நின்றாலும் வயது மாறாது!உடன்பிறப்பே!

நீ அறிந்திடுவாயா?

பல்லாண்டுகளுக்கு முன்,குறிப்பாக 1944 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25 ஆம் நாளன்று திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலித் தெருவில் இருந்த ஒரு வீட்டில் ஒரு சாமானியன் பிறந்திட்டான்.

ஆயினும் அவன் பிறந்த நாளன்று மழை கொட்டியது,இடைவிடாமல்.

வேறு யாராவது புனிதன் அன்று அதே மண்ணில் பிறந்திட்டதன் காரணமாக அம்மழை கொட்டியிருக்கக்கூடும்!

சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது அவன் வாழ்க்கையில்?

வளர்ந்திட்டான்;படித்திட்டான்;பணியில் அமர்ந்திட்டான்;மணம் புரிந்திட்டான்,மக்களைப் பெற்றிட்டான்;பணி ஓய்வு பெற்றிட்டான் ;இன்றோவெனில்...பொழுது போக்குதற்கு என்னென்னவொ செய்திடுகிறான்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்திடுவது,மன நிறைவினை அளித்திடுவது,அவன் வலை மூலம் ஈட்டிய நட்புகள்; உன் போன்ற உடன் பிறப்புகள்!

இன்று அவன் வயது தலைகீழாக நின்றாலும் மாறாது

ஆம்.......

வயது…….

69.

இந்நாளில் இவன், இந்த நட்புறவுகள்,வாழ்நாள்  முழுவதும் தொடர்ந்திட வேண்டும் என வேண்டி நின்றிடுகிறான்!

அன்புடன்

சென்னை பித்தன்
 

44 கருத்துகள்:

 1. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா......

  பதிலளிநீக்கு
 2. சூப்பருஙகோ...! தலைகீழாக நின்றாலும் மாறாத வயதை அடைந்தும் உற்சாகமாய் எங்களுடன் பயணிக்கும் எங்கள் அன்பு செ.பி./ம.சொ. ஆகிய தங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. இனிய பிறந்த நாள்
  நல்வாழ்த்துக்கள்

  இதே இளமைத் துள்ளலுடன்
  இனிய வலைத் தொடர்புடன்
  நூறாண்டு தன்னைக் கடக்க
  அன்னை மீனாட்சியை
  வேண்டிக் கொள்கிறோம்...

  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பிரார்த்தனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி!

   நீக்கு
 4. அந்த சாமான்யன் என்னில் மூத்த சென்னை பித்தனுக்கு “ உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்றே வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாமானியனுக்கு! பல்லாண்டு நலமுடனும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 6. மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. ஆறு வயது பெரியவரே! நீவிர் நீடுழி வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  பதிலளிநீக்கு
 8. நெஞ்சம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா..
  குன்றாத வளமுடனும் நீங்காத நலமுடனும்
  நீடூழி வாழ்க..
  இறைவன் அருள் அருளாசியாய் பொழியட்டும்.

  பதிலளிநீக்கு
 9. அருமையா. தலைகீழாக மாறினாலும் மாறாத எண். பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. பல்லாண்டு வளமுடன் வாழ்க!

  பதிலளிநீக்கு
 11. தலைகீழாக நின்றாலும் மாறாத பிற்ந்த நாளுக்கு இனிய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 12. //ஆனால் இன்றைய வாழ்க்கையில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்திடுவது,மன நிறைவினை அளித்திடுவது,அவன் வலை மூலம் ஈட்டிய நட்புகள்; உன் போன்ற உடன் பிறப்புகள்!

  இன்று அவன் வயது தலைகீழாக நின்றாலும் மாறாது

  ஆம்....... வயது……. 69.//

  அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா.

  தங்கள் பிறந்த நாளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 13. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. உங்களுடைய இந்த புத்தாண்டு வெற்றிகரமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமைய வாழ்த்துக்கள். அடிக்கடி எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி ஜோசப் சார்;முயற்சி செய்கிறேன்!

   நீக்கு
 15. வளமுடன், நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்....
  - அப்பாஜி, கடலூர்.

  பதிலளிநீக்கு
 16. வளமுடன், நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்....
  - அப்பாஜி, கடலூர்.

  பதிலளிநீக்கு
 17. தங்கள் பிறந்த நாளுக்கு இனிய நல்வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 18. பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 19. மகிழ்ச்சி ஐயா...

  வாழ்க பல்லாண்டு இறைவனின் ஆசியுடன்....

  பதிலளிநீக்கு
 20. பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா..உடலுக்கு மட்டுமே 69 என்பதை யாம் அறிவோம்!

  பதிலளிநீக்கு
 21. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா... நேற்றே இந்தப் பதிவு எனக்கு டேஷ்போர்டில் வந்தது.... ஆனால் திறக்கவில்லை... இன்று இப்போதுதான் இணையம் வந்தேன், தாமதத்துக்கு வருந்துகிறேன்....

  பதிலளிநீக்கு
 22. அடடே.............அய்யாவுக்கு 69 ஆ?வாழ்த்துக்கள்!என்றும் இளமையுடன் வளம் + நலம் பெற இறைவன் அருளை வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 23. ஐயா வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...
  வயது கூடுவது என்பது வயதிற்கு மட்டுமே.... தங்களது செயல்களுக்கு அல்ல... தொடர்ந்து எழுதுங்க..

  பதிலளிநீக்கு